தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 4 juli 2014

ஐ.நா விசாரணைகளில் பங்காளராக முடியாது! ஸ்கைப் மூலமாக சாட்சியங்களை பதியவுள்ளதாக தகவல்! ஊடக அமைச்சர்

முஸ்லிம்களின் கடைகள் உடைக்கப்பட்டதாக ஐ.நாவிடம் போலி அறிக்கை சமர்ப்பிப்பு - பேருவளை இராணுவக் கட்டுப்பாட்டில்..!– விக்ரமபாகு
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 11:57.31 PM GMT ]
பேருவளை, அளுத்கம சம்பவங்களின் போது முஸ்லிம்களின் கடைகள் உடைக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் போலி அறிக்கை சமாப்பிக்கப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.
பிரான்ஸ் புலம்பெயர் முஸ்லிம் அமைப்பு என்ற அமைப்பினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வன்முறைச் சம்பவங்களின் போது 17 பள்ளிவாசல்களுக்கும், 80 முஸ்லிம்களின் கடைகளுக்கும் பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம் மக்களின் வர்த்தக உரிமை முடக்கப்பட்டுள்ளதாகவும்ää 2012ம் ஆண்டு முதல் இதுவரையில் முஸ்லிம்கள் 260 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அளுத்கம சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பேருவளை இராணுவத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது!– விக்ரமபாகு
பேருவளை பிரதேசம் இராணுவத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
700 இராணுவத்தினர் குறித்த பிரதேசத்தில் கடமையில் ஈடுபடு;த்தப்பட்டுள்ளனர். அங்கு ஓடுகின்றார்கள், இங்கு ஓடுகின்றார்கள். கடைகளை திருத்துகின்றார்கள், கழிவகற்றுகின்றார்கள்.
பேருவளைக்கு இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்த திட்டமிட்டிருந்தமை இந்த விடயங்களின் மூலம் தெரியவந்துள்ளது. பேருவளை தற்போது இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
குப்பைகளை அகற்றுதல்,  கடைகள் வீடுகளை புனரமைத்தல் உள்ளிட்ட சகல பணிகளையும் இராணுவத்தினர் மேற்கொள்கின்றனர்.
பிரதேச செயலகமோ அல்லது வேறும் நிறுவனங்களோ தேவையில்லை. பேருவளை, யாழ்ப்பாணத்தை போன்று இராணுவக் கட்டுப்பட்டின் கீழ் இயங்குகின்றது.
வித்தியாசமான ஓர் ஆட்சியின் கீழ் நாம் வாழ்கின்றோம் என விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbjq1.html
யாழில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை பதியும் பணிகளில் பொலிஸ் புலனாய்வுத்துறை!– வட மாகாணசபை உறுப்பினர் கேள்வி
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 12:53.44 AM GMT ]
யாழ் நகரிலும், யாழ்ப்பாணம் புறநகர்ப் பகுதிகளில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களிலும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் குறித்த தகவல் திரட்டொன்று தம்மை பொலிஸ் புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திய இரு அதிகாரிகளினால் 2014 ஜூலை முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் மேற்கொள்ளப்படுவதாக அறியக்கிடைக்கின்றது.
மேற்படி தகவல் திரட்டல் நடவடிக்கை முஸ்லிம் வியாபாரிகளை மாத்திரம் மையப்படுத்தியதாக அமைந்திருக்கின்றது. இதன் காரணமாக முஸ்லிம் வியாபாரிகள் மத்தியில் அமைதியற்ற ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கின்றது.
மேற்படி தகவல் திரட்டல் நடவடிக்கை எதற்காக முஸ்லிம் வியாபாரிகளிடம் மாத்திரம் மேற்கொள்ளப்படவேண்டும்? இதற்கான காரணம் என்ன என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பிலான வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் அவர்கள் இன்றைய தினம் 3 ஜூலை 2014 என திகதியிடப்பட்ட கடிதம் மூலம் பிரதி பொலிஸ் மா அதிபரை கேட்டுள்ளார்.
குறித்த கடிதத்தில், “நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள இனவாதத்தாக்குதல் நடைபெற்று இன்னமும் முழுமையாக ஓய்வுறாத சூழலில் இத்தகைய தகவல் திரட்டொன்றினை பொலிஸார் எதற்காக மேற்கொள்கின்றார்கள்?
