தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 22 juli 2014

கோத்தபாயவின் உதவியுடன் இராணுவ தலைமையகம் அமைப்பதற்கு காணி சுவீகரிப்பு: மக்களின் எதிர்ப்பினால் ஏமாற்றம்!


பொலிஸார் தொடர்பில் அதிகளவு விமர்சனங்களே வெளியிடப்படுகின்றது!- பொலிஸ் மா அதிபர்
[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 09:09.09 AM GMT ]
பொலிஸார் தொடாபில் அதிகளவு விமர்சனங்களே வெளியிடப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் எவ்வளவு சேவையாற்றினால் அவர்கள் விமர்சிக்கப்படுகின்றனர்.
பொலிஸார் குற்றச் செயல்கள் தொடர்பில் தீர்வுகளை வழங்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2012ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2013ம் ஆண்டில் குற்றச் செயல்களுக்கு தீர்வு வழங்குவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
பல்வேறு விமர்சனங்களுக்கு சிறந்த முறையில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களை பதவி உயர்வு வழங்குவதன் மூலம் ஊக்குவிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRWLckp2.html


பட்டப்பகலில் வீட்டில் உள்ளோரை கட்டிப்போட்டு பணம் கொள்ளை!- நால்வர் கைது! வாகனமும் கைப்பற்றல்
[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 09:16.14 AM GMT ]
பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து மாமியையும் மருமகளையும் நகர முடியாமல் கை கால்களைக் கட்டி வாயைப் பிளாஸ்ரர் போட்டு ஒட்டிவிட்டு, அங்கிருந்த அலுமாரியைச் சல்லடை போட்டு தேடி அதற்குள் இருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாவை கொள்ளை அடித்துக் கொண்டு வாகனத்தில் தப்பிச்சென்ற சம்பவம் யாழ். ஆனைக்கோட்டையில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் வாகனத்தில் தப்பிச்சென்ற கொள்ளைக் கோஷ்டியைச் சேர்ந்த நால்வரைக் கைது செய்த பொலிஸார், கொள்ளைக்குப் பயன்படுத்திய வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிலுள்ள ஆனைக்கோட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இக்கொள்ளை பற்றிக் கூறப்படுவதாவது:-
கடந்த வியாழக்கிழமை பட்டப்பகல் 12 மணியளவில் ஒரு வாகனத்தில் வந்த கொள்ளைக் கோஷ்டியினர் சற்று தூரத்தில் வாகனத்தை மறைவாக விட்டுவிட்டு ஆண்கள் இல்லாத நேரம் பார்த்து மேற்படி வீட்டிற்குள் புகுந்து மாமியையும் மருமகளையும் கட்டி போட்டு விட்டு அவர்கள் கூக்குரல் போடாத வகையில் வாயை பிளாஸ்டர் போட்டு ஒட்டி விட்டு, அங்கிருந்த அலுமாரியைச் சல்லடை போட்டுத் தேடி சுமார் ஒரு லட்சம் ரூபாவைக் கொள்ளையடித்துக் கொண்டு வாகனத்தில் ஏறித் தப்பிச் சென்று விட்டனர்.
இக்கொள்ளைச் சம்பவம் குறித்து  ஆனைக்கோட்டைப் பொலிஸில் புகார் செய்ததைத் தொடர்ந்து, விசாரணணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நால்வரைக் கைது செய்ததுடன், மேற்படி மருமகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட வானும் ஓமந்தையில் வைத்துக் கைப்பற்றப்பட்டது.
பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRWLckp3.html


சட்டவிரோத செய்மதி தொலைக்காட்சி நிறுவனமொன்றை நடத்தி வந்தவர் கைது
[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 10:39.55 AM GMT ]
சட்டவிரோதமான முறையில் செய்மதித் தொலைக்காட்சி நிறுவனமொன்றை நடத்தி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்திடம் உரிய அனுமதியை பெற்றுக் கொள்ளாது இந்த சட்டவிரோத செய்மதி கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தப்பட்டுள்ளது.
தலவாக்கலை நகரில் இந்த கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் இயங்கி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் 500 ரூபா மற்றும் 1000 ரூபா அறவீடு செய்து சேவையை வழங்கியுள்ளார். சந்தேக நபரின் நிறுவனத்தில் காணப்பட்ட சகல விதமான இலத்திரனியல் சாதனங்களையும் தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டப் பகுதிகளின் பிரதான நகரங்களில் இவ்வாறான கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும் சில அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டவை எனவும், ஏனையவை அனுமதி பெற்றுக்கொள்ளாது சட்டவிரோதமாக இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyHRWLckp4.html


