தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 4 juli 2014

ஞானசார தேரரின் வீசா சட்ட அடிப்படையில் பரிசீலிக்கப்படும்: பிரித்தானியா

ஐ.நா விசாரணைகளில் பங்காளராக முடியாது! ஸ்கைப் மூலமாக சாட்சியங்களை பதியவுள்ளதாக தகவல்! ஊடக அமைச்சர்
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 01:55.01 AM GMT ]
இலங்கைக்கு எதிரான ஐ.நா மனித உரிமை பேரவையின் செயற்பாடுகள் தவறானவை என நாம் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் அதன் விசாரணைகளில் எமக்கு பங்காளராக முடியாது என அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஸ்கைப் மற்றும் உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சாட்சியங்களைப் பதிவுசெய்ய விசாரணைக்குழு தயாராவதாகத் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இது தொடர்பில் அந்த சந்தர்ப்பத்திலேயே தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது தொடர்பிலுள்ள சட்ட ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதாகவும் குறிப்பிட்டார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றது. இதில் ஐ.நா விசாரணை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
ஐ.நா.வில் முன்வைக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை என்பதை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா செயற்பாடுகளுடன் தொடர்புடைய சகல விடயங்களும் இதற்குள் அடங்கும்.
சட்டபூர்வமாக மக்களால் நியமிக்கப்பட்ட அரசாங்கத்தை பயங்கரவாதிகளுடன் சரிசமமாக கருதி விசாரணைகளை முன்னெடுக்க ஐ.நா விசாரணைக்குழு தயாராவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.
யுத்த செயற்பாட்டின் ஊடாக பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலே அவ்வாறு அழிக்கப்பட்ட அமைப்பு குறித்தும் இவர்கள் விசாரிக்கத் தயாராகிறார்கள்.
இந்த விசாரணைகளின் ஊடாக அரசாங்கத்தையும் புலிகளையும் சமமாகக் கருதி செயற்பட தயாராகிறார்கள்.
துரையப்பா முதல் கெப்பிட்டிகொல்லாவ கொலை வரை புலிகள் செய்த அநியாயங்கள் குறித்து சர்வதேச சமூகத்திற்கு போதியளவு ஆதாரங்கள் வழங்கியிருக்கிறோம்.
உண்மைக்குப் புறம்பான தகவல்களின் அடிப்படையிலேயே இலங்கைக்கு எதிரான விசாரணை இடம்பெறவிருக்கிறது.
முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்க நாம் மேற்கொண்ட கடந்த கால நடவடிக்கைகள் தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
சுமார் 12 ஆயிரம் பேரை நாம் புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்தியுள்ளதோடு பலருக்கு இராணுவத்திலும் சேர வாய்ப்பளித்துள்ளோம்.
இது தவிர பாராளுமன்ற உறுப்பினராகச் செயற்படவும் அவகாசம் வழங்கியுள்ளோம்.
முன்னாள் புலிகள் தொடர்பில் இதனைத் தவிர நாம் என்ன செய்ய வேண்டுமென இவர்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjq6.html
அகதிக் கோரிக்கையாளர்கள் என்பது நிரூபிக்கப்படாவிட்டால் 142 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்படுவர்!
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 02:12.42 AM GMT ]
அகதிகள் கோரிக்கையாளர்கள் என்பது நிரூபிக்கப்படாவிட்டால் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள 142 பாகிஸ்தானியர்களும் நாடு கடத்தப்படுவர் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
சுற்றுலா வீசா மூலம் நாட்டுக்குள் பிரவேசித்துள்ள இந்த 142 பாகிஸ்தானியர்களும் வீசா சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அகமடிய என்னும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகளவில் இவ்வாறு அகதிக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அகதிக் கோரிக்கை விண்ணப்பத்த 142 பேரில் 6 பேருக்கு மட்டுமே அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அகதி அந்தஸ்து உறுதிப்படுத்தப்படாதவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்.
