தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 4 juli 2014

தமிழ் அகதிகள் படகு இடைமறிக்கப்பட்டமை குறித்து ஐக்கிய நாடுகள் அதிருப்தி!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் ஏகப்பிரதிநிதி அல்ல!- இலங்கை அரசாங்கம்
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 12:09.02 AM GMT ]
இலங்கை தமிழர்களின் அரசியல் ஏகப்பிரதிநிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவின் அனுசரணையுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நல்லிணக்கப் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக வெளியான தகவல் குறித்து இன்று கொழும்பில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அமைச்சர் தமது கருத்தை வெளியிட்டார்.
அரசாங்கத்தை பொறுத்தவரையில் தன்னிச்சையாக கூட்டமைப்புடன் பேச்சு நடத்த முடியாது.
நாடாளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதிகள் பலர் உள்ளனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தென்னாபிரிக்க விசேட தூதர் சிறில் ரமபோசா எதிர்வரும் 6ம் திகதி இலங்கைக்கு செல்லவுள்ள நிலையிலேயே இந்த கருத்துக்கள் இன்று கூறப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjq2.html
தமிழ் அகதிகள் படகு இடைமறிக்கப்பட்டமை குறித்து ஐக்கிய நாடுகள் அதிருப்தி!
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 12:25.02 AM GMT ]
அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பை தேடி சென்ற இலங்கை தமிழ் அகதிகள் கடலில் இடைமறிக்கப்பட்ட விடயம் குறித்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமையம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவை நோக்கி சென்ற 153 இலங்கை தமிழ் அகதிகளும் இடைமறிக்கப்பட்டமை குறித்து அபோட்டின் அரசாங்கம் உறுதிப்படுத்தலையோ அல்லது மறுப்பையோ வெளியிடவி;ல்லை.
இந்தநிலையில் அவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை வீடியோ மூலம் குறித்த படகு அகதிகள் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களில் சிலர் இலங்கையிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இந்த செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை என்று கூறியுள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அமையம், படகுகளை இடைமறிக்கும் போது சர்வதேச நியமங்கள் மற்றும் கடமைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்று எச்சரித்துள்ளது.
சாதாரணமாக படகு ஒன்றை இடைமறிக்கும் நாடு அந்த படகை தமது கடல் எல்லைக்குள் வைத்தே இடைமறிக்கவேண்டும் என்ற அடிப்படை அகதிகள் நியமம் உள்ளமையை அமையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை ஒரு நாட்டில் இருந்து பயம் காரணமாக வெளியேறும் ஒருவர் மீண்டும் அந்த நாட்டுக்கு பலவந்தமாக அனுப்பப்படுகின்றமை சர்வதேச சட்டத்தை மீறுகின்ற செயல் என்றும் அமையம் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjq3.html

Geen opmerkingen:

Een reactie posten