தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 3 juli 2014

அமெரிக்க எல்லையில் பறந்து பறந்து சுட்ட மெக்சிகோ விமானம்

மெக்சிகோ நாட்டு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று அமெரிக்க வான் பகுதிக்குள் அனுமதியின்றி பறந்து வந்ததுடன், அமெரிக்க எல்லைப்புற காவல் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தியதால், சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்கா, அரிசோனா மாநிலத்தில் நடந்த இந்த சம்பவத்தில், மெக்சிகோ ராணுவ ஹெலிகாப்டர் எதற்காக அமெரிக்க எல்லைப்புற காவல் அரண்மீது தாக்குதல் நடத்தியது என்பதற்கான காரணம், இன்னமும் வெளியிடப்படவில்லை. பகல் நேரத்தில் அமெரிக்கா – மெக்சிகோ எல்லைப் பகுதியில் உள்ள சான் மிகொல் மேலாக பறந்த மெக்சிகோ ராணுவ ஹெலிகாப்டர், அமெரிக்க எல்லைக்குள் திடீரென பிரவேசித்தது.
இதையடுத்து, அங்கிருந்த காவலரணில் இருந்த அமெரிக்க எல்லைப்புற காவல் படையினர் வெளியே வந்து ஹெலிகாப்டரை பார்த்தனர். அந்த காவலரணில் அமெரிக்க கொடி தெளிவாக பறக்கவிடப்பட்டுள்ள போதிலும், ஹெலிகாப்டரில் இருந்து தரையில் நின்றவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிகிறது. சமீபகாலமாக மெக்சிகோ எல்லைக்காவல் படையை சேர்ந்தவர்கள் அமெரிக்க எல்லைக்குள் வந்து செல்வது அதிகரித்து உள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, இப்படியான சுமார் 500 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவங்களின்போது, 131 மெக்சிகோ நாட்டு எல்லைக் காவல் படையினர், அமெரிக்க ரோந்துப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த எல்லைப் பகுதியின் ஊடாக மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக வரும் ஆட்களை தடுப்பதற்காக, எல்லையில் இரும்பு வேலி அமைப்பது என்ற முடிவு, 2006-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. இதுவரை சுமார் 1000 கி.மீ. நீளத்துக்கு அமெரிக்க எல்லையில் இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இது, அமெரிக்க – மெக்சிகோ எல்லையின் வெறும் மூன்றிலொரு பகுதிதான். மீதி எல்லைப் பகுதியில் வேலி கிடையாது.
http://www.athirvu.com/newsdetail/320.html

Geen opmerkingen:

Een reactie posten