அகதி அந்தஸ்து உறுதியானவர்கள், அவர்களை ஏற்றுக் கொள்ள விரும்பும் நாடுகளிடம் ஒப்படைக்கப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அகதிகளை நாடு கடத்துவது ஆபத்தானது என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjry.html
பாகிஸ்தான்- இலங்கை உறவு: தீவிர யோசனையில் இந்தியா
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 02:58.40 AM GMT ]
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்த முயற்சிக்க வேண்டும். இல்லையேல் வெளிநாட்டு சக்திகள் தமது பயங்கரவாத தாக்குதல்களை தென்னிந்தியாவின் மீதும் மேற்கொள்ளக்கூடும் என்று இந்திய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே இந்த விடயம் குறித்து இந்தியா, இலங்கையுடன் பேச்சு நடத்தவுள்ளதாக இந்திய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கையின் அண்மைக்கால வன்முறைகளுக்கு வெளிநாட்டு பின்னணி இருப்பதாக அண்மையில் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதனை கோடிட்டுள்ள இந்திய தரப்பு, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு குறித்த வன்முறைகளுக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் இதனை அந்த அமைப்பின் தலைவர் சயீட் இந்தியாவிலும் செயற்படுத்த முயற்சிக்கலாம் என்று எச்சரித்துள்ளது.
எனவே இலங்கை, பாகிஸ்தானுடனான உறவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்திய தரப்பு இலங்கையிடம் வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில் இஸ்லாமிய தீவிரவாதம் நாட்டை சேதப்படுத்தும் என்றும் இந்திய தரப்பு சுட்டிக்காட்டவுள்ளது.
இந்த சந்தேகத்தை இந்தியா, வெறுமனே கற்பனையில் வெளியிடவில்லை. அண்மையில் தென்னிந்தியாவில் கைது செய்யப்பட்ட மொஹமட் சாகீர் ஹுசைனிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் பின்னரே இந்த சந்தேகத்தை வெளியிடுவதாக இந்திய தரப்பு குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjr1.html
ஞானசார தேரரின் வீசா சட்ட அடிப்படையில் பரிசீலிக்கப்படும்: பிரித்தானியா
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 03:16.39 AM GMT ]
பொதுபலசேனாவின் கலகொட அத்தே ஞானசார தேரரின் வீசா அனுமதி தமது நாட்டு குடிவரவு சட்டத்தின்கீழ் பரிசீலிக்கப்படும் என்று பிரித்தானியா அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஞானசார தேரருக்கு வீசா வழங்க அமெரிக்கா மறுப்பை வெளியிட்டது.
இந்தநிலையில் பிரித்தானியாவும் அவருக்கு நாட்டுக்குள் பிரவேசிக்க தடைவிதிக்குமா? என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே பிரித்தானிய குற்றத்தடுப்பு மற்றும் சமூக எதிர்ப்பு செயற்பாடுகள் தொடர்பான அமைச்சர் டெய்லர் ஹொல்பீச் பிரபு இந்த பதிலை வழங்கியுள்ளார்.
சாதாரணமாக ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடுகளை கொண்ட தீவிரவாதிகள் பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்க முடியாது.
இவ்வாறானவர்களை நாட்டுக்குள் அனுமதிப்பதால் அது பிரித்தானியாவுக்குள்ளும் இனங்களுக்கு இடையில் பிரச்சினைகளை உருவாக்கும் என்றும் பிரித்தானிய அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பிரித்தானியாவின் விழுமியங்களுக்கு எதிரானவர்களுக்கு வீசா நீடிப்பு சலுகையையும் தாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரித்தானிய குற்றத்தடுப்பு மற்றும் சமூக எதிர்ப்பு செயற்பாடுகள் தொடர்பான அமைச்சர் டெய்லர் ஹொல்பீச் பிரபு குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjr2.html

Geen opmerkingen:

Een reactie posten