தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 26 juli 2014

157 அகதிகள் விடயத்தில் இந்திய தலையீட்டை ஏற்கமுடியாது!- அகதிகளின் சட்டத்தரணிகள்!

கறுப்பு ஜூலையை மறக்க முடியாது!- மில்லிபேன்ட்
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 11:37.17 PM GMT ]
1983ம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜூலை தொடர்பான நினைவுகள் இன்னும் மறையவில்லை என்று பிரித்தானிய தொழிற்கட்சி தலைவர் எட்வேட் மில்லிபேன்ட் தெரிவித்துள்ளார்.
1983ம் ஆண்டு இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களும், ஆண்களும், குழந்தைகளும் வன்முறையால் கொல்லப்பட்டனர். அதன் நினைவுகள் இந்;த மாதத்தில் நினைவுகூரப்படுகின்றன.
இந்த வன்முறைகளில் எத்தனை உயிர்கள் பலியாகின என்பது யாருக்கும் தெரியாது. எனினும் அதன் நினைவுகள் இன்னும் அழியவில்லை. அத்துடன் அதனை நாம் மறக்கவும் முடியாது என்றும் மில்லிபேன்ட் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையின் இறுதிப் போரில் இரண்டு தரப்புகளும் மேற்கொண்ட போர் மீறல்கள் தொடர்பில் யோசனை ஒன்றை நிறைவேற்றியுள்ளமையை அவர் வரவேற்றுள்ளார்.
இந்தநிலையில் குறித்த யோசனையை நிறைவேற்றுவதற்கு தாம் பிரித்தானிய பிரதமருக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப் போவதாகவும் சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படும் என்றும் மில்லிபேன்ட் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcju7.html
பொதுபல சேனாவின் முகநூல் கணக்கை முடக்குமாறு 50 லட்சம் முறைப்பாடு!
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 11:46.10 PM GMT ]
சிங்கள பௌத்த கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனா அமைப்பின் முகநூல் கணக்கை முடக்குமாறு கோரி 50 லட்சம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முகநூல் நிறுவனத்தின் நிர்வாகத்திடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர், ஜாதிக ஹெல உறுமயவின் சிரேஸ்ட தலைவர் சம்பிக்க ரணவக்க ஆகியோரின் முகநூல் கணக்கை முடக்குமாறு அமெரிக்காவில் அமைந்துள்ள முகநூல் நிறுவனத்திடம், 12 லட்சம் முறைப்பாடுகள் 24 மணித்தியாலத்திற்குள் செய்யப்பட்டுள்ளன.
குரோத உணர்வைத் தூண்டும் வகையிலான பதிவுகள் காணப்படுவதனால் கணக்கை முடக்குவதாக முகநூல் நிர்வாகம் ஞானசார தேரருக்கு அறிவித்ததாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சில கடும்போக்குவாத அமைப்புக்கள் பங்களாதேஸ் உள்ளிட்ட சில நாடுகளின் ஒத்துழைப்புடன் முகநூல் தொடர்பில் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளன.
இது தொடர்பில் முகநூல் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளேன்.
தேசியப் பிரச்சினைக்காக குரல் கொடுக்கும் ஊடகவியலாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் உள்ளிட்ட தரப்பினரை கடும்போக்குடைய தரப்பினர் அச்சுறுத்தி வருகின்றனர்.
புதிய முகநூல் கணக்கு ஒன்றை ஆரம்பித்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.  சிங்கள பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjvy.html
இராணுவ அதிகாரிக்கு சண்டே ஒப்சேவர் நட்டஈடு செலுத்தவேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பு மீண்டும் உறுதி
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 11:53.24 PM GMT ]
இலங்கையின் அரசாங்க ஆதரவு பத்திரிகையான சண்டே ஒப்சேவர், இளைப்பாறிய இராணுவ அதிகாரி ஒருவருக்கு நட்டஈட்டை செலுத்த வேண்டும் என்று தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் உறுதிசெய்துள்ளது.
இந்த தீர்ப்பின்படி சண்டே ஒப்சேவரின் முன்னாள் சிரேஸ்ட ஆசிரியர் அஜித் சமரநாயக்க, இளைப்பாறிய இராணுவ அதிகாரி பிரிகேடியர் எல் டி எஸ் விஜயசேகரவுக்கு 2 மில்லியன் ரூபாய்களை செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
1994ம் ஆண்டு ஏப்ரல் 13ம் திகதி பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்றின்மூலம் தமக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டதாக கூறி இளைப்பாறிய இராணுவ அதிகாரி தாக்கல் செய்த மனுவின் மீது ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
எனினும் அதனை ஆட்சேபித்து பிரதிவாதி தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjvz.html
ஆப்கானிஸ்தானிய பெண் ஐக்கிய நாடுகள் தூதரக வாயிலில் அமர்ந்து போராட்டம்!
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 12:25.12 AM GMT ]
ஆப்கானிஸ்தானிய பெண் ஒருவர் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகரக பாதுகாப்பு வாயிலில் அமர்ந்து கோரிக்கை ஒன்றை வலியுறுத்தி வருகிறார்
தமது கணவருக்கும் ஐக்கிய நாடுகள் அகதிகள் பேரவை இலங்கையில் அகதி அந்தஸ்தை வழங்கவேண்டு;ம் என்று அவர் கோரி வருகிறார்.
