தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 3 juli 2014

பாகிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்த வேண்டாம்!- மனித உரிமை கண்காணிப்பகம்

ஜனாதிபதிக்கான செலவுகள் 35 கோடி ரூபாவினால் அதிகரிப்பு
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 08:17.33 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் செலவுக்காக இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 34 கோடியே 64 லட்சத்து 64 ஆயிரத்து 210 ரூபா பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதியின் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட 856 கோடியே 91 லட்சத்து 70 ஆயிரம் ரூபா நிதிக்கு மேலதிகமாக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் ஜனாதிபதியின் இந்த வருடத்திற்கான மொத்த செலவு 891 கோடியே 56 லட்சத்து 34 ஆயிரத்து 210 ரூபா வரை உயர்ந்துள்ளது.
நிதியமைச்சு வெளியிட்டுள்ள வருட மத்தியிலான அரசாங்கத்தின் நிதி நிலைமை தொடர்பான அறிக்கையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் ஒதுக்கப்பட்ட நிதிக்கு அமைய ஜனாதிபதியின் ஒரு நாள் செலவு 2 கோடியே 34 லட்சத்து 77 ஆயிரத்து 178 ரூபா என்ற போதிலும் தற்போது அது 2 கோடியே 44 லட்சத்து 26 ஆயிரத்து 395 ரூபாவாக அதிகரித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbkx3.html
ஞானசார தேரர் புலிகளின் தலைவர்களை சந்தித்துள்ளார் - அமைச்சர் ராஜித சேனாரட்ன
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 09:22.01 AM GMT ]
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
புலிகளின் தலைவர்களை சந்திக்கச் சென்ற தேரரின் பயணத்திற்கான செலவுகளை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவே செய்திருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரர்,  புலிகளின் உறுப்பினர்களை சந்தித்த போது எடுத்துக்கொண்ட படங்கள் தன்னிடம் உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் புலிகளின் தலைவர்களை சந்திக்க ஞானசார தேரர் மேற்கொண்ட பயணத்திற்கு தான் பணத்தை செலவிட்டதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன வெளியிட்டுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் அதனை தான் முற்றாக நிராகரிப்பதாகவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbkx6.html
பாகிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்த வேண்டாம்!- மனித உரிமை கண்காணிப்பகம்
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 09:34.40 AM GMT ]
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான நிறுவனம் தலையீடுகளை மேற்கொள்ளும் வரை 142 பாகிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்துவதை தவிர்க்குமாறு மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அஹமதியா முஸ்லிம் ஜமாத் என்ற இஸ்லாமிய மத பிரிவின் 142 பாகிஸ்தான் பிரஜைகளை இலங்கை பொலிஸார் கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர்.
இவர்கள் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்படுவதன் மூலம் அவர்கள் அங்கு ஆபத்தை எதிர்நோக்கலாம் என மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
நீர்கொழும்பு பிரதேசம், பாகிஸ்தான் சிறுபான்மை இனங்கள் இலகுவாக வழக்கூடிய பிரதேசம் எனத் தெரிவித்துள்ள கண்காணிப்பகம், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறிய இலங்கை பொலிஸார் குறித்த பாகிஸ்தான் பிரஜைகளை கைது செய்ததாக குறிப்பிட்டுள்ளது.
மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் 2013ம் ஆண்டுக்கான அறிக்கையின் பிரகாரம் இலங்கையில் 1500 பாகிஸ்தான் அகதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாகிஸ்தான் பிரஜைகள், இனங்களுக்கு இடையிலான அச்சுறுத்தல் எனக் கூறியே இலங்கை அதிகாரிகள் அவர்களை நாடு கடத்தி வருகின்றனர் என மனித உரிமை கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் பில் பிரோலிக் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாகிஸ்தான் அரசாங்கமும் அந்நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியுள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbkx7.html

Geen opmerkingen:

Een reactie posten