முஸ்லிம் தீவிரவாதத்தை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது: புலமைசார் பௌத்த பிக்குகள்
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 05:29.03 PM GMT ]
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய குழுவின் உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
அளுத்கமை வன்முறைகள் தொடர்பில் பிக்குகள் குறைக்கூறாமல் வன்முறைக்கான அடிப்படை காரணிகளை கண்டறிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இலங்கையில் தீவிரவாதக்குழுக்கள் செயற்படுவதன் காரணமாக அதற்கு எதிராக பிக்குகள் குரல் கொடுத்தனர்.
தீவிரவாதக்குழுக்களுக்கு எதிராக அரசாங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டது. எனினும் இன்று அரசாங்கமும் எதிர்க்கட்சியும் பிக்குகள் மீது பயங்கரவாத முத்திரையை ஒட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இதன்காரணமாக சர்வதேசத்திலும் பௌத்தர்கள் பயங்கரவாதிகள் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதாக வண. மேதகொட அபெதிஸ்ஸ தேரர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை அமைச்சர் ராஜித சேனாரத்னவே பௌத்தர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு காரணமானவர் என்றும் தேரர் குற்றம் சுமத்தினார்.
முஸ்லிம் தீவிரவாதத்தை நாட்டுக்குள் அனுமதிக்கமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbjqy.html
பொதுபலசேனாவுக்கும் தமக்கும் உறவு இல்லை!- கோத்தா மீண்டும் மறுப்பு
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 11:29.22 PM GMT ]
இலங்கையின் தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று அளித்த விசேட செவ்வியிலேயே அவர் தமது மறுப்பை வெளியிட்டுள்ளார்.
குறுகிய அரசியல் நோக்கத்தை கொண்டவர்களே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர்.
எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அதன் பின்னணியில் தாம் இருப்பதாக கூறுகின்றனர் என்றும் கோத்தபாய குற்றம் சுமத்தினார்.
நாட்டில் காலத்துக்கு காலம் பிரச்சினையை உருவாக்கி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னால் நாட்டைச் சிக்க வைப்பதற்கு சில குழுக்கள் முயன்று வருகின்றன.
எனினும் தாம் இலங்கையின் சமாதானத்துக்காக பாடுபடுவதாக குறிப்பிட்டுள்ள கோத்தபாய மக்களை அசௌகரியப்படு;த்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbjqz.html
புகலிடக்கோரிக்கையாளர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள்!- இலங்கை உறுதியளிப்பு - நிரந்தர விசா கோருவோருக்கு புதிய சோதனை அறிமுகப்படுத்த மொரிசன் முயற்சி
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 11:43.53 PM GMT ]
இலங்கையின் அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகர் திஸர சமரசிங்க இந்த மறுப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவால் திருப்பியனுப்பபட்டதாக கூறப்படும் 153 தமிழ் அகதிகளும் இலங்கைக்கு திரும்பினால் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று சமரசிங்க குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், குறித்த அகதிகளில் குற்றவாளிகள் இருப்பின் அவர்கள் சாதாரண சட்டத்துக்கு கீழ் தண்டிக்கப்படுவர் என்றும் அவர் கூறினார்.
நிரந்தர பாதுகாப்பு விசா கோருவோருக்கு புதிய சோதனை அறிமுகப்படுத்த ஸ்கொட் மொரிசன் முயற்சி
அவுஸ்திரேலியாவிற்கு விசா இல்லாமல் வந்து, பாதுகாப்பு கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள் தொடர்பான பிரச்சினை மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்லக்கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன.
குடிவரவுச் சட்டத்தின் கீழ் அகதிகளாக நிர்ணயிக்கப்பட்டு நிரந்தர பாதுகாப்பு கோரி விண்ணப்பிக்கும் நபர்களுக்காக ‘தேசத்தின் நலன்கள்’ என்ற சோதனையை அறிமுகம் செய்யப் போவதாக குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் கூறியிருக்கிறார்.
சில அகதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு விசாக்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் செல்லுபடியற்றதென மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்து சில நாட்களுக்குள், அதனைத் தாண்டிச் செல்லும் முறை பற்றி திரு.மொரிசன் பிரேரித்திருக்கிறார்.
புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளுக்காக போராடும் டேவின் மாண் அவர்கள், மொரிசனின் நடவடிக்கை அசாதாரணமானதென வர்ணித்துள்ளார். இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் சாத்தியக்கூறுகளை அவர் கோடிட்டுக் காட்டினார்.
தமது தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப புதிய சோதனையை பிரயோகிக்கப் போவதாக திரு.மொரிசன் தெரிவித்தார்.
‘இது நாடாளுமன்றத்தின் தெளிவான விருப்பத்தையும், நாட்டின் சட்டவாட்சியையும் மீறுவதாகும்,’ என்று சட்டத்தரணி மாண் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா அரசாங்கம் அகதிகளை எப்படியாவது சுய விருப்பத்தின் பேரில் நாட்டை விட்டு அனுப்புவதையே குறிக்கோளாக கொண்டுள்ளது .
மொரிசனின் இத் திட்டமானது நடைமுறைச் சாத்தியமற்றது என மாண் மேலும் தெரிவித்துள்ளார்
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbjq0.html
Geen opmerkingen:
Een reactie posten