அண்மையில் நாட்டில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கோர இன அழிப்புத் தாக்குதலுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் நிகழ்விற்கு யாழ்ப்பாண முஸ்லிம் வர்த்தகர்களும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தார்கள், எனவே அதன் காரணத்தினாலா எமது தகவல்கள் திரட்டப்படுகின்றன போன்ற முக்கிய ஐயங்கள் அவர்கள் மத்தியில் எழுகின்றன.
மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மேற்படி தகவல் குறித்து என்ன காரணத்திற்காக மேற்கொள்ளப்படுகின்றது என்பதை அறிந்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய நிலையிலும், அவர்களிடம் தோன்றியிருக்கின்ற அச்ச உணர்வை நீக்க வேண்டிய தேவையும் எனக்கிருக்கின்றது.
எனவே மேற்படி விடயம் குறித்து தங்களிடம் இருந்து எழுத்துமூல பதிலொன்றினை எதிர்பார்த்து நிற்கின்றேன். என மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjq5.html
ஐ.நா விசாரணைகளில் பங்காளராக முடியாது! ஸ்கைப் மூலமாக சாட்சியங்களை பதியவுள்ளதாக தகவல்! ஊடக அமைச்சர்
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 01:55.01 AM GMT ]
இலங்கைக்கு எதிரான ஐ.நா மனித உரிமை பேரவையின் செயற்பாடுகள் தவறானவை என நாம் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் அதன் விசாரணைகளில் எமக்கு பங்காளராக முடியாது என அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஸ்கைப் மற்றும் உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சாட்சியங்களைப் பதிவுசெய்ய விசாரணைக்குழு தயாராவதாகத் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இது தொடர்பில் அந்த சந்தர்ப்பத்திலேயே தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது தொடர்பிலுள்ள சட்ட ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதாகவும் குறிப்பிட்டார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றது. இதில் ஐ.நா விசாரணை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
ஐ.நா.வில் முன்வைக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை என்பதை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா செயற்பாடுகளுடன் தொடர்புடைய சகல விடயங்களும் இதற்குள் அடங்கும்.
சட்டபூர்வமாக மக்களால் நியமிக்கப்பட்ட அரசாங்கத்தை பயங்கரவாதிகளுடன் சரிசமமாக கருதி விசாரணைகளை முன்னெடுக்க ஐ.நா விசாரணைக்குழு தயாராவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.
யுத்த செயற்பாட்டின் ஊடாக பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலே அவ்வாறு அழிக்கப்பட்ட அமைப்பு குறித்தும் இவர்கள் விசாரிக்கத் தயாராகிறார்கள்.
இந்த விசாரணைகளின் ஊடாக அரசாங்கத்தையும் புலிகளையும் சமமாகக் கருதி செயற்பட தயாராகிறார்கள்.
துரையப்பா முதல் கெப்பிட்டிகொல்லாவ கொலை வரை புலிகள் செய்த அநியாயங்கள் குறித்து சர்வதேச சமூகத்திற்கு போதியளவு ஆதாரங்கள் வழங்கியிருக்கிறோம்.
உண்மைக்குப் புறம்பான தகவல்களின் அடிப்படையிலேயே இலங்கைக்கு எதிரான விசாரணை இடம்பெறவிருக்கிறது.
முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்க நாம் மேற்கொண்ட கடந்த கால நடவடிக்கைகள் தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
சுமார் 12 ஆயிரம் பேரை நாம் புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்தியுள்ளதோடு பலருக்கு இராணுவத்திலும் சேர வாய்ப்பளித்துள்ளோம்.
இது தவிர பாராளுமன்ற உறுப்பினராகச் செயற்படவும் அவகாசம் வழங்கியுள்ளோம்.
முன்னாள் புலிகள் தொடர்பில் இதனைத் தவிர நாம் என்ன செய்ய வேண்டுமென இவர்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjq6.html

Geen opmerkingen:

Een reactie posten