யாழ் ஊடகவியலாளர்கள் ஓமந்தைப் பொலிஸாரால் தடுத்து வைப்பு…
ஊடக பயிற்சி நெறிக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று (25.7.14) மாலை கொழும்பு நோக்கி வான் ஒன்றில் புறப்பட்ட 7 ஊடகவியலர்களே இவ்வாறு ஓமந்தை பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இவர்கள் பயணித்த வாகனம் மாங்குளம் பகுதியில் பொலிஸாரினால் தடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் பயணிக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து மீண்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/77445.html
விஜயின் கத்தி படம் வேண்டாம்! மாணவர்கள் போராட்டம்…
தமிழீழத்தில் சிங்கள அரசபயங்கரவாதிகள் மேற்கொண்ட இனப்படுகொலைகளை ஐ.நா மற்றும் உலக நாடுகள் கண்டித்து நீதி விசாரணை மேற்கொண்டிருக்கும் இச் சூழலில் சிங்கள அரசு போடும் எலும்புத்துண்டுகளைச் சுவைபார்க்கும் சில துரோகிகளைப் பயன்படுத்தித் தமிழ்நாட்டிலும் புலம்பெயர்ந்து வாழும் நமது தமிழினத்தின் மனங்களிலும் நமது கொடூரமான செயினை மூடி மறைத்து திசைதிருப்பி தமிழர்களும், நாங்களும் ஒன்றாக வாழ்கின்றோம் என்ற மாயையை தோற்றுவிக்கவே இவ்வாறான திரைபடங்களை அண்மைக்காலமாக சிங்களப் பேரினவாத அரசும், அதன் கைக்கூலிகளும் திட்டமிட்டு உருவாக்கி வருவதோடு தமிழின உணர்வுகளை தமிழர் தம் விடுதலை மீது வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கையையும் சிதைக்க முற்படுகின்றனர்.
ஆரம்பம் முதலே இப்படம் பற்றி எழுப்பிய சர்சைகளை உசாதீனப்படுத்தியது மட்டுமற்றி நாங்கள் தமிழர்களின் பணத்தை உறுஞ்சும் சாத்தான்களைப் போலும் எங்களுக்கு இதன்மூலம் வரும் பணம் தான் முக்கியம் தமிழர்களின் உணர்வுகள் முக்கியமா என்பதை தெளிவுபடுத்தும் ஓர் அசிங்கமான செயலாகவே படத்தை 80 விடுக்காடு படத்தை முடித்து வெளியிடத் தயாராகி உள்ளார் நடிகர் விஜயும், ஏ.ஆர் முருகதாசும்.
இச்செயற்பாடானது மாணவர்கள் மற்றும் இளைஞர்களாகிய எங்களுக்கு மிகுந்த மன வேதனைகளையும் அடக்கமுடியாத கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆகையால் இந்த நிலையினைக் கருத்திற்கொண்டு எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இப்படத்தினை
வெளியிடாமல் செய்ய உதவுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
வெளியிடாமல் செய்ய உதவுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வண்ணம்
முற்போக்கு மாணவர் முன்னணி
முற்போக்கு மாணவர் முன்னணி
http://www.jvpnews.com/srilanka/77448.html
இலங்கை கடற்படை வரம்பு மீறிச் செயற்படக் கூடாது – இந்தியா எச்சரிக்கை
இலங்கைக் கடற்படையினர் வரம்பு மீறிச் செயற்படக் கூடாது என இந்திய மத்திய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் மனிதாபிமான அடிப்படையில் நடாத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் கப்பல்கள் கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லைகளை மீறும் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவத்தில்லை என இணக்கப்பாடு ஏற்பட்டப்பட்டிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இதுவரையில் இலங்கைக் கடற்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்களினால் இந்திய மீனவர்கள் எவரும் உயிரிழக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/77453.html
Geen opmerkingen:
Een reactie posten