தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 25 juli 2014

கொழும்பில் பாஸ்போட்டில் பக்கங்களை மாற்றும் பெண்: கூண்டு சிக்கிய பிராடு கூட்டம் !

பலாலி இராணுவ முகாமின் பிரிகேடியர் தாக்கியதில் லெப்டினன் காயம் !

[ Jul 25, 2014 04:59:18 PM | வாசித்தோர் : 900 ]
யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமைச் சேர்ந்த பிரிகேடியர் ஒருவர் நடத்திய தாக்குதலில், அதே முகாமைச் சேர்ந்த லெப்டினன் ஒருவர் காயமடைந்துள்ளர். இரும்பு நாற்காலி ஒன்றினால் பிரிகேடியர், லெப்டினனை தாக்கியுள்ளார்.தாக்குதலில் காயமடைந்த லெப்டினன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவருக்கும் இடையிலான வாய்த்தர்க்கம் மோதலாக வெடித்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்த லெப்டினனுக்கு உயிராபத்து எதுவும் கிடையாது வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. என்ன காரணத்திற்காக மோதல் ஏற்பட்டது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. இதேவேளை, இவ்வாறான ஓர் மோதல் சம்பவம் இடம்பெறவில்லை என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். இராணுவ பிரிகேடியர் ஒருவர் செயலமர்வு ஒன்றுக்கு உரிய சீருடை அணியாது தாமதமாகி வந்த காரணத்தினால், இராணுவ லெப்டினன் அவருக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் வாய்த்தர்க்கமோ மோதலோ இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/562.html

லண்டனில் சிங்களவரை கொலைசெய்த இருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது !

[ Jul 25, 2014 05:05:03 PM | வாசித்தோர் : 1435 ]
இலங்கைப் பிரஜையொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களுக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 25 வயதான தவீச பீரிஸ் என்ற பீட்சா விநியோகஸ்தரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார்.
கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 27ம் திகதி செப்பில்டில், சவுத்தீ கிரசன்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 18 வயதான காசீம் அஹமட் மற்றும் 26 வயதான சம்சாசீ கான் ஆகியோருக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் குறைந்தபட்சம் 23 மற்றும் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளது. அஹமட் தாம் குறறச் செயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.athirvu.com/newsdetail/563.html

10 ஆயிரம் ரூபாவிற்காக பெண்ணைக் கொலை செய்த கச்சாய் ரவுடி !

[ Jul 25, 2014 05:13:12 PM | வாசித்தோர் : 1450 ]
பெண் ஒருவரிடம் கடன் பெற்ற கச்சாய்ப் பகுதியைச் சோ்ந்த ஒருவன் அக் கடனுக்காக அப் பெண்ணைக் தந்திரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் சாவகச்சேரிப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாவகச்சேரி நுனாவில் பகுதியைச் சோ்ந்த சூசைதாஸ் சாந்தினி வயது 52 எனும் பெண் கச்சாய் அல்லாரையைச் சோ்ந்த எட்வின் சுஜித் என்பவனுக்கு 65 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்ததாகத் தெரியவருகின்றது. கொடுத்த கடனை செலுத்தத் தவறிய சுஜித்தை பல தடவைகள் கடனைக் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார் சாந்தினி.
இவரது தொல்லையால் கோபமடைந்த சுஜித் , நேற்று அப் பெண்ணிடம் இன்று உனக்கு மொத்தக் கடனில் 10 ஆயிரம் ரூபாவைத் தருவதாகத் தெரிவித்து அப் பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி ஆட்கள் இல்லாத இடம் ஒன்றில் வைத்து கொலை செய்யும் நோக்கில் தலை, மற்றும் உடல் பகுதிகளில் கடுமையாகத் தாக்கியுள்ளான். அதன் பின் அப பெண் இறந்து விட்டார் என நினைத்த அவன் மயங்கிய நிலையில் இருந்த குறித்த பெண்ணை, வீதி விபத்தில் வாகனத்தில் மோதி தெருவில் கிடந்த பெண் எனத் தெரிவித்து சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைத்து விட்டுச் சென்றுள்ளான்.
அங்கு வைத்தியா்கள் சிகிச்சை அளித்து நேற்று மாலை யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பியும் பலனில்லாது பெண் இறந்துள்ளார். இந்த பெண்ணிற்கு விபத்தால் காயங்கள் ஏற்படவில்லை என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்ததை அடுத்து பொலிசார் மேற் கொண்ட விசாரணைகளிலேயே சுஜித் இப் பெண்ணை கடனுக்காகக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக சாவகச்சேரிப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டபோது குறித்த நபா் சட்டத்தரணி மற்றும் நகரசபை உறுப்பினா் ஆகியோரூடாக பொலிசாரிடம் சரணடைந்துள்ள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/564.html

கொழும்பில் பாஸ்போட்டில் பக்கங்களை மாற்றும் பெண்: கூண்டு சிக்கிய பிராடு கூட்டம் !

[ Jul 25, 2014 05:18:30 PM | வாசித்தோர் : 2070 ]
பிரித்தானிய வீசா மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கை தம்பதியினர் கைது செய்யப்பட்டு;ள்ளனர். ஆவணங்களை மோசடியாக தயாரித்துள்ளதாக குறித்த தம்பதியினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.குறித்த தம்பதியினர் கடவுச்சீட்டை சட்டவிரோதமான முறையில் திருத்தி அமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்டுகிறது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய வீசா பிரிவினர் கொழும்பு காவல்துறையினருக்கு இது குறித்து அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே வீசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட தகவல்களை கடவுச்சீட்டிலிருந்து நீக்கியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர். கடவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இருவரையும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த இருவரும் பிரித்தானியாவிற்கு பிரவேசிக்க பத்தாண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய குடிவரவு குடியகழ்வுச் சட்டங்களை மீறிச்செயற்பட எவருக்கும் அனுமதியளிக்கப் போவதில்லை என உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
போலியான ஆவணங்களை சமர்ப்பித்து வீசா விண்ணப்பம் செய்யக் கூடாது எனவும் அவ்வாறு செய்வதனால் பாதக விளைவுகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
http://www.athirvu.com/newsdetail/565.html

Geen opmerkingen:

Een reactie posten