தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 25 juli 2014

புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவிற்கு மாற்றம்: மொரிசன் ஊர்ஜிதம்!!



இலங்கையின் அராஜக போக்கைக் கண்டித்து பிரிட்டிஸ் பிரதமர் அலுவலகத்தில் மனு கையளிப்பு
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 11:52.47 AM GMT ]
தமிழின வரலாற்றில் ஆறாத ரணமாகிப் போன கறுப்பு ஜுலையின் 31வது வருட நினைவு நாளான நேற்று முன்தினம் சிங்களப் பேரினவாத அரசின் அராஜகத்தை எதிர்க்கும் வகையில் பிரித்தானியத் தமிழர் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டமானது எழுச்சியுடன் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டு சிங்கள அராஜகங்களை வெளிப்படுத்தி, அதற்கான தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.
மாலை 4:00 மணியளவில் பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தின் முன்பு ஆரம்பமாகிய இந்நிகழ்வில்,
1. தமிழரின் பூர்வீக நிலங்கள் சிங்கள அரசால் அபகரிக்கப்படுதல்
2. பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண் யுத்த சாட்சிகளை பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கே நாடு கடத்துதல்
3. தாயகத்தில் கேட்பாரற்று தொடர்ந்து இடம்பெறும் கைதுகள் மற்றும் படுகொலைகள்
4. இலங்கை, தன் மீதான சர்வதேச விசாரணைகளைத் தடுத்தல்
5. இலங்கையில் உண்மை நிலவரங்கள் வெளிவரா வண்ணம் பத்திரிகையாளார்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தல்
6. சிங்கள அரசு புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் மீது கொண்டு வந்த தடை
போன்ற இலங்கை அரசின் அராஜக போக்கைக் கண்டித்து பதாகைகளைத் தாங்கியும் கோசங்களை எழுப்பியும் மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். அத்துடன் இவ் விடயங்கள் உள்ளடக்கப்பட்ட காட்சிப்படுத்தலும் இதன்போது இடம்பெற்றது.
பிரித்தானியத் தமிழர் பேரவை, அரசியல் இராஜதந்திர ரீதியாக நகர்வுகள் மூலம் மகிந்த ராஜபக்ச இங்கு வருவதற்கு பலமான எதிர்ப்பைக் கொடுத்திருந்தது.
உள்நாட்டுப் பிரச்சினை என்று வெளி நாடுகளைத் தலையிடாமல் வைத்து தமிழர் மீதான இன அழிப்பைத் தொடர்ந்து வந்த சிங்கள தேசம் முதல் தடவையாக 83 கறுப்பு ஜுலையில்தான் சர்வதேச நாடுகள் மத்தியில் அம்பலப்பட்டுப் போனது.
உலகை உலுக்கிய கறுப்பு ஜுலை வழமை போல் இவ் வருடமும் லண்டன் மாநகரில் எழுச்சியுடன் நடை பெற்றது.
இவை தொடர்பான மனு ஒன்றும் பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வேற்றின மக்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மாலை 6:55 மணியளவில், படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர்ந்து கரங்களில் சுடரேந்தி அகவணக்கம் செலுத்தி இந்நிகழ்வு நிறைவு பெற்றது.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjt3.html

புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவிற்கு மாற்றம்: மொரிசன் ஊர்ஜிதம்
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 12:24.38 PM GMT ]
அவுஸ்திரேலிய சுங்கத் திணைக்களத்திற்கு சொந்தமான ஓஷன் ப்ரொடெக்டர் என்ற கப்பலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள், நாட்டின் பிரதான நிலப்பரப்புக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்பதை அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மொரிசன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் 157 பேரும் அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்பிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் 157 புகலிடக் கோரிக்கையாளர்கள் எந்த இடத்தில், எப்போது மாற்றப்படுவார்கள் என்ற கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்கவில்லை.
அத்துடன், புகலிடக் கோரிக்கையாளர்கள் முதலில் கொக்கோஸ் தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து குடிவரவு தடுப்பு முகாமிற்கு மாற்றப்படலாம் கார்டியன் பத்திரிகை வெளியிட்ட செய்திகள் தொடர்பிலும் அவர் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.
“அவர்கள் இந்தியாவிற்கோ நவுருவிற்கோ மானுஸ் தீவிற்கோ மாற்றப்படலாம்”
புகலிடக் கோரிக்கையாளர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு இந்திய தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும். இலங்கையர்களாக இருந்தால் என்ன இந்திய பிரஜைகள் அல்லாத புகலிடக் கோரிக்கையாளர்களும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படலாம் எனவும் அமைச்சர் மொரிசன் குறிப்பிட்டுள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் நவுருவிற்கோ, மானுஸ் தீவிற்கு மாற்றப்படுவார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அதற்கான சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என தெரிவித்துள்ளார்.
தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களுடன் கூடிய படகு அவுஸ்திரேலிய கூட்டணி அரசாங்கம் கடைப்பிடிக்கும் ஒப்பரேஷன் சவரீன் போர்டர்ஸ் என்ற கொள்கை அமுலாக்கப்படும் காலத்தில் வந்த கடற்களமாக கருதப்படுமா என்ற கேள்விக்கும் அமைச்சர் பதிலளிக்க மறுத்துள்ளார்.
எவ்வாறாயினும் புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள் எனவும் மொரிசன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழர்களான இந்த அகதிகள் இந்தியாவில் உள்ள அகதி முகாம்களில் இருந்த நிலையில், புதுச்சேரியில் இருந்து அண்மையில் படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjt4.html

Geen opmerkingen:

Een reactie posten