தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 25 juli 2014

டக்ளஸ்- சந்திரகுமார் மோதல் உச்சம்! கட்சி பிளவுபடலாம்!!

கிறிஸ்மஸ்தீவில் பெண்கள், குழந்தைகளின் நிலை மோசம்!



கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளின் புகலிடக் கோரிக்கையாளர்களின் பிள்ளைகளில் பெரும்பாலும் அனைவரும் நோய்வாய்ப்பட்டவர்களாக மற்றும் மன அழுத்தம் உள்ளவர்களாக காணப்படுகிறார்கள். அவர்களில் பலர் படுக்கையை நனைக்கிறார்கள். சிலருக்கு பேச்சாற்றல் பாதிக்கப்பட்டுள்ளதென அவர் கூறினார். கிறிஸ்மஸ் தீவில், 174 பிள்ளைகள் அடங்கலாக 1,102 புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளனர். தமது கடந்த மூன்று நாட்களில் நூற்றுக்கணக்கானவர்களை பேட்டி கண்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/77434.html

பலாலி இராணுவ முகாமின் பிரிகேடியர் தாக்குதலில் சிப்பாய் படுகாயம்..

யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமைச் சேர்ந்த பிரிகேடியர் ஒருவர் நடத்திய தாக்குதலில், அதே முகாமைச் சேர்ந்த லெப்டினன் ஒருவர் காயமடைந்துள்ளர்.
சம்பவத்தில் காயமடைந்த லெப்டினனுக்கு உயிராபத்து எதுவும் கிடையாது வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. என்ன காரணத்திற்காக மோதல் ஏற்பட்டது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. இதேவேளை, இவ்வாறான ஓர் மோதல் சம்பவம் இடம்பெறவில்லை என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். இராணுவ பிரிகேடியர் ஒருவர் செயலமர்வு ஒன்றுக்கு உரிய சீருடை அணியாது தாமதமாகி வந்த காரணத்தினால், இராணுவ லெப்டினன் அவருக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் வாய்த்தர்க்கமோ மோதலோ இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/77437.html

டக்ளஸ்- சந்திரகுமார் மோதல் உச்சம்! கட்சி பிளவுபடலாம்!!

கடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரகுமார் கிளிநொச்சியில் சுயாதீனமாக இயங்குவதாக ஆரம்பத்திலிருந்தே கட்சிக்குள் அதிருப்தியலைகள் ஏற்படத்தொடங்கியுள்ளது.
கட்சியின் இரண்டாம் மட்ட தலைவர்கள் பலர் சந்திரகுமாரிற்கு எதிரான புகார்களை தொடர்ச்சியாக டக்ளஸ் தேவானந்தாவிடம் சமர்ப்பித்து வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, சந்திரகுமாரை சற்று அடக்கிவைக்க முடிவு செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் இது பற்றி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இதன்போது இருவரிற்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. எனினும், ஈ.பி.டி.பி கட்சி தற்போது அதலபாதளாத்தில் வீழ்ந்து கிடப்பதால், அவசரப்பட்டு எந்த முடிவகளையும் எடுப்பதில்லை என்ற நிலைப்பாட்டிற்கு டக்ளஸ் தேவானந்தா வந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
எனினும், யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஈ.பி.டி.பியினர் சந்திரகுமாரின் உத்தரவுகளை செவிமடுப்பதை நிறுத்திக் கொண்டுள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் சந்திரகுமாரினை முன்னிறுத்த முற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/77440.html

Geen opmerkingen:

Een reactie posten