பிரித்தானியா இலங்கை அதிபர் மஹிந்த ராஜப்கஷவிற்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படவில்லை என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானியாவிற்கு விஜயம் செய்திருந்த போது புலி ஆதரவாளர்கள் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக முதலாம் உலக யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து பொதுநலவாய நாடுகள் அமைப்பினால் நடத்தப்படும் நினைவு ஆராதணையில் ஜனாதிபதி பங்கேற்கப் போவதில்லை என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதனை அறிவித்துள்ளார். கலாச்சாரம், விளையாட்டு போன்ற துறைகளுக்கான பிரித்தானிய ராஜாங்கச் செயலாளருக்கு கடிதம் ஊடாக இதனை அறிவித்தள்ளார்,
கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் ஜனாதபிதியின் விஜயங்களின் போது கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பிரதிநிதிகள் கடந்த தடவை பிரித்தானிய சென்றிருந்த போது புலி ஆதரவாளர்கள், பிரதிநிதிகள் சென்ற வாகனங்கள் மீது போத்தல்களை வீசியும் வேறும் சில வன்முறையான வழிகளிலும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர் எனவும் அது தொடர்பில் பிரித்தானிய பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி கிலாஸ்கோ தேவாலயத்தில் இந்த விசேட ஆராதணை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் எதிர்ப்பை வெளியிடக் கூடும் எனவும், நிகழ்வுகளில் பங்கேற்பது பாதுகாப்பு சிக்கல்களை தோற்றுவிக்கும் எனவும் பிரித்தானிய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten