தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 3 juli 2014

இந்திய மத்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

கணவருக்கு சிகிச்சை அளியுங்கள்: இந்திய அதிகாரிகளிடம் ஈழத் தமிழ் அகதிப் பெண் கோரிக்கை
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 03:18.06 AM GMT ]
கணவருக்கு உரிய சிகிச்சைகளை வழங்குமாறு இலங்கை பெண் அகதி, இந்திய அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.
தனது கணவர் இரத்த வாந்தி எடுப்பதாகவும் கடுமையாக நோய் வாய்ப்பட்டுள்ளதாகவும் நந்தினி என்ற இலங்கை பெண் அகதி தெரிவித்துள்ளார்.
49 வயதான பாட்டு குஞ்சாரா என்ற தனது கணவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
குறித்த நபர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மஹாத்மா காந்தி நினைவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
களவாடப்பட்ட தங்க ஆபரணங்களை விற்பனை செய்த குற்றத்திற்காக 2012ம் ஆண்டு தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குஞ்சாரா தொடர்ச்சியாக சென்னை, திருச்சி மற்றும் செங்கல்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு வருகின்றார்.
கணவர் சில தினங்களாக இரத்த வாந்தி எடுத்து வருவதாகவும், வசதிகள் கூடிய வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் நந்தினி தெரிவித்துள்ளார்.
எனினும், குறித்த பெண் கூறுவதனைப் போன்று பாரிய நோய்கள் இலங்கை அகதிக்கு கிடையாது என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகளவு மது அருந்தியதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், நந்தினி கூறுவதனைப் போன்று ஆபத்தான நிலையில் குறித்த நபர் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbkwz.html
18 வயது யுவதி தூக்கிட்டு தற்கொலை - கொலை குற்றவாளிகள் நால்வருக்கு மரண தண்டனை விதிப்பு
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 03:35.04 AM GMT ]
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா தோட்டத்தில் 18 வயது யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
குறித்த யுவதி நேற்று மாலை தனது வீட்டில் வைத்தே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யுவதி தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரையிலும் கண்டறியபடவில்லையெனவும் சடலம், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை குற்றவாளிகள் நால்வருக்கு மரண தண்டனை விதிப்பு
களுத்துறை மாவட்டம் புளத்சிங்கள, மஹாகம என்ற பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 4 குற்றவாளிகளுக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் திகதி லால் குணவர்தன என்பவரை கொலை செய்ததாக குற்றவாளிகளுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டனை விதிப்பதாக களுத்துறை நீதவான் பத்மன் சூரசேனா அறிவித்தார்.
புளத்சிங்கள பகுதியை சேர்ந்த 4 பேருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbkw0.html

இந்திய மத்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 03:45.35 AM GMT ]
கச்சதீவில் மீன் பிடிப்பது தொடர்பாக இந்தியா மற்றும் இலங்கை இடையே எந்த ஒரு ஒப்பந்தமும் இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன், மீனவ நல அமைப்புகள் போராட்டத்தினை தீவிரப்படுத்த முயற்சித்துள்ளன.
கச்சதீவை மீட்டு, அங்கு தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமைகள் வழங்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட தமிழக அரசியல் கட்சிகளும் தொடர்ந்து இதை வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக பீட்டர் ராயன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் “இந்தியா - இலங்கை இடையிலான 1974-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, கச்சதீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க உரிமை இல்லை” என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, கோவையைச் சேர்ந்த சமூக சேவகர் எம்.சஞ்சய் காந்தி, மத்திய வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஒரு பதிலைப் பெற்றுள்ளார்.
இலங்கைக்கான இந்திய வெளியுறவு அமைச்சக துணைச் செயலாளர் மாயங்க் ஜோஷி கையெழுத்திட்டு அளித்துள்ள அந்த பதிலில், “தற்போதைய அரசு ஆவணங்களின்படி, இந்தியா - இலங்கை இடையில் கச்சதீவு தொடர்பாக எந்த ஒப்பந்தமும் இல்லை. அதேநேரம் இரு நாடுகளுக்கு இடையிலான கடல் நீர் எல்லை தொடர்பாக மட்டும் ஒப்பந்தம் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த பதில் வெளியுறவுத் துறை மூலம் அளிக் கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் மீனவர்கள் மற்றும் கச்சதீவு மீட்பு இயக்கத்தினருக்கு அதிர்ச்சி தருவதாக உள்ளது.
இதுகுறித்து சமூக சேவகர் சஞ்சய் காந்தி கூறும்போது, “கச்சத்தீவு ஒப்பந்தத்தின் நகல் வேண்டும் என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் மத்திய வெளியுறவுத் துறையிடம் கேட்டேன். அவர்கள் அப்படி ஒரு விண்ணப்பமே இல்லை என்று பதில் அளித்துள்ளனர்.
எனவே, இல்லாத ஒப்பந்தத்தை இருப்பதாகக் கூறி தமிழக மக்களை ஏமாற்றும் வேலை நடக்கிறது. கடல் நீர் எல்லை தொடர்பான வரையறையிலும், இரு நாடுகளிடையே எந்தவிதமான அரசு முத்திரையோ, நாடாளுமன்ற அனுமதியோ, அரசு அதிகாரிகளின் கையெழுத்தோ இல்லை. எனவே, வெறும் வெற்றுத் தாளை ஒப்பந்தம் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை’’ என்றார்.
கச்சதீவு மீட்பு போராட்டங்களை நடத்தி வரும் தூத்துக்குடி வீராங்கனை சமூகநல அமைப்பின் தலைவர் பாத்திமா பாபு, கூறும்போது,
“மத்திய வெளியுறவுத் துறையின் இந்தத் தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. வெற்றுத்தாளை எப்படி ஒப்பந்தமாக ஏற்க முடியும். அதுவும் மீன் பிடிப்பது தொடர்பாகவோ, தீவு யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாகவோ எந்தவிதமான திட்டவட்ட வரையறையும் இதுவரை இல்லை என்பதே எங்களுக்கு பெரிய ஆவணமாக உள்ளது.
எனவே, மத்திய வெளியுறவுத் துறையின் தகவலை மையமாக வைத்து, சட்டரீதியாகவும் ஜனநாயக ரீதியாக வும் அனைத்து அமைப்புகளுடன் சேர்ந்து போராட முடிவு செய்துள்ளோம் என்றார்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆவணத்தில், 1974-ம் ஆண்டு ஜூன் 26 மற்றும் 28-ம் திகதியில் ஒப்புக்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ள வரையறை பிரிவு ஐந்தில், “கச்சதீவுக்கு தமிழக மீனவர்கள் மற்றும் பக்தர்கள் சென்று வரலாம். இதற்கு இலங்கை அரசிடம் விசா போன்ற போக்குவரத்து ஆவணங்கள் எதுவும் பெறத் தேவையில்லை. ஒவ்வொருவரின் கடல் பகுதி யிலும், இரு நாட்டு பாரம்பரிய நீர் வழி கலங்கள் இயங்கலாம்“ என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கச்சதீவு மீட்புக்குழு முதன்மை ஒருங் கிணைப்பாளர் சீதையின் மைந்தன் கூறியதாவது:
இரு நாடுகளுக்கிடையே பாரம்பரிய நீர் வழிப் பகுதி கள் குறித்து எல்லை வரைய றுத்ததில், நியாயமான முறை பின்பற்றப்படவில்லை. இந்தியாவுக்கு 18 கி.மீ, வரை நீர் எல்லை வகுத்துவிட்டு, இலங்கைக்கு 22 கி.மீ. வரை வகுத்துள்ளனர்.
சர்வதேச நீர் எல்லை விதிகளின்படி, இந்தியாவுக்கு 20 கி.மீ. என்று குறிப்பிட்டிருந்தால், கச்சதீவு சொந்தமா, இல்லையா என்ற கேள்வியே எழுந்திருக்காது.
மேலும் பாரம்பரிய நீர் எல்லை வரையறை ஒப்பந்தத்திலும், இரு நாட்டு நீர் வழிக் கலன்கள் (ஊர்திகள்) இயங்கலாம், நீர் வழி உரிமைகளும் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒப்பந்தப்படியே மீன் பிடிக்கும் உரிமை, வலை காய வைக்கும் உரிமை அனைத்தும் இந்தியாவுக்கு உள்ளது என்றார்.
நன்றி- தி ஹிந்து
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbkw1.html

Geen opmerkingen:

Een reactie posten