உலகப் போதைப் பொருள் மையமாக இலங்கை மாற்றம்
[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 10:59.12 AM GMT ]
உலகப் போதைப் பொருள் மையமாக இலங்கை மாற்றமடைந்துள்ளது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்குள் போதைப் பொருள் கொண்டு வரும் முக்கியஸ்தர்கள் யார், பிடிக்கப்பட்ட போதைப் பொருளுக்கு என்னவாயிற்று? இவை கோதுமை மாவாக மாறுகின்றனவா?
போதைப் பொருள் கடத்தலுடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக கடுமையான குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது. குற்றச்செயல்கள் தொடர்பில் உலகம் உன்னிப்பாக அவதானிக்கின்றது.
போதைப் பொருள் கடத்தலுடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக அரசியல்வாதிகளே ஒப்புக்கொண்டுள்ளனர்.
போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சிறிய சிறிய நெத்தலிகளே கைது செய்யப்படுகின்றனர்.
சூறா போன்ற முக்கிய மீன்கள் கைது செய்யப்படுவதில்லை. கொள்கலன் கணக்கில் பிடிபடும் போதைப் பொருட்களுக்கு என்ன நேர்கின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்திற் கொண்டே இந்தக் கேள்விகளை கேட்க நேரிடுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRWLckp5.html


கோத்தபாயவின் உதவியுடன் இராணுவ தலைமையகம் அமைப்பதற்கு காணி சுவீகரிப்பு: மக்களின் எதிர்ப்பினால் ஏமாற்றம்
[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 11:29.42 AM GMT ]
யாழ் தென்மராட்சி எழுதுமட்டுவாள் பிரதேசத்தில் இராணுவத்தினரால் காணி அபகரிப்புக்காக முயற்சி செய்த வேளை பொதுமக்களின் போராட்டத்தினால் அம் முயற்சி கைவிடப்பட்டுள்ளது.
யாழ்.தென்மராட்சி- எழுதுமட்டுவாள் பகுதியில் தம்பிராசா மகேஷ்வரி என்பவருக்குச் சொந்தமான 50ஏக்கர் நிலத்தை இலங்கை இராணுவத்தின் 52வது படையணி தலமையகம் அமைப்பதற்காக சுவீகரிப்புச் செய்வதற்கு அளவீடு செய்ய நில அளவையாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் இன்றைய தினம் காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கடுமையான எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.

மேற்படி பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான 50ஏக்கர் நிலத்தில் இலங்கை இராணுவத்தின் 52வது படைத்தலமையகம் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டிருந்தது. இந்த படைமுகாம் அமைக்கப்பட்ட பொழுது அந்த நிலத்தை தாம் விலைக்கு வாங்கிவிட்டதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபகஷ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த நிலம் தனியார் ஒருவருக்குச் சொந்தமானது என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது. குறித்த பகுதியில் 2 வருடங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கியிருந்தனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்த படையினர் கடந்த 2012ம் ஆண்டு தொடக்கம் இந்தக் காணிக்குள் செல்வதற்கு காணி உரிமையாளருக்கு அனுமதி மறுத்திருந்தனர்.
இதேவேளை படையினரின் இந் நடவடிக்கையினை எதிர்த்து காணி உரிமையாளர்கள் பல இடங்களில் முறைப்பாடு தெரிவித்திருந்த போதும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இந்நிலையில் படையினரின் தேவைக்காக குறித்த காணியை சுவீகரிக்கப் போவதாக நில அளவையாளர்கள் மூலம் காணி உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் குறித்த காணியை இன்றைய தினம் அளவீடு செய்யப் போவதாகவும் காணி உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் இன்றைய தினம் காலை 9மணிக்கு காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அப்பகுதியில் கூடியிருந்த நிலையில் 9.30மணிக்கு நில அளவையாளர்கள் அந்தப் பகுதிக்கு வந்திருந்தனர்.
இதனையடுத்து மக்களும் அரசியல் தலைவர்களும் தமது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தனர். அதனையடுத்து கொடிகாமம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து நிலமையினை சீர்செய்ய முனைந்த போதும் அது வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில் காலை 11.45 மணியளவில் நில அளவையாளர்கள் காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கையினை கைவிட்டு சென்றுள்ளனர்.
மேலும் குறித்த காணியை விடுவிப்பதாக கூறி கடந்த ஆண்டு யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு காணி உரிமையாளர் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் யாழ்.நகரில் உள்ள பெருமாள் கோவிலுக்கு அருகில் காணி உரிமையாளர் அழைக்கப்பட்டு அவரிடம் சிங்களத்தில் எழுதப்பட்ட கடிதத்தில் கையொப்பம் பெறப்பட்டுள்ளது.
இதேபோல் மேற்படி தம்பிராசா மகேஷ்வரிக்குச் சொந்தமான காணி 50 ஏக்கர்களாகும்,  எனினும் சுவீகரிப்பு பிரசுரத்தில் 40ஏக்கர் என குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்நிலையில் குறித்த காணியை தன்னுடைய 5 பெண் பிள்ளைகளுக்கும், 3 பேரப்பிள்ளைகளுக்கும் சீதணமாக வழங்கி விட்டதால், தன்னிடம் அந்தச் சொத்து ஒன்று மட்டுமே இருப்பதாகவும் கூறி காணி உரிமையாளர் இன்றைய தினம் கதறியழுது நியாயம் கேட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten