[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 12:57.33 PM GMT ]
கடந்த மாதம் 15 ஆம் திகதி ஏற்பட்ட மோதல்களில் இருவர் உயிரிழந்து 120 வீடுகள் அழிக்கப்பட்ட போதும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் அழைக்கப்படவில்லை என இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய, செயலாளர் அஜித் பத்திரண மற்றும் சங்கத்தின் உறுப்பினர் பந்துல வீரசிங்க ஆகியோர் மேலதிக நீதவான் அயேஷா ஆப்தீன் முன்னிலையில் இதனை தெரிவித்துள்ளனர்.
மோதல்களில் கொல்லப்பட்ட மொஹமட் ரில்வான் மற்றும் மொஹமட் முஸ்தீன் ஆகியோரை மரண விசாரணைகள் இன்று நடைபெற்ற போதே அவர்கள் இதனை சுட்டிக்காட்டியுள்ளனர்.
மரணத்திற்கு பின்னரான பிரேத பரிசோதனை மற்றும் இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து இந்த இரு அறிக்கைகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு மேலதிக நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbjpz.html
யாழ். பல்கலைக்கழகத்திற்கு புதிய மருத்துவ பீடம்: உயர்கல்வி அமைச்சர் தகவல் - யாழ்.பல்கலையில் 3 கட்டடங்கள் திறப்பு
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 01:02.36 PM GMT ]
கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியில் இன்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எவர் என்ன கூறினாலும் இலங்கையின் இரண்டாவது தனியார் மருத்துவக் கல்லூரி கண்டியில் ஆரம்பிக்கப்படும்.
தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு பொறியியல் பீடமும், பேராதனை பல்கலைக்கழகத்திற்கு முகாமைத்துவ பீடமும் பெற்றுக்கொடுக்கப்படும்.
இதனை தவிர ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் களனி பல்கலைக்கழகங்களுக்கு இரண்டு பொறியியல் பீடங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
அத்துடன் யாழ்ப்பாணம் மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகங்களுக்கு இரண்டு மருத்துவ பீடங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.பல்கலையில் 3 கட்டடங்கள் திறப்பு
யாழ். பல்கலையில் பரீட்சை மண்டபங்கள் 3 துணைவேந்தர் வசந்தி அரசரட்ணத்தினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது
கலை, வெளிவாரி பட்டப்படிப்புகள், முகாமைத்துவம் ஆகிய பீடங்களுக்குமான பரீட்சை மண்டபங்களே இவ்வாறு திறந்துவைக்கப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbjp0.html
பிரித்தானிய பிரஜையின் கொலை தொடர்பான தீர்ப்பு இரு வாரங்களில் வழங்கப்படும்: மேல் நீதிமன்றம்
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 02:25.17 PM GMT ]
வழக்கு விசாரணை தொடர்பான அனைத்து தரப்பினரும் தமது இறுதி வாதங்களை எதிர்வரும் 11 ஆம் திகதி முன்வைக்க அறிவிப்பை வெளியிட்ட போதே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரோஹினி வல்கம இதனை அறிவித்துள்ளார்.
வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தங்காலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சம்பத் சந்திரபுஷ்ப வித்தானப்பத்திரண உட்பட ஏனைய 5 சந்தேக நபர்கள் இன்று வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தனர்.
சட்டமா அதிபர் சார்பில் பிரகீத் சத்துரங்க வழக்கில் ஆஜராகியிருந்தார்.
2011 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி குராம் ஷேக் கொலை செய்யப்பட்டதுடன் அவரது காதலியான விக்டோரிய கூட்டாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார்.
இந்த சம்பவம் தங்காலை நேச்சர் சுற்றுலா விடுதியில் இடம்பெற்றது. சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட மா அதிபர் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbjp2.html
தமிழ்நாட்டில் காணாமல் போன இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியா சென்றார்களா?
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 03:24.03 PM GMT ] [ பி.பி.சி ]
தமிழக முகாம்களில் இருந்து 57 பேரும், முகாமுக்கு வெளியே கீழ்ப்புத்துபட்டு என்ற ஒரு கிராமத்தில் வசித்த 40 பேரும் ஜூன் மத்தியிலிருந்து காணாமல் போயிருப்பதாகவும், இவர்களும், இந்தப் படகில் போயிருக்கலாம் என்று சந்தேகங்கள் இருப்பதாகவும், தமது அமைப்பின் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளதாக, அந்த அமைப்பின் தலைவர் எஸ்.ஜி.சந்திரகாசன் தமிழோசையிடம் பேசுகையில் தெரிவித்தார்.
இது தவிர, இந்தப் படகில் மீதமுள்ளவர்கள் இலங்கையிலிருந்து நேரே வந்தவர்களாக இருக்கலாம் என்றும் சந்திரகாசன் தெரிவித்தார்.
