[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 03:41.46 PM GMT ]
யாழ். குருநகர் 5ம் மாடி பகுதியில் 9 வயது சிறுமிக்கு தனது மர்ம உறுப்பை காண்பித்ததாக கூறப்படும் இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.சிறுவர் நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ். குருநகர் கடற்கரை வீதியைச் சேர்ந்த சிறுமிக்கு குருநகர் 5ம் மாடியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் தனது மர்ம உறுப்பை காண்பித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் குறித்த சிறுமி பாடசாலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது மேற்படி இளைஞர் இவ்வாறு நடந்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த சம்பவத்தை சிறுமி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
சிறுமியின் பெற்றோர் யாழ்.பொலிஸ் நிலையத்தின் சிறுவர், பெண்கள் பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதனையடுத்து சந்தேக நபரான இளைஞன் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இளைஞனை எதிர்வரும் 8ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதிபதி க.ஜீவராணி உத்தரவிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcju2.html
வடமாகாண முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களின் மீளாய்வுக் கூட்டம்
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 03:47.42 PM GMT ]
மேற்படிக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், செயலாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேற்படி கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் அட்டவணைப்படுத்தப்படாத ஆளணி வெற்றிடங்கள், நேர்முகத் தேர்வின் ஊடாக நிரப்பப்படுகின்றது.
இது தொடர்பில் சகல உள்ளூராட்சி மன்றங்களினதும் நிலைப்பாடுகளும் ஆராயப்பட்டுள்ளதுடன், உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிரப்பப்படவுள்ள வெற்றிடங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேபோன்று உள்ளூராட்சி மன்றங்களின் உப விதிகள் உருவாக்குவது, குறித்து ஒதுக்கப்பட்ட நிதியில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பிலும் முதலமைச்சர் ஆராய்ந்துள்ளார்.
இதேவேளை உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கு எதிராக மக்கள் தெரிவித்துவரும் முறைப்பாடுகள், மற்றும் உள்ளூராட்சி மன்றங்களினால் விளக்கம் கோரி அனுப்பப்படும் கடிதங்களுக்கு தலைவர்கள் பதில் வழங்காமை, தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மேற்படி மீளாய்வு கூட்டம் முதலமைச்சர் தலைமையில் மூடிய அறைக்குள் இடம்பெற்றது என்பதுடன், ஊடகங்கள் புகைப்படம் எடுப்பதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcju3.html
கிளி. முல்லை. மாவட்ட மதுவரி உத்தியோகஸ்தர்கள் தமக்கு ஆயுதங்கள் வழங்குமாறு கோரிக்கை!
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 04:13.40 PM GMT ]
மேற்படி இரு மாவட்டங்களுக்கும் சேர்த்து ஒரு மதுவரி திணைக்களம் மட்டுமே உள்ளது.
எனவே இரு மாவட்டங்களிலும் மதுவை அடிப்படையாக கொண்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற் கு நடவடிக்கை எடுக்கும் பொழுது அச்சுறுத்தல்களும் அதிகளவில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மேலும் மதுவரி திணைக்கள அதிகாரிகளின் நடவடிக்கைகளின் போது பொலிஸாரின் உதவியினையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.
எனவே அலுவலர்களின் பாதுகாப்பினை கருதி ஆயுதங்களை வழங்குமாறு கிளி,முல்லை மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், கடந்த மாதம் இடம்பெற்ற கண்டாவளை பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் அதிகாரிகள் இவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcju4.html
பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸூம் முயற்சி?
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 04:51.46 PM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நியமிப்பது குறித்து, இரு கட்சிகளும் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வட மாகாண சபையில் மத்திய அரசாங்கத்தின் தலையீடு, ஆளுநராக மீளவும் ஜீ.ஏ.சந்திரசிறி நியமிக்கப்பட்டமை போன்ற காரணிகளால் அரசாங்கத்தின் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி அடைந்துள்ளது.
இதனால் சிறுபான்மை கட்சிகளை அணி திரட்டி, தனியாக பொது வேட்பாளர் ஒருவரை போட்டியில் ஈடுபடுத்த முயற்சி எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அளுத்கம - பேருவளை வன்முறைச் சம்பவம் உள்ளிட்ட அண்மைக்கால முஸ்லிம் விரோத செயற்பாடுகளினால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் நேரிடையாகவும் மறைமுகமாகவும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை போட்டியிடச் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவினை திரட்டும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்குமாறு வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் சம்மேளனம்! சந்திரிகா,சிராணி,மாதுளுவாவே தேரர் உட்பட பலரும் பங்கேற்பு
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் என வலியுறுத்தி, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில், வண.மாதுலுவாவே சோபித்த தேரரின் தலைமையில் நேற்று வியாழக்கிழமை, கொழும்பு நகர மண்டப கேட்போர் கூடத்தில் அணிதிரண்டனர்.
இதில், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, மக்கள் விடுதலை முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவரும் எம்.பியுமான கரு ஜெயசூரிய உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம்' என்ற தொனிப்பொருளில் நேற்றுக் கொழும்பில் இடம்பெற்ற சம்மேளனத்தில் கலந்துகொண்டே மேற்படி அரசியல் தலைவர்களும், சமயத் தலைவர்களும், சிவில் சமூகப் பிரதிநிதிகளும் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
கோட்டே ரஜமஹா விகாராதிபதி வண.மாதுலுவாவே சோபித்த தேரர் தலைமையிலான சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, கொழும்பு - 07 புதிய நகர மண்டபத்தில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு இந்தச் சம்மேளனம் நடைபெற்றது.
