[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 06:45.23 AM GMT ]
அமைச்சர் விமல் வீரவன்ஸவின் தேசிய சுதந்திர முன்னணியை அழிக்கும் வேலைத்திட்டத்தை தீவிரப்படுத்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில், தேசிய சுதந்திர முன்னணியில் இருந்து விலகி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் இணைந்து கொண்ட நபர்களுக்கு அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்காக கொண்டு பதவிகளும், சிறப்புரிமைகளை வழங்க அமைச்சர் தீர்மானித்துள்ளார்.
இதில் ஒரு நடவடிக்கையாக தேசிய சுதந்திர முன்னணியில் இருந்து விலகி, சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அச்சல ஜாகொடவிற்கு கொலோன்ன தொகுதியின் இணை அமைப்பாளர் பதவியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதியின் சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக சனி ரோஹன கொடித்துவக்கு பணியாற்றி வருகிறார். அவர் சரிவர செயற்படுவதில்லை எனவும் தொகுதியின் முன்னாள் அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயதிஸ்ஸ ஜயவீர, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆதரவாளர் எனக் காரணம் கூறப்பட்டு இந்த புதிய இணைப்பாளர் நியமனம் மேற்கொள்ப்பட உள்ளது.
இதனை தவிர மேலும் இரண்டு தேசிய சுதந்திர முன்னணியின் மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கான பதவியை அமைச்சர் பசில் ராஜபக்ஷ தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
அமைச்சர் விமல் வீரவன்ஸவின் தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களை சுதந்திரக் கட்சியில் இணைக்கும் நடவடிக்கைகளில் அமைச்சர் பசில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவது குறித்து வீரவன்ஸ கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLckx6.html
முல்லைத்தீவில் தமிழர்களின் நிலங்களை அரசாங்க நிலமாக மாற்ற முயற்சி
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 06:50.58 AM GMT ]
முல்லைத்தீவு- கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள குழுளமுனை கிராமத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக நிலங்களை கபடத்தனமாக அரச நிலங்களாக பிரகடனப்படுத்துவதற்கு பிரதேச செயலர் மற்றும் மாவட்டக் காணி உத்தியோகஸ்தர் ஆகியோர் முயற்சிப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குமுளமுனை கிழக்கு கிராம அலுவலர் பிரிவின் கீழ் உள்ள தாமரைக்கேணி, வன்னியன்மேடு ஆகிய கிராமங்களில் மக்கள் மிக நீண்டகாலமாக வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் இந்தப் பகுதியில் உள்ள மக்கள் தங்களுடைய நிலங்களில் மக்கள் பயன்தரு மரங்களை நாட்டி அவற்றிலிருந்து தங்களுடைய வாழ்வாதார பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இதேபோன்று இந்தப் பகுதி மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதார தொழிலாக சிறு விவசாயத்தையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 21ம், 22ம் திகதிகளில் மேற்படி கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு காணிக் கச்சேரி நடத்தப்பட்டுள்ளது. இதன்போதே மக்களுடைய நிலங்களை அரசாங்க நிலமாக பிரகடனப்படுத்தப் போவதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் குறித்த காணிக் கச்சேரிக்கு மக்கள் அழைக்கப்பட்டபோது, போரினால் அழிக்கப்பட்ட நில ஆவணங்களை வழங்குவதற்கான காணிக் கச்சேரி என கூறப்பட்டுள்ளது. பின்னர் மேற்கண்டவாறு அரசாங்க நிலமாக பிரகடனப்படுத்தப் போவதாக பிரதேச செயலர் கூறியுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
மேலும் விடயம் தொடர்பாக மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
2009ம் ஆண்டு போரினால் இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்கால் செல்லும் வரையில் எங்களிடம் எங்களுடைய நிலத்திற்கான ஆவணங்கள் இருந்தன. ஆனால் போரின் கொடுமையினால் எங்கள் உயிர்களை மட்டுமே பாதுகாக்க முடிந்தது. ஆவணங்களை பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் நாங்கள் போரின் போது தொலைத்த ஆவணங்களை மீளவும் வழங்குவதற்காகவே கணிக் கச்சேரி நடத்தப்படுவதாகவும், எனவே அதில் தவறாமல் கலந்து கொள்ளுமாறும் எங்களிடம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தினால் கேட்கப்பட்டது.
நாம் அங்கே சென்றிருந்தபோது, எமக்கு 2 ஏக்கருக்கு மட்மே ஆவணங்களை வழங்க முடியும் எனவும், மீதமாகவுள்ள காணிகளுக்கு ஆவணங்களை வழங்க முடியாது எனவும் அதிகாரிகள் கூறியதுடன், ஒரு குடும்பத்திற்கு ஆக கூடுதலாக 2 ஏக்கர் நிலம் மட்டுமே இருக்க முடியும்.
மீதமாகவுள்ள காணிகளை திருமணமான பிள்ளைகளின் பெயரில் பதிவு செய்யவேண்டும் எனவும், கூறினார்கள்.
பின்னர் நாங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்றபோது, அவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளார்கள். திருமணமான பிள்ளைகள் இல்லாதவர்களிடம் பதிவுகள் பெறப்படாத நிலையில் பதிவுகள் செய்யப்பட்டு நிலத்திற்கான ஆவணங்களை பெறாத மக்களுடைய நிலங்களை அரசாங்க நிலமாக பிரகடனப்படுத்தப் போவதாக பிரதேச செயலக அதிகாரிகள் எங்களுக்கு கூறியுள்ளார்கள்.
இதனால் பெறுமதியான பல தென்னந்தோட்டங்கள் மற்றும் பயன்தரு மரங்கள் கொண்ட பெறுமதி யான நிலம் முழுவதும் அரசாங்க நிலமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது. ஆனால் அந்த நிலத்தையே நாங்கள் நம்பியிருக்கின்றோம். அந்த நிலம் இல்லவிட்டால் நாங்கள் பட்டினி கிடக்கும் நிலையே உரு வாகும் என மக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
மேலும் பிரதேச செயலகம் மற்றும் காணி அலுவலரின் இந்நடவடிக்கை நில ஆக்கிரமிப்பிற்கான மற்றொரு உபாயம் என மக்கள் குற்றம்சாட்டியிருப்பதுடன், பூர்வீகமாக நாங்கள் வாழ்ந்த நிலத்தினை அரசாங்க நிலமாக பிரகடனப்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டோம். எதிர்த்து நீதிமன்றம் செல்வோம் எனவும் கூறியிருக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLckx7.html
கொன்சலிற்றா நீரில் மூழ்கியே உயிரிழந்தார்!- யாழ். நீதிமன்றம் தீர்ப்பு!
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 07:05.19 AM GMT ]
மேற்படி வழங்கு இன்றைய தினம் நீதவான் நீதிமன்ற நீதிபதி பெ.சிவகுமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது வழக்கை விசாரித்த நீதிபதி குறித்த யுவதி நீரில் மூழ்கியே உயிரிழந்துள்ளதாக தீர்ப்பளித்துள்ளதுடன், அவர் இறப்பதற்கு முன்னர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளாரா என்பதனை எதிர்வரும் 9ம் திகதி அறிக்கை மூலம் வெளிப்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை கொன்சலிற்றாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவருயை பெற்றோர் கூறியுள்ளதுன், அவருடைய இறப்பிற்கு இரு பாதிரியார்களே காரணம் எனவும் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
இதேவேளை இன்றைய தீர்ப்பு தம்மை விரக்திக்கு உள்ளாக்கியிருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLcjoy.html
பிடிக்கப்படும் போதைப் பொருள் எவ்வாறு அழிக்கப்படுகின்றது?
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 08:08.01 AM GMT ]
அந்த கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
மீட்கப்படும் போதைப் பொருட்கள் நீதவான் முன்னிலையில் நீரில் கரைத்து நீதிமன்ற மலசலக்கூடத்தில் இடப்படும் என பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் கமால் சில்வா தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னதாக ஒன்பது கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருள் பிடிக்கப்பட்டதாகவும், அவை இவ்வாறு நீரில் கரைக்கப்பட்டு நீதவான் முன்னிலையில் நீதிமன்ற மலசல கூடத்தில் இடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிடிக்கப்பட்ட உடன் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி வைக்கப்படும் பின்னர் அது நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கப்படும்.
அதன் பின்னர் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு பின்னர் மீண்டும் நீதிவான் முன்னிலையில் இந்தப் போதைப் பொருள் நீரில் கரைத்து மலசல கூடத்தில் சேர்க்கப்படும்.
போதைப் பொருளை அழிக்கும் போது பொலிஸார் , ஊடகவியலாளர்கள் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர்கள் உள்ளிட்ட பலரும் அந்த சந்தர்ப்பத்தில் பிரசன்னமாகியிருப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலின் போதேஅவர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அண்மைக்காலகமாக பாரியளவில் ஹெரோயின் போதைப்பொருட்களை பொலிஸார் மீட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பிடிக்கப்படும் போதைப்பொருளை புதைத்தால் அது மீளவும் தோண்டப்பட்டு எடுக்கப்படக் கூடும் எனவும் எரித்தால் அதனை சுவாசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் நீரில் கரைத்து கழிவறையில் கழிவுகளுடன் போதைப் பொருளும் கலக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLcjoz.html
வவுனியாவில் கல்வாரி திருத்தலத்தின் மீது விஷமிகள் தாக்குதல்
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 08:21.32 AM GMT ]
நேற்று இரவு இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் கல்வாரி திருத்தலத்தின் தலைவர் என்.அருளானந்தம் கருத்து வெளியிடுகையில்,
கல்வாரி தலத்தில் அமைக்கப்பட்டிருந்த 15 தொகுதி சிலைகளில் 8 சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதை பொது மக்களே அவதானித்துள்ளனர்.
தலத்தில் அமைக்கப்பட்டிருந்த அநேகமான சிலைகள் பாரியளவில் சேதமடைந்துள்ளன.
இவ் விடயம் தொடர்பாக, பங்குத்தந்தையிடம் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வவுனியா பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLcjo0.html
Geen opmerkingen:
Een reactie posten