2012ம் ஆண்டு இலங்கைக்கு வந்த ஆப்கானிஸ்தானிய ரேஹானாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் அந்தஸ்தை வழங்கியுள்ளது. எனினும் அவரது கணவரான அஹமட்டுக்கு ஐக்கிய நாடுகள் சபை அகதி அந்தஸ்தை வழங்கவில்லை. இதனையடுத்தே ரெஹானா போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.
தமது கணவருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டால் மாத்திரமே தாம் ஐக்கிய நாடுகள் வளவில் இருந்து வெளியேறப் போவதாக ரெஹானா குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ரெஹானாவின் கணவருக்கு அகதி அந்தஸ்தை வழங்குவதில் ஏன் தாமதம் என்ற விடயத்தை ஐக்கிய நாடுகள் அலுவலகம் வெளியிடவில்லை.
இதேவேளை ரெஹானா ஆப்கானிஸ்தானின கந்தகாரில் வசி;ப்பவர் என்றும்; தாய் தந்தையர் அற்றவர் என்றும் அவரை வளர்ப்பு தாய், ஏற்கனவே நான்கு பெண்களை திருமணம் செய்த போதைவஸ்து வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்ததாகவும் அதன் பின்னரே ரெஹானா, அஹமட்டை சந்தித்து திருமணம் புரிந்து காபூலுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த போதைவஸ்து வர்த்தகர் மூலம் ரெஹானாவுக்கு ஆபத்து நேரலாம் என்ற அச்சத்திலேயே அவரும் கணவரும் இலங்கைக்கு வந்து ஐக்கிய நாடுகள் சபையில் அடைக்கலம் கோரியுள்ளனர் என்று கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcjv1.html
தடைக்கு பின்னரும் அமைச்சர் சம்பிக்க புதிய முகநூல் திறந்துள்ளார்!
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 12:53.04 AM GMT ]
இலங்கையின் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் முகநூலை பேஸ்புக் நிறுவனம் தடைசெய்துள்ள போதும் அவர் புதிய கணக்கு ஒன்றை திறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் வாசகர் பக்கம் ஒன்றையும் திறந்துள்ளார்.
தமது முன்னைய முகநூல் தடைசெய்யப்பட்டமை குறித்து அமைச்சர் பேஸ்புக் நிறுவனத்திடம் முறைப்பாட்டை செய்திருந்தார்.
இதற்கு பதில் அனுப்பியுள்ள பேஸ்புக் நிறுவனம், அமைச்சரின் நாடாளுமன்ற அடையாளமும் உறுதிப்படுத்தல் அடையாளமும் பொருந்தாமை காரணமாகவே அவருடைய முகநூல் தடைசெய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இதனையடுத்தே புதிய கணக்கை தாம் ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
முன்னைய முகநூலில் தமக்கு 21.000 வாசகர்கள் இருந்ததாகவும் தற்போது 1500 பேரே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே தம்மிடம் இருந்து முகநூல் முகவரியை போன்று போலியான முகவரிகள் திறக்கப்பட்டு சமூகத்தை வெறுப்பூட்டும் செய்திகளை வெளியிட்டு வந்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcjv3.html
157 அகதிகள் விடயத்தில் இந்திய தலையீட்டை ஏற்கமுடியாது!- அகதிகளின் சட்டத்தரணிகள்
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 01:07.53 AM GMT ]
அவுஸ்திரேலியாவில் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 157 அகதிகள் தொடர்பில் இந்தியாவுடன் அவுஸ்திரேலிய அரசாங்கம் மேற்கொள்ளும் முனைப்புக்கள் சட்டரீதியாக இருக்காது என்று அகதிகளின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த அகதிகள் வேறு இடம் ஒன்றுக்கு மாற்றப்படவுள்ளதாக வெளியான தகவலை நேற்று குடிவரவுத்துறை அமைச்சர் மொரிசன் உறுதிப்படுத்தியிருந்தார்.
சிட்னியில் செய்தியாளர்களை சந்தித்து இந்த முடிவை அறிவித்த அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் அவுஸ்திரேலியா கொண்டு செல்லப்படுபவர்கள் அங்குள்ள தடுப்புக்காவல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறினார்.
எனினும் அவர்கள் இந்திய அதிகாரிகளின் அடையாள சோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார் என்று அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று கூறுகிறது.
ஏற்கனவே இந்த அகதிகளில் இந்தியர்கள் இருந்தால் அவர்களை பொறுப்பேற்க இந்தியா உறுதியளித்திருந்ததன் அடிப்படையிலேயே இந்த சோதனை இடம்பெறவுள்ளதாக மொரிசன் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் அகதி அந்தஸ்து கோரிவோர் வள நிலைய நிறைவேற்று அதிகாரி கொன் கராபனகியோடிட்டீஸ் ( Kon Karapanagiotidis)  தமது கருத்தில் அகதிகளை அவுஸ்திரேலிய நிலப்பரப்புக்கு அழைத்து வரும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது எனினும் அதில் இந்திய தலையீடு கவலையளிக்கிறது என்று குறிப்பிட்டார்.
இவ்வாறு இன்னொரு நாட்டிடம் அகதிகள் விடயத்தை கையாள வழங்கும் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்தார்.
ஆள் ஒருவர் மூன்றாம் நாட்டில் பாதுகாப்பாக வாழ்ந்தவர் என்றால் அவர் அகதியாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டார்.  அதுவே சட்டநடைமுறையாகும். இதனை மற்றும் ஒரு அரசாங்கம் எவ்வாறு கையாளமுடியும் என்று கொன் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே இதற்கு எதிராக சட்ட ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் கொன் கராபனகியோடிட்டீஸ் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcjv4.html

Geen opmerkingen:

Een reactie posten