[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 09:40.51 AM GMT ]
வந்தாறுமூலை - உப்போடை வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய கோபாலப்பிள்ளை ஐஸ்வர்யா என்ற மாணவி கடந்த மாதம், அதிகாலை கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
”தனவந்தர் ஒருவரது உதவியுடன் தான் உயர் கல்வியைத் தொடரப் போகிறேன். ஐந்து வருடங்களின் பின்னரே வீடு திரும்புவேன்”என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.
ஏறாவூர் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்;டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbjoy.html
பெண்ணொருவரை கொலை செய்த இருவருக்கு மரணதண்டனை விதிப்பு - வர்த்தக நிலையத்திற்குள் களவாக நுழைந்த பொலிஸ் சார்ஜன்ட் கைது
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 10:52.49 AM GMT ]
தங்காலைப் பகுதியில் தாயொருவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் மகன் மற்றும் மருமகனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1998ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் திகதி வலஸ்முல்லை - மோதரவான பகுதியில் 65 வயதான பெண்ணொருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் அவரது தாயார், நான்கு மகள்கள், மகன்மார் இருவர் மற்றும் மருமகன் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டனர்.
இவர்களில் குறித்த பெண்ணின் மகன் (47) மற்றும் மருமகன் (45) ஆகிய இருவருக்கு தங்காலை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களை எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வர்த்தக நிலையத்திற்குள் களவாக நுழைந்த பொலிஸ் சார்ஜன்ட் கைது
திருகோணமலை பழைய பொலிஸ் நிலையத்தின் நலன்புரி வர்த்தக நிலையத்திற்குள் களவாக நுழைந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் சங்கமித்த பொலிஸ் காலரணில் பணியாற்றி வந்ததுடன் பழைய பொலிஸ் உத்தியோகபூர்வ வீடமைப்பு தொகுதியில் வசித்து வந்துள்ளார்.
சந்தேக நபர் இதற்கு முன்னர் நலன்புரி வர்த்தக நிலையத்திற்கு பொறுப்பாக இருந்து வந்ததுடன் அதில் மேற்கொண்ட நிதி மோசடி காரணமாக அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
இன்று அதிகாலை நலன்புரி வர்த்தக நிலையத்திற்குள் ஒருவர் பிரவேசித்து விளக்கை எரிய செய்வதை கண்ட, பொலிஸ் உத்தியோகஸ்தர் அது குறித்து பொறுப்பதிகாரிக்கு அறிவித்ததை தொடர்ந்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுமதியின்றி உள்ளே நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் சார்ஜன்ட்டுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
எதற்காக சந்தேக நபர் அங்கு சென்றார் என்ற தகவலை பொலிஸார் வெளியிடவில்லை. சம்பவம் குறித்து திருகோணமலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbjo1.html
Geen opmerkingen:
Een reactie posten