தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 26 juli 2014

பலவந்தமாக காணிகளை கைப்பற்றிக் கொள்ள அனுமதியளிக்கக் கூடாது: ஜனாதிபதி மஹிந்த



பலவந்தமான முறையில் காணிகளை கைப்பற்றிக்கொள்ள எவருக்கும் அனுமதியளிக்கக் கூடாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற மாகாண அபிவிருத்திக் கூட்டத்தில் பங்கேற்ற போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
சில நபர்கள் தங்களது பலத்தைப் பயன்படுத்தி 20 முதல் 25 ஏக்கர் வரையிலான காணிகளை பலவந்தமாக கைப்பற்றியுள்ளனர்.
இதற்கு அதிகாரிகள் அனுமதியளிகக்கக் கூடாது.
காணிகள் பலவந்தமான முறையில் கைப்பற்றப்படுவதனை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் அபிவிருத்தியில் பங்களிப்புச் செய்ய வேண்டும்.
அரசியல் பேதம் பாராட்டாது மக்களின் நலன்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளினதும் ஒத்துழைப்பு அவசியமானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcjw2.html

Geen opmerkingen:

Een reactie posten