அரச பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் வண.அத்துரலிய ரத்ன தேரர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, திஸ்ஸ அத்தநாயக்க, ரவி கருணாநாயக்க, கயந்த கருணாதிலக்க, மங்கள சமரவீர, விஜேதாஸ ராஜபக்ச, அசோக அபேசிங்க உள்ளிட்ட மேலும் பல பல அரசியல்வாதிகளும் பங்கேற்றனர்.
அத்துடன், சட்டத்தரணிகளான ஜயம்பதி விக்ரமரட்ண, வெலியமுன மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் எனப் பலரும் இந்தச் சம்மேளனத்தில் கலந்துகொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcju5.html
ஏழு செய்தியாளர்கள் இலங்கை ராணுவத்தால் தடுத்து வைப்பு
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 09:42.17 PM GMT ]
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
யாழ்.குடாநாட்டிலிருந்து 16 ஊடகவியலாளர்கள் கொழு ம்பில் நடைபெறவுள்ள ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறைக்காக (வெள்ளிக்கிழமை) மாலை யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் கொழும்பு சென்றிருந்தனர்.
இந்நிலையில் யாழ்.நகரப் பகுதியிலி ருந்து புலனாய்வாளர்கள் ஊடகவியலாளர்கள் பயணம் செய்த வாகனத்தை பின்தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில் இரவு 7மணியளவில் மாங்குளம் பகுதியில் வைத்து குறித்த வாகனத்தை வழிமறித்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஆனையிறவில் மறிக்கப்பட்டபோது வாகனத்தை நிறுத்தவில்லை. எதற்காக நிறுத்தாமல் சென்றீர்கள் என வினவியுள்ளதுடன் வாகனத்தை சோதனையிடவும் முயன்றுள்ளனர். ஆனால் ஆனையிறவில் வாகனங்களை பதிவு செய்யும் நடைமுறை நிறுத்தப்பட்டு பல மாதங்களாகின்றன.
மேலும் தாங்கள் பயணித்த வாகனத்தை அவ்வாறு வழிமறிக்கவில்லை. எனவும் ஊடக வியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் பின்னர் ஓமந்தை சோதனைச் சாவடிக்குச் சென்றபோது அங்கே சிவில் உடையில் இரு பொலிஸாரும் 3படையினரும் வாகனத்தை சோதனையிடப் போவதாக கூறியுள்ளனர்(இந்தச் சோதனைச் சாவடியில் சிவில் உடையில் பொலிஸார் நிற்பதில்லை)
அவர்கள் சோதனையிட முயன்றபோது படைச் சிப்பாய் ஒருவர் வாகனத்தின் சாரதி ஆசனத்திற்கு கீழ் ஏதோ ஒன்றினை போட்டதை ஊடகவியலாளர் ஒருவர் பார்த்துள்ளார். அதனை என்ன? என பார்ப்பதற்கு முன்னர் அங்கே நின்ற பொலிஸார் சாரதி ஆசனத்திற்கு கீழ் இருந்து ஒரு சிகரட் பெட்டியை எடுத்து அதனுள் கஞ்சா இருப்பதாக கூறி வாகனத்தையும் ஊடகவியலாளர்களையும் ஒமந்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றுள்ளனர்.
பின்னர் ஊடகவியலாளர்கள் தாம் ஊடகவியலாளர்கள் என அடையாளப்படுத்திய பின்னர் சாரதியை தாம் கைது செய்யப் போவதாகவும் ஊடகவியலாளர்களை அங்கிருந்து செல்லுமாறும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலை யில் சாரதி கைதுசெய்யப்பட்டால் படைச்சிப்பாய் கஞ்சாவை வாகனத்திற்குள் கொண்டுவந்து வைத்தமையினை நாம் நீதிமன்றில் கூறுவோம் என ஊடகவியலாளர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் பொலிஸார் அங்கே சோதனையிட்ட படைச்சிப்பாயை தற்போது விசாரணைக்குட்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதும் ஊடகவியலாளர்கள் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் தொடர்ந்தும் நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
(2ம் இணைப்பு)நடு வீதியில் கைவிடப்பட்ட ஊடகவியலாளர்கள்
குறித்த சம்பவம் தொடர்பாக தற்போது கிடைத்துள்ள செய்திகளின்படி ஊடகவியலாளர்களை விடுதலை செய்ததுடன் அவர்களை காவல்துறை வளாகத்துக்கு வெளியே செல்லுமாறு பணிக்கப்பட்டு தற்போது நடு வீதியில் நிற்கின்றனர்.
இந்திலையில் வாகனத்தின் சாரதி தொடர்ந்து சிறீலங்கா காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சாரதியை விடுதலை செய்வதுடன் தொடர்ந்து தாம் பயணிக்க வேண்டும் எனக்கோரி தற்போது ஓமந்தை சிறீலங்கா காவல்துறை வளாகத்தின் முன்பாக ஊடகவியலாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcju6.html
Geen opmerkingen:
Een reactie posten