தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 3 juli 2014

அளுத்கம வன்முறை சம்பவம் - மருத்துவ அதிகாரியை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு



புத்தளத்தில் மூன்று வர்த்தக நிலையங்களில் கொள்ளை- வவுனியாவில் 3 கிளைமோர் குண்டுகள் மீட்பு
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 03:57.13 PM GMT ]
புத்தளம் நகரில் அமைந்துள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் இனந்தெரியாத நபர்கள் இன்று கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவற்றில் ஒரு வர்த்தக நிலையத்தில் இனந்தெரியாத நபர்களால் கொள்ளையிடப்படும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
புத்தளம் – அநுராதபுரம் வீதியில் இரண்டாம் கட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு பல்பொருள் வர்த்தக நிலையங்களும், சிறிய கடையொன்றுமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் இப்பகுதியில் நடமாடிய காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி கமெராவில் பதிவாகியுள்ளது. குறித்த சந்தேக நபர்கள் பணத்தையே கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வவுனியாவில் 3 கிளைமோர் குண்டுகள் மீட்பு
வவுனியா சிதம்பரபுரம் வீதியில் உள்ள கல்வீரங்குளத்தில் இன்று மாலை மூன்று கிளைமோர் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக வவுனியா விசேட குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா சிதம்பரபுரம் வீதியில் உள்ள கல்வீரங்குளத்தில் இருந்து வயல் நிலங்களுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்த விவசாயி ஒருவர் குளத்தின் உட்பகுதியில் உள்ள பாசிப்புதர்களுக்குள் கிளைமோர் குண்டுகள் இருப்பதைக் கண்டு வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் தேடுதல் நடத்தியதில் மூன்று கிளைமோர் குண்டுகளும் அதற்கான சார்ஜர்களும் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
இரவு நேரம் ஆனதால் இப்பகுதியில் மேலும் குண்டுகள் இருக்கக் கூடும் எனக் கருதியும் அக்குளம் அமைந்துள்ள பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் நாளை அக்குண்டுகள் மீட்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbjp4.html
வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் இந்தியா விஜயம்
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 04:12.12 PM GMT ]
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்திய ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.
அடுத்த வாரமளவில் அமைச்சர் பீரிஸ் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் உள்ளிட்ட பல இராஜதந்திரிகளை சந்திக்க உள்ளார்.
மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டதன் பின்னர், பீரிஸ் மேற்கொள்ளும் இரண்டாவது விஜயம் இதுவாகும்.
பதவிப் பிரமாண நிகழ்வுகளின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் பீரிஸ் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbjp5.html
பாடசாலை பிரதி அதிபரை முழந்தாளிடச் செய்தார் குருநாகல் மேயர்
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 04:52.59 PM GMT ]
குருநாகல் மேயர் காமினி பேரமுனகே பாடசாலை ஒன்றின் பிரதி அதிபரை முழந்தாளிட செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குருநாகல் மலியதேவ பாடசாலையின் பிரதி அதிபரையே தமது அலுவலகத்துக்கு அழைத்து மேயர் முழந்தாளிட செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இடம்பெற்ற நாள் தெரியவரவில்லை.  எனினும் பாடசாலையில் தமது மகனை முழந்தாளிட செய்தமைக்கு தண்டனை வழங்கும் வகையிலேயே மேயர் பிரதி அதிபரை தண்டித்துள்ளார்.
ஏற்கனவே இவ்வறான சம்பவம் வடமேல் மாகாணத்தில் இடம்பெற்று ஆளும் கட்சி மாகாணசபை உறுப்பினர் ஒருவர் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbjp6.html
அளுத்கம வன்முறை சம்பவம் - மருத்துவ அதிகாரியை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 05:07.14 PM GMT ]
போலியான தகவல் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் மருத்துவ அதிகாரியை, நாளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு களுத்துறை நீதிமன்றத்தினால் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை வைத்தியசாலைச்  சேர்ந்த மருத்துவ அதிகாரிக்கே அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அளுத்கமை வன்முறையில் கொல்லப்பட்ட ஒருவரின் மருத்துவ அறிக்கையில், அவர் வெட்டுக்காயங்களால் மரணமானதாக குறித்த மருத்துவ அதிகாரியால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும் இன்று சட்டத்தரணிகள் குறித்தவரின் உடலில் வெட்டு காயங்கள் அல்ல. துப்பாக்கி சூட்டுக்காயங்கள் இருந்ததாக குறிப்பிட்டனர். எனவே இறந்தவரின் உடலை மீண்டும் தோண்ட வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
இந்தநிலையில் நாளையதினம் குறித்த மருத்துவ அதிகாரிகயை விசாரணை செய்த பின்னர் உடலை தோண்டுவதற்கு களுத்துறை நீதிவான் தீர்மானித்துள்ளார்.
இந்த சந்தேகத்தை ஏற்கனவே இலங்கையின் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் எழுப்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வெளியாரின் தலையீட்டால் மருத்துவர்கள் பிழையான வழியில் செயற்படுவதற்கு எதிராகவும் சட்டத்தரணிகள் பிறிதான வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbjp7.html

Geen opmerkingen:

Een reactie posten