இது ஒரு கணிப்பே தவிர, இது குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்க மேலும் பொறுத்திருக்க வேண்டும் என்றார் அவர்.
ஜூன் மாதம் 18ம் தேதி வாக்கில் இந்த முகாம்களில் இருந்தவர்களுக்கு செய்மதித் தொலைபேசி ( சட்டலைட் போன்) மூலம் அழைப்பு வந்ததாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்ததை வைத்துப் பார்க்கும் போது, இந்த அழைப்பு கடலில் இருந்து வந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுவதாக சந்திரகாசன் கூறினார்.
இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகள் பாதுகாப்பாக வாழ்ந்து வரும் நிலையில், இது போன்ற உயிராபத்தைத் தோற்றுவிக்கும் படகுப் பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு தமது அமைப்பு அவர்களுக்கு வலியுறுத்திவருவதாகவும் அவர் கூறினார்.
ஐநா மன்ற அகதிகள் நிறுவன அறிக்கை
அவுஸ்திரேலியாவுக்கு அகதித் தஞ்சம் கோரப் படகில் பயணம் செய்த 153 இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்து தனக்கு அதிகார பூர்வமாக தகவல் இல்லை என்று ஐ.நா மன்ற அகதிகள் நிறுவனம் கூறுகிறது.
ஆயினும், தஞ்சம் கோரிகளை ஏற்றி வரும் படகு ஒன்று நடுக்கடலில் இடைமறிக்கப்படும் சந்தர்ப்பங்களில், அடிப்படை அகதிகள் பாதுகாப்புக் கொள்கைகளுக்கு ஏற்றவகையில், அவர்கள் தங்களுக்கு சர்வதேச பாதுகாப்பு தேவை என்று கோரினால், அந்தக் கோரிக்கைகள், அவர்களை நடுக்கடலில் இடைமறிக்கும் நாட்டின் நிலப்பரப்பில் பரிசீலிக்கப்படவேண்டும் என்பதுதான் ஐ.நா மன்ற அகதிகள் நிறுவனத்தின் நிலைப்பாடு என்று அந்த அறிக்கை ஐ.நா மன்ற அகதிகள் நிறுவனம் கூறுகிறது.
தஞ்சம் கோருபவர்கள் பாதுகாப்பு குறித்த தேவைகளைப் பற்றி அவர்களிடம் முறையாகவும், தனித்தனியாகவும் கேட்கவேண்டும், அத்துடன் அவர்கள் தங்களது பாதுகாப்புத் தேவைகளைப் பற்றி விளக்கக் கூடிய அளவில் அமைந்த ஒரு வழிமுறையிலும் அவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று அது கூறியது.
இது போன்ற பாதுகாப்புப் பிரச்சினைகள் எழுப்பப்பட்டால், அவைகளை முறையாக பரிசீலித்து , அவர்கள் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படும் ஆபத்தையோ, அல்லது பாரிய மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாகும் ஆபத்தையோ எதிர்கொள்கிறார்களா என்பதை நியாயமான வழிகளில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அது கூறியது.
இந்த மாதிரி நடத்தப்படும் வழிமுறையைத் தவிர, எந்த ஒரு குறைந்த வழிமுறையும், ஏற்கனவே பலவீனமான தனிநபர்களை பெரும் ஆபத்துக்குள் சிக்கவைக்கும் அபாயம் இருப்பதாக அது கூறியது.
எந்த ஒரு தனி நபரையும், அவர் துன்புறுத்தப்படக்கூடிய ஆபத்து இருக்கும் ஒரு நாட்டுக்கு, அவர் விருப்பத்துக்கு மாறாக திரும்ப அனுப்பக்கூடாது என்பதுதான் சர்வதேச சட்டம் என்பதையும் ஐ.நா மன்ற அகதிகள் நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.
அவுஸ்திரேலிய அரசுக்கும், வேறு நாடுகளின் அரசுகளுக்கும், இது போன்ற நடுக்கடலில் இடமறிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆலோசனை தேவைப்பட்டால், ஐ.நா மன்ற அகதிகள் நிறுவனம் அதைத் தரத் தயாராக இருப்பதாகவும் அது கூறுகிறது.
அதே சமயத்தில் அவுஸ்திரேலிய அரசு நடுக்கடலில் உயிர்களைக் காப்பாற்ற எடுத்த நடவடிக்கைகள் பற்றியும் ஐ.நா அகதிகள் நிறுவனம் பாராட்டியிருக்கிறது.
மேலும், தஞ்சம் கோரிகள், அகதிகள் மற்றும் நாடற்றவர்கள் மேற்கொள்ளும் ஆபத்தான படகுப் பயணங்களுக்கு பலனளிக்கக்கூடிய மாற்றுவழிகளை உருவாக்குவது பற்றி மேலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அகதிகள் நிறுவனம் கூறியிருக்கிறது.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbjp3.html
Geen opmerkingen:
Een reactie posten