தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 3 juli 2014

முகமாலை எலும்புக் கூடுகள் சோதியா, மற்றும் மாலதி படையணிகளைச் சேர்ந்தவர்களுடையது

புத்தரின் உருவத்தை பச்சை குத்திய பிரித்தானிய பெண்ணின் மனு விசாரணைக்கு ஏற்பு - மது அருந்தியவர்களை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடையாது: நீதிமன்றம்
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 10:01.47 AM GMT ]
இலங்கைக்கு வருகைதந்த பிரித்தானிய பெண்ணொருவரின் இடதுகையில் புத்தரின் உருவம் பச்சை குத்தப்பட்டிருந்த காரணத்தினால் அவர் நாடு கடத்தப்பட்டார்.
இதனை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.
உயர்நீதிமன்ற நீதியரசர்களான சலீம் மர்சூக், சந்திரா ஏக்கநாயக்க மற்றும் ஈவா வனசுந்தர ஆகியோர் முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனுவை பிரித்தானிய பிரஜையான நவோமி மிஷெல் கோல்மன்ஸ் தாக்கல் செய்திருந்தார்.
37 வயதான இந்த பெண், பிரித்தானியாவில் தாதி உத்தியோகத்தராக சேவை புரிவதாகவும், பௌத்த தர்மம் தொடர்பில் மிகுந்த பக்தி கொண்டிருப்பதாகவும், அதன் பிரகாரமே பச்சை குத்திக்கொண்டு, தியானம் புரிவதற்காக இலங்கைக்கு தாம் வருகை தந்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பெண் நாட்டிற்கு வருகைந்த பின்னர், கையில் பச்சைக் குத்தப்பட்டிருப்பதை அவதானித்த சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸார், அவரை கைது செய்து நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து தன்னை நாட்டிலிருந்து வெளியேற்றுமாறு நீதவான் உத்தரவிட்டதாகவும், சுற்றுலாப் பயணியாக வருகை தந்த ஒருவரை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு நீதவானுக்கு அதிகாரம் இல்லையென்றும் அந்த பெண் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டிருந்தபோது பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு தான் உட்படுத்தப்பட்டதாகவும், இதனால் தனக்கு ஏற்பட்ட மனக் கவலை மற்றும் துஷ்பிரயோகங்களுக்காக அரசாங்கத்திடமிருந்து பத்து மில்லியன் ரூபா இழப்பீடு பெற்றுத்தருமாறு நீதிமன்றத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மது அருந்தியவர்களை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடையாது - நீதிமன்றம்
மது அருந்தி விட்டு வீதியில் நடந்து செல்லும் நபர்களை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடையாதென பூகோட நீதவான் இந்திக காலிங்வங்ச தெரிவித்துள்ளார்.
மது அருந்தி விட்டு வீதியில் நடந்து சென்றனர் என்ற குற்றச்சாட்டில் கை செய்யப்பட்ட மூவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் இதனை கூறியுள்ளார்.
நீதவான் மூவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்துள்ளார்.
இந்த தீர்ப்பு குறித்து நீதவான் மேலும் தெரிவிக்கையில்,
மதுபான தேவையானவர்கள் அதனை அருந்தும் சுதந்திரம் உள்ளது. அது அவர்களின் உரிமை. இதனால் மது அருந்தி விட்டு வீதியில் செல்பவர்களை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை.
மது அருந்தி விட்டு, குழப்பம் ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொண்டால் அப்படியானவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தலாம் எனவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbjoz.html

முகமாலை எலும்புக் கூடுகள் சோதியா, மற்றும் மாலதி படையணிகளைச் சேர்ந்தவர்களுடையது
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 10:15.19 AM GMT ]
முகமாலையில் நேற்றும் இன்றும் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் விடுதலைப் புலிகள் இயக்க சோதியா மற்றும் மாலதி படையணியின் பெண் புலிகளது என இனம் காணப்பட்டுள்ளது.
முகமாலையின் முன்னரங்கப் பகுதியில் நேற்றும் இன்றும் சீருடைகள், ஆயுதங்கள் உள்ளிட்ட எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.
அதன்படி இன்று மீட்கப்பட்ட எச்சங்களில் பெண் புலிகளது இரண்டு, இலக்க தகடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
அவை சோதியா படையணியைச் சேர்ந்த 2784 மற்றும் மாலதி படையணியைச் சேர்ந்த 1190 தகட்டு இலக்கங்கள் ஆகும். 
இதன் அடிப்படையில் இவை சோதியா மற்றும் மாலதி படையணியைச் சேர்ந்தவர்களுடையது என இனங்காணப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbjo0.html

முகமாலையில் மீட்கப்பட்ட எழும்புக் கூட்டுத் தொகுதியில் பெண்ணின் உள்ளாடை !

[ Jul 03, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 5650 ]
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப்பகுதியில் நேற்று எலும்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு தற்போது இடம்பெற்று வருகின்றது. சர்வதச நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்படும் குறத்த கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டிருநத வேளை இன்று குறித் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதாக ஊழியர் ஒருவர் கருத்து தெரிவித்தார். குறித்த எலும்கூடுகள் பொலித்தீன் பையினால் சுற்றப்பட்ட நிலையில் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் ரவைகளும், விடுதலைப்புலிகள் பயன்படுத்தும் சீருடை தொப்பி ஒன்றும், சலவைத்தூள் உறைகளும் காணப்பட்டது. குறித்த எலும்புக்கூட்டுடன. பெண்ணினுடைய உள்ளாடையும் காணப்பட்டமையால் அது பெண்ணினுடையது என சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த இடத்தை நீதவான் பார்வையிட்டதன் பின்னர் இரசாயன பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
முகமாலைப் பகுதியில் மனித எலும்புக்கூட்டுத் தொகுதியொன்று மீட்கப்பட்டுள்ளது:- இணைப்பு 2 படங்களுடன்- முன்னைய போர் முன்னரங்கப்பகுதியான முகமாலைப் பகுதியில் மனித எலும்புக்கூட்டுத் தொகுதியொன்று இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மனிதநேய கண்ணி வெடியகற்றல் பணியில் ஈடுபட்டுவரும் ஹலோரெஸ்ட் நிறுவனத்தின் பணியாளர்களினாலேயே அது மீட்கப்பட்டள்ளது.
கைவிடப்பட்ட காவலரண் அமைந்திருந்த பகுதியில் பணிகளை மேற்கொள்ளும் போதே மேற்படி எலும்புக்கூடு இருப்பதை அவதானித்துள்ளனர்.
http://www.athirvu.com/newsdetail/336.html

Geen opmerkingen:

Een reactie posten