[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 01:51.09 PM GMT ]
நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் கனத்த நினைவுகளுடனும், மாறா வடுக்களுடனும் கலந்து கொண்டிருந்தனர்.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட இக்கவனயீர்ப்புப் போராட்டமானது,
பொதுச் சுடரேற்றலுடன், ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
சமகால அரசியல் தொடர்பான உரையுடன், கறுப்பு ஜூலை விட்டுச் சென்ற வடுக்களும் மீண்டுமொருமறை நினைவுகூரப்பட்டது. இளையோர்களால் வேற்றின மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் ஜேர்மன் மொழியில் பேச்சுக்கள் இடம்பெற்றிருந்ததுடன் இன அழிப்பு சார்ந்த துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
கவனயீர்ப்பு நிகழ்வின் ஓர் அங்கமாக, இலங்கை அரசின் திட்டமிட்ட இன அழிப்பு சார்ந்த பதாதைகளுடன், புகைப்படங்களும் வைக்கப்பட்டு நடன அசைவுகள் மூலம் அக்கினிப் பறவைகள் இளையோர்களுடன் தமிழ் இன உணர்வாளர்களும் இணைந்து பேர்ண் நகரத்தில் மக்கள் செறிந்து வாழும் முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து இடங்களில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வானது வேற்றின மக்கள் பலரையும் வெகுவாக ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjt7.html
சசீந்திர ராஜபக்ஷ அடுத்த ஜனாதிபதி?
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 02:33.57 PM GMT ]
கதிர்காம பிரதேச சபையின் வளங்களை பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்திருந்தார்.
கூட்டத்தில் உரையாற்றிய பேச்சாளர் ஒருவர் சசீந்திர ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவிக்கு வந்து, நாட்டின் அடுத்த தலைவராக பதவியேற்பார் என தெரிவித்தார்.
1970 ஆம் ஆண்டு இளம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான மகிந்த ராஜபக்ஷ, அமைச்சராக பதவியேற்க 24 வருடங்களுக்கு மேல் சென்றது. அவர் பொறுமையுடன் அந்த பயணத்தை மேற்கொண்டார்.
முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷதான் டி.ஏ. ராஜபக்ஷ கண்ட அவரது முதல் பேரப்பிள்ளை. அவர் வேகமாக அரசியலை மேற்கொண்டு வருகிறார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக அவர் சீக்கிரமாக தெரிவு செய்யப்படுவார். அதன் பின்னர் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக சசீந்திர ராஜபக்ஷவே பதவியேற்பார் என அந்த பேச்சாளர் கூறியுள்ளார்.
அதேவேளை பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சசீந்திர ராஜபக்ஷவுக்கு எதிராக பாரிய பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இருப்பதாக கூறப்படுகிறது.
நாமல் ராஜபக்ஷ மேற்கொண்டு வரும் பிரசாரத்திற்கு எதிராகவே, சசீந்திர ராஜபக்ஷ தனது முதல் பிரசாரத்தில், தனது பேச்சாளரை கொண்டு தன்னை அடுத்த ஜனாதிபதி என பேச வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcju0.html
யாழில் சுவீகரிக்கப்படும் தனியார் காணிகளுக்கு அரசாங்கம் நஷ்டஈடு வழங்காது!- சட்ட நிபுணர்கள் - யாழில் பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்டிருந்த காணி அதிகாரங்கள் பறிப்பு
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 03:13.37 PM GMT ]
யாழ்.குடாநாட்டில் பொது தேவைகளுக்காக சுவீகரிக்கப்படப் போவதாக அடையாளப்படுத்தப்படும் காணிகளின் எல்லைகளை அழித்து, அவற்றுள் இருக்கும் கட்டிடங்களை தரைமட்டமாக்கி ஒரே காணியாக அளவீடு செய்வதன் மூலம் அந்தக் காணி உரிமையாளர்களுக்கு எந்தக் காலத்திலும் நஷ்டஈடு வழங்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் அரசாங்கம் திடமாக இருப்பதை காட்டுவதாக துறைசார் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் பல பகுதிகளில் படையினரின் தேவைகளுக்காக ஆனால் பொதுத்தேவைக்கென அடையாளப்படுத்தி பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்புச் செய்வதற்கு முயற்சிக்கப்படுகின்றது. இதன் முதற்கட்டமாக அந்தக் காணிகளை அளவீடு செய்வதற்கு தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.
