தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 22 juli 2014

அமெரிக்காவின் புதிய படைப்பு அதனை வேவு பார்த்த சீனா !


நீரிலும் நிலத்திலும் பயணிக்கக் கூடிய புதிய ரக வாகனமொன்றை தயாரித்துள்ளது அமெரிக்க படை. கடல் சுவர்கள் உள்ளிட்ட தடைகளைத் தாண்டி மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கக் கூடிய வகையில் இந்த வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது. சில்லுகளுக்குப் பதில் சங்கிலி போன்ற அமைப்பைக் கொண்டதாக இது அமைக்கப்பட்டுள்ளது. சில்லு போன்ற அமைப்பு சுழலும்போது அது துடுப்பாகச் செயற்பட்டு நீரை எதிர்நோக்கித் தள்ளும். இதனை விசையைக் கொண்டு இந்த வாகனம் முன்னோக்கி நகர்த்தப்படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எம்1ஏ1 ரக யுத்த தாங்கிகளை அல்லது 200 தொன் எடையை ஏற்றிக்கொண்டு மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் இதனால் நீரில் பயணிக்க முடியும். 84 அடி நீளமும் 34 அடி உயரத்தையும் கொண்டது.
இதனை முதன் முறையாக அமெரிக்கா பரிசோதித்து பார்த்த வேளை, அவ்விடத்தில் ஜப்பானிய கடற்படையினரும் பிரசன்னமாகி இருந்தார்கள். அருகே அமெரிக்காவின் கடற்படை கப்பல் ஒன்றும் தரித்து நின்றது. சில நாடுகள் இணைந்து இந்த அமெரிக்க கண்டு பிடிப்பு பரிசோதனைகளை நடத்திய வேளை, அவ்விடத்திற்கு வந்த சீனாவின் அதி நவீன வேவு பார்க்கும் படகு ஒன்று, அமெரிக்காவின் கண்களில் மண்ணை தூவிவிட்டு, குறித்த அந்த இடத்தை பக்காவாக வேவுபார்த்துச் சென்றுவிட்டது. சுமார் 2 நாட்கள் கழித்தே சீனாவின் படகு ஒன்று அவ்விடத்திற்கு வந்து சென்ற விடையம் அமெரிக்காவுக்கு தெரியவந்துள்ளது. அதுவும் சட்டலைட் புகைப்படங்களை வைத்தே, இப்படகு அவ்விடத்திற்கு வந்து சென்றுள்ளது என அமெரிக்கா கண்டு பிடித்துள்ளது.
இது இவ்வாறு இருக்க, சில நாடுகள் கூட்டாக இணைந்து தான் இந்த ஒத்திகையைப் பார்த்தார்கள் என்று நாம் கூறினோம் அல்லவா ? அன் நாடுகளின் வரிசையில் சீனாவும் உள்ளது. ஆம் குறிப்பிட்ட அந்த இடத்தில் சீன அதிகாரிகளும் இருந்துள்ளார்கள். ஆனால் அவர்கள் எப்படி இதனை போட்டோ எடுக்க முடியும் ? அவர்கள் அப்படியே சாவகாசமாக பேசிக்கொண்டு, இந்த புதிய கண்டு பிடிப்பை பார்த்துக்கொண்டு இருக்கும்போதே, அவர்கள் நாட்டு உளவு பிரிவு அதனை வேவுபார்த்துவிட்டது. இது அமெரிக்காவை எரிச்சலூட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கா தனது கடும் கண்டனத்தை, தூதுவர்கள் மூலமாக ரகசியமாக சீனாவுக்கு தெரிவித்துள்ளது என்ற செய்தியை ஜப்பான் நாட்டு ஊடகம் ஒன்று நாசுக்காக வெளியிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten