[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 07:32.28 AM GMT ]
முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் பௌத்த பிக்குகளும் சிங்களவர்களும் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
அகில இலங்கை பௌத்த சம்மேளன மண்டபத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் இன்று மோதலான சூழல் ஏற்பட்டுள்ளது. நாடு மற்றும் இனத்தின் எதிர்காலம் தொடர்பில் நாம் விடயங்களை தெளிவுப்படுத்த வேண்டும்.
பிக்குகள் மற்றும் சிங்களவர்களுக்கு எதிராக இடையூறுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதம் உள்ளது என்பது மிக தெளிவானது. பல பிரதேசங்களில் இவர்கள் உள்ளனர்.
பேருவளை சம்பவம் அவர்களின் செயற்பாடுகளில் ஒன்று. இந்த சம்பவங்களில் பௌத்த சிங்கள மக்களின் வீடுகளே அழிந்தன. எனினும் இதனை ஊடகங்கள் சரியாக வெளியிடவில்லை.
பிக்கு ஒருவர் தவறு செய்து மாட்டிக்கொண்டால், அவரது பெயர், கிராம், அவர் இருக்கும் விகாரை உட்பட விபரங்களுடன் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன.
போதைப் பொருள் விற்பனையாளர் மற்றும் குற்றவாளிகள் குறித்து இப்படி செய்திகளை வெளியிடுவதில்லை.
மன்னாரில் வில்பத்துவில் இன்று என்ன நடக்கின்றது. நாட்டில் சிங்கள பௌத்த மக்கள் அழிவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் பல நிறுவனங்கள் இதற்கு உதவி வருகின்றன.
பௌத்த பிக்கு நாட்டில் நடக்கும் இந்த அழிவுகள் பற்றி குரல் கொடுத்தால் அவர்கள் குற்றவாளிகளாக மாற்றப்படுகின்றனர் எனவும் மெதகம தம்மானந்த தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjt6.html
இனவாத அழிவால் முதியோரும் சிறுவரும் பாதிப்புற்றுள்ளனர்: சி.பாஸ்க்கரா - ராஜபக்ஷ அரசுக்கு எதிராக மக்கள் சக்தி போராட்டம்: ஐ.தே.கட்சி
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 07:41.13 AM GMT ]
இலங்கையின் சிறுபான்மையினர் மீதான இனவாத வன்முறை காரணமாக முதியோரும், சிறுவர்களும் பாரிய பாதிப்புக்கு உட்பட்டுள்ளனர். இவ் இரு சமுதாயமும் பாதுகாக்கப்பட வேண்டும்.
முதியோர்களுக்கு வாழ்வாதாரத்துடன் கூடிய கௌரவம் கிடைக்கப்பெற வேண்டும். சிறுவர்களுக்கு எதிர்காலத்தை நோக்கி நகர்வதற்கான சிறந்த திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் வாழும் முதியோர்கள் இலங்கைக்கும், கொழும்புக்கும் ஆற்றிய சேவையை மதிக்க வேண்டும். சேவையை மதித்து அவர்களின் வாழ்க்கை நிலையை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் அதனடிப்படையில் 1000 பிரசைகள் தெரிவுசெய்யப்பட வேண்டும் சிரேஸ்ட பிரசைகளை வாழ்த்துதல் என வாழ்த்தப்படல் எனும் பிரேரணை விவாதத்தில் கருத்துரைத்தார்.
கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் வாழும் முதியோர்கள் இலங்கைக்கும், கொழும்புக்கும் ஆற்றிய சேவையை மதிக்க வேண்டும். சேவையை மதித்து அவர்களின் வாழ்க்கை நிலையை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் அதனடிப்படையில் 1000 பிரசைகள் தெரிவுசெய்யப்பட வேண்டும் சிரேஸ்ட பிரசைகளை வாழ்த்துதல் என வாழ்த்தப்படல் எனும் பிரேரணை விவாதத்தில் கருத்துரைத்தார்.
ஜனநாயக மக்கள் முன்ணணி ஊடக செயலாளரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினரும் வீடமைப்பு நிலையியல்துறை தலைவருமான சி.பாஸ்க்கரா
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையின் இனவாத பேயின் இனவாத தாக்குதல் பலகாலமாக நடைபெற்று வருகின்றது. 1950 முதல் முள்ளிவாய்க்கால் வரை தமிழர்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. இப்போ முஸ்லிம்கள் மீது அண்மையில் மோசமாக நடைபெற்றுள்ளது. இவை கண்டிக்கப்பட வேண்டியது.
இதன் தாக்கத்தால் பல பிள்ளைகளை இழந்த பெற்றோர் வாழ்வாதாரம் இன்றியும் பெற்றோரை இழந்த பிள்ளைகள் எதிர்கால சபீட்சம் இன்றியும் உள்ளனர். இச்சபை எனது தமிழ் மொழி அமுலாக்கல் பிரேரணையை சகல தரப்பாதரவுடன் நிறைவேறியுள்ளது. இனவாதிகள் இல்லை என்பதை இதன்மூலம் காட்டியுள்ளனர். இந்நிலை சகல இடங்களிலும் ஏற்படவேண்டும்.
மாதா, பிதா குரு தெய்வம் என்று நாம் மாதா பிதா என்ற எமது தாய் தந்தயருக்கும் பின்பு குருவுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றோம் ஆனால் இப்போ இக்காலத்தில் எமது மூதாதயரை மதிக்கும் பழக்கம் இல்லை அவர்களை இப்போ Home என்ற இடத்தில் விடும் பழக்கத்தையும் கண்காணிப்பில் இல்லாமல் விடும் கலாச்சாரமும் உள்ளது. அண்மையில் கூட சீனாவில் தமது தாயை உணவின்றி கொல்ல முயன்ற சகோதரர்களை பார்த்தோம்.
இந்த நிலை மாற வெண்டும். ஐரோப்பிய நாடுகளில் மூதாதயரை பராமரிக்கும் அரச நடவடிக்கை போல் இலங்கையிலும் ஓர் நிரந்தர திட்டம் ஏற்பட வேண்டும். வாழும்போதே வாழ்த்த வேண்டும் முதியவர்களின் இரத்தத்தை உறுஞ்சித்தான் சமுதாயத்தில் நாம் வளர்ந்துள்ளோம்.
கலாசார திணைக்களம் கலைஞர்களை வாழும் போதே பாராட்டும் பரிசும் வழங்குவது போல் நாமும் முதியோரை வாழ்த்தி வாழும் வாழ்வாதாரத்திட்டத்தை வழங்க ஆவன செய்ய வேண்டும்.
முதியவர்களுடன் சிறுவர்களும் ஒரே பண்புடையவர்கள் அதனால் தான் இருவருக்கும் ஒரே நாளாக உலக நாடுகள் நாளை வரையறுத்துள்ளனர். இதனால் நாமும் முதியோரையும் சிறுவர்களையும் கவனிக்கும் நிரந்தர திட்டம் ஒன்று மேற்கொள்ள வேண்டும் என்றார் பாஸ்க்கரா.
முதியவர்களுடன் சிறுவர்களும் ஒரே பண்புடையவர்கள் அதனால் தான் இருவருக்கும் ஒரே நாளாக உலக நாடுகள் நாளை வரையறுத்துள்ளனர். இதனால் நாமும் முதியோரையும் சிறுவர்களையும் கவனிக்கும் நிரந்தர திட்டம் ஒன்று மேற்கொள்ள வேண்டும் என்றார் பாஸ்க்கரா.
ராஜபக்ஷ அரசுக்கு எதிராக மக்கள் சக்தி போராட்டம்: ஐ.தே.கட்சி
ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக ஒக்டோபரின் மக்கள் சக்தி போராட்டம் ஆரம்பிக்கப்படும் என ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அறிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு வாக்குச் சாவடியில் 300 வாக்குகளை பெறுவதை அடிப்படையாக கொண்டு தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுத்தால் தேர்தலில் வெற்றிபெற முடியும்.
இதனை அடிப்படையாக கொண்டு வாக்குச்சாவடி மட்டத்திலான 12 ஆயிரம் அமைப்பாளர்களை நியமித்து 30 உறுப்பினர்களை கொண்ட நடவடிக்கை குழுவொன்றை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் திட்டத்தை படிப்படியாக முன்னெடுத்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் சக்தி போராட்டம் தொடங்கப்படும் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjt7.html
அளுத்கம வன்முறை சம்பவங்களின் தடயங்களை மறைக்க கோத்தபாய நடவடிக்கை? -அமைச்சர்களைக் கண்டு பயப்படும் அரசாங்கம்
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 09:47.09 AM GMT ]
இரசாயன பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர், பாதுகாப்புச் செயலாளர் இந்த பணியில் இராணுவத்தினரை ஈடுபடுத்தியது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவங்கள் நடந்தமைக்கான சாட்சிய தடயங்களை அழிப்பதற்காகவா பாதுகாப்புச் செயலாளர் முன்கூட்டியே சுத்தப்படுத்தும் பணியில் இராணுவத்தினரை ஈடுபடுத்தினார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
தீவைப்பு சம்பவம் ஒன்று நடைபெற்ற பின்னர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இரசாயன பகுப்பாவாளர் சம்பவ இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வுக்கான பொருட்களை பெற்றுக்கொண்ட பின்னரே இந்த இடத்தை சுத்தப்படுத்த வேண்டும்.
எனினும் இந்த சட்ட நடவடிக்கை பின்பற்றப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இது சாட்சியங்களை மறைக்கும் முயற்சியாக என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இதனடிப்படையில், கடந்த ஜூன் 15 ஆம் திகதி அளுத்கம, தர்கா நகர் பிரதேசங்களில் ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட அழிவுகள் சுத்தப்படுத்தப்படுவதற்கு முன்னர் இரசாயன பாகுப்பாய்வு அறிக்கை பெறவேண்டும் எனவும் இதனால் சுத்தப்படுத்தும் பணிகளை நிறுத்துமாறும் மேலதிக நீதவான் அயேஷா ஆப்தீன் உத்தரவிட்டார்.
அதேவேளை சம்பவத்தின் கொல்லப்பட்டவர்கள் இருவரும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் எனினும் குறுகிய மரண விசாரணையில் வாளால் வெட்டப்பட்டதால் மரணம் சம்பவித்தது என்ற முடிவுக்கு வந்துள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து கொல்லப்பட்டவர்களின் மரணம் தொடர்பான விசாரணைகளை நடத்திய சட்ட வைத்திய அதிகாரிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
தொடர்புபட்ட செய்தி
அமைச்சர்களைக் கண்டு பயப்படும் அரசாங்கம்- ஐ.தே.கட்சி
வங்குரோத்து நிலைக்கு சென்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தற்போது தமது அமைச்சர்களுக்கே அஞ்சுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் தற்போது தமது அமைச்சர்களுக்கும் அஞ்சுகின்றது. இதன் காரணமாகவே சில அமைச்சர்கள் விரும்பியதை பேச அனுமதித்து விட்டு வேடிக்கை பார்க்கின்றது.
ஜனாதிபதி அண்மையில் பேருவளையில் நடத்திய கருத்தரங்கில் இதனை நன்றாக அறிந்து கொள்ள முடிந்தது.
தமது அமைச்சர்கள் அரசாங்கத்தை விமர்சித்தாலும் அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுக்க போவதில்லை என ஜனாதிபதி கூறியிருந்தார்.
இது தந்திரமாக வெளியில் தெரிந்தாலும் அதில் இருக்கும் உள்ளர்த்தம் வித்தியாசமானது.
அமைச்சர்கள் எதிர்க்கட்சி சென்று விடுவார்கள் என்று அரசாங்கம் பயப்படுகிறது. இதன் காரணமாகவே எதனையும் கூறுங்கள் நாங்கள் கோபிக்கவில்லை என்ற கதையை ஜனாதிபதி கூறியுள்ளார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கும் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள கதி. அரசாங்கம் தற்போது கடும் வங்குரோத்து நிலைக்கு சென்றுள்ளது.
இதன் காரணமாகவே ஜனாதிபதி தேற்றும் நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டு வருகிறார் எனவும் சம்பிக்க பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbju0.html
Geen opmerkingen:
Een reactie posten