நாடாளுமன்ற குழுவில் இணையுமாறு ஜனாதிபதி, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கவேண்டும்!- வாசு
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 02:55.58 AM GMT ]
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு அரசாங்கம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் இணக்கமான பேச்சுவார்த்தை அவசியம் என்று குறிப்பிட்டார்.
இந்த பேச்சுவார்த்தைக்காக புலம்பெயர்ந்தவர்கள் நிதியளிக்க தேவையில்லை.
அதேநேரம் புலம்பெயர்ந்த தமிழர்களும் தற்போது பல கூறுகளாக பிரிந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkq1.html
புகலிடக் கோரிக்கையாளர்களை மீட்கப் போராடும் சட்டத்தரணிகள்
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 03:50.23 AM GMT ]
அவுஸ்திரேலிய ஊடகம் இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து இரு வாரங்களுக்கு முன்னர் புறப்பட்ட படகில் இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் 153 பேர் இருந்ததாகத் தெரிகிறது.
இந்தப் பயணிகளுடன் கடந்த மூன்று நாட்களாக தொடர்பு கொள்ள முடியாத நிலையில், இவர்களுக்கு நேர்ந்த கதி மூடி மறைக்கப்படுவது பற்றி தாம் கரிசனை கொண்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளார்கள்.
படகில் இருந்ததாக நம்பப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களில் நான்கு பேரது பெயர் விபரங்களை சட்டத்தரணிகள் குழுவொன்று பெற்றுள்ளதாக Fairfax Media நிறுவனம் அறிவித்தது.
புகலிடக் கோரிக்கையாளர்கள் 50 பேருடன் பயணித்த இரண்டாவது படகு பற்றியும் எதுவும் ஊர்ஜிதம் செய்யப்படவில்லை. இந்தப் படகும் இந்தோனேஷியாவில் இருந்து புறப்பட்டிருக்க மாட்டாதெனத் தெரிவதாக Fairfax Media கூறுகிறது.
Refugee and Immigration Legal Centre என்ற அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான சட்டத்தரணி டேவிட் மாண் கருத்து வெளியிடுகையில்,
பாதுகாப்பு தேவைப்படும் மக்களுக்கு அதனை வழங்குவதற்குரிய சர்வதேச கடப்பாடுகளை ரோனி அபொட்டின் அரசாங்கம் நிறைவேற்றுகிறதா என்பதை அறியும் உரிமை மக்களுக்கு உண்டு என்றார்.
இந்த மக்களுக்கு நேர்ந்த கதி பற்றிய தொடர்ச்சியான கேள்விகளுக்கு பதில் இல்லை என Human Rights Legal Centre அமைப்பின் பணிப்பாளர் டேனியல் வெப் தெரிவித்துள்ளார்.
படகுகள் பற்றிய கேள்விகளுக்கு பிரதமர் ரோனி அபொட்டும், குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனும் இன்றும் பதில் அளிக்க மறுத்து விட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkq3.html
அவுஸ்திரேலியா சென்ற 153 இலங்கைத் தமிழர்களையும் நடுக்கடலில் வைத்து நாடுகடத்தல்
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 05:36.44 AM GMT ]
இதற்காக இலங்கை கடற்படைக் கப்பலொன்று அவுஸ்திரேலியா சென்றுகொண்டிருப்பதை இலங்கை அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். இதற்காக தமது கப்பலொன்று அவுஸ்திரேலியா சென்று கொண்டிருக்கிறது, மோசமான காலநிலை காரணமாக ஒரு கப்பலில் இருப்பவர்களை ஏனைய கப்பலிற்கு மாற்றுவது மிகக்கடினமான நடவடிக்கையாக அமையப்போகின்றது என இலங்கை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அந்நாட்டு கிறீன் கட்சி அறிவித்துள்ளது.
கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அருகாமையிலான கடற் பரப்பில் நிர்க்கதியான நிலையில் இருந்த இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களைத் திருப்பி அனுப்பி வைக்கின்றமை மனிதாபிமானமற்ற செயல் என அக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை மீளவும் இலங்கைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கை இரக்கமற்ற செயலாகும் என தெரிவித்துள்ளது.
குற்றவாளிகளினால் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளிடமே ஒப்படைத்தமைக்கு நிகரான காரியத்தை அரசாங்கம் செய்ய முயற்சித்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
நாட்டின் மனித உரிமை குறித்த நற்பெயருக்கு இந்த நடவடிக்கை களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது தெரிவித்துள்ளது.
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வைக்கும் நடவடிக்கையானது ஐக்கிய நாடுகள் பிரகடனத்தை மீறும் செயலாகும் என தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியா நோக்கிப் பயனித்த 153 தமிழர்களும் இன்று இலங்க்கையை சென்றடைதிருப்பார்கள் என அவுஸ்ரேலியா செய்திகள் ஊர்ஜீதம் செய்துள்ளன. அந்த வகையில் இவர்கள் அனைவரும் கடல் மார்க்கமாகவே நாடுகடத்தப்பட்டுள்ளர்கள்.
அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் இந்த கடும்போக்கான புகலிடக் கொள்கை மிகவும் பராதூரமான மனித உரிமை மீறல் என எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
தொடர்புபட்ட செய்தி
http://www.tamilwin.com/show-RUmsyHTVLblw7.html
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkry.html
Geen opmerkingen:
Een reactie posten