எனினும் மக்கள் அதற்கு எதிர்ப்பினை தெரிவித்துவரும் நிலையில், படையினரின் தேவைகளுக்காக சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இலங்கையின் இராணுவப் பேச்சாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் காணி அளவீடு தொடர்பாக துறைசார் சட்ட நிபுணர்கள் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்.
காணிகள் ஒன்றாக்கப்பட்டு அளவீடு செய்யப்பட்டால் உரிமையாளர்களுக்கு எந்தக் காலத்திலும் நஷ்டஈடு வழங்கப்படாது.
இராணுவப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார், தற்போது மேற்கொள்ளப்படும் அளவீட்டு நடவடிக்கைகள் அனைத்தும் காணி உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்காகவே என அவ்வாறு நஷ்டஈடு வழங்கும் நேர்மையான எண்ணம் அரசாங்கத்திடம் இருந்தால், மக்களுடைய காணிகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக அளவீடு செய்யப்பட்டு, அவற்றுக்கு விலை மதிப்பீடு செய்யப்படவேண்டும்.
ஆனால் வலிகாமம் வடக்கிலும் சரி, அச்சுவேலியிலும் சரி மக்களுடைய காணிகளின் எல்லைகள் முழுமையாக அழிக்கப்பட்டு, அவற்றிலிருந்த வீடுகள் முழுமையாக அழிக்கப்பட்டு அகற்றப்பட்டதன் பின்னர் பலருடைய காணியை சேர்த்து ஒன்றாக அளக்கப்படுகின்றது.
இவற்றை நோக்கும் போது இந்நடவடிக்கை எதிர்பாராமல் செய்யப்படும் நடவடிக்கையாக கருத முடியாதுள்ளதுடன், இவற்றின் பின்னால் காணியை இழக்கும் காணி உரிமையாளர்களுக்கு எக்காலத்திலும் நஷ்டஈட்டை வழங்காமல் தடுக்கும் கபடத்தனமான எண்ணம் அரசாங்கத்திடம் இருப்பதையே அறிய முடிகின்றது என அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
2ம் இணைப்பு
பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்டிருந்த காணி அதிகாரங்கள் பறிப்பு
யாழ்.மாவட்டத்தில் பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் மீள பெறப்பட்டு அவை மாவட்டக் காணி சுவீகரிப்பு அலுவலரிடம் ஒப்படைக்க ப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலர் பிரிவுகளிலும் உள்ள பொதுமக்களின் காணிகளில் 1995ம் ஆண்டு தொடக்கம் நிலைகொண்டிருக்கும் படையினர் தமக்கு அந்தக் காணிகளை வழங்குமாறு பாதுகாப்புச் அமைச்சின் ஊடாக கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில், மக்களுடைய காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நடவடிக்கையினை இலகுபடுத்துவதற்காக வடக்கின் சகல மாவட்டங்களிலும் கடந்த வருடம் காணி அமைச்சினால் அலுவலகங்கள் திறக்கப்பட்டு, அவற்றில் காணி சுவீகரிப்பு அலுவலரும் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் அலுவலராக நியமிக்கப்பட்டிருந்த ஆ.சிவசுவாமி தனது பதவியை விட்டு விலகிய பின்னர் அந்தப் பொறுப்பு பிரதேச செயலர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு காணி சுவீகரிப்பு அலுவலராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் பிரதேச செயலகங்களிடமிருந்த பொறுப்புக்கள் அனைத்தும் மீண்டும் மாவட்டச் செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcju1.html
Geen opmerkingen:
Een reactie posten