இந்த நிலையில் அனந்திக்கு எதிரான ஆர்ப்பாட்டப் போராட்டமொன்றை படைத்தரப்பு திட்டமிட்டது. கேப்பாப்புலவு மக்கள் நலன்பேணல் அமைப்பு என்ற பெயரில் படைத்தரப்பின் பின்னணியில் உருவாக்கப்பட்ட அமைப்பும், சிவில் பாதுகாப்பு படையணியும் இந்த போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டன. இதற்காக அவர்கள் பேரூந்துகளில் கொண்டு வந்து, போராட்ட இடத்தில் இறக்கிவிடப்பட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களை களத்திலும் சிவிலுடையில் வந்த இராணுவத்தினரே வழிநடத்தியதை அங்கு சென்ற எமது செய்தியாளர் உறுதி செய்துள்ளார்.
போராட்டத்தின் காரணம், பின்னணி பற்றி அங்கு சென்ற செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கேள்விகளை தொடுக்க தொடங்கிய போது, பலரிற்கு எதற்காக வந்தோம் என்பதே தெரியாமல் இருந்தது. படையினர் வருமாறு கூறினார்கள், அதனால் வந்தோம் என்றார்கள். இது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மற்றும் அங்கு நின்ற பார்வையாளார்களிடையே சிரிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தின் வலது மூலையில் முன்னிலை வகித்த பெண்கள் வெட்கத்துடன் கலைந்து செல்ல தொடங்கினார்கள். அதனை தொடர்ந்து படிப்படியாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்று விட்டனர்.
Geen opmerkingen:
Een reactie posten