மரவெள்ளி தோட்டத்தில் புல் பிடுங்க, நீர் பாச்சவென் இவர் இளம்பெண்ணொருவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். இந்த நிலையில், கடந்த வாரம் பகல் வேளையில் தோட்டப்பக்கம் எதேச்சையாக அவரது மனைவி சென்றுள்ளார். அவருக்கு ஒரு அதிர்ச்சி காட்சி காத்திருந்தது. வேலைக்கார யுவதியுடன் கணவன் சல்லாபித்துக் கொண்டிருந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி, அகப்பட்ட உருட்டுக்கட்டை ஒன்றை கொண்டுபோய் இருவரையும் வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டார். சத்தம் கேட்டு, அருகில் தோட்ட வேலைகளில் ஈடுபட்டவர்கள்தான் போய் சல்லாப ஜோடியை காப்பாற்றியுள்ளனர்.
அடி காயங்களுக்கு உள்ளாகிய கணவர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைபெற சென்றவேளை, இது பொலிஸ் கேஸ் . யார் உங்களை தாக்கியது என்று மருத்துவர்கள் விடுத்து விடுத்து கேட்ட பின்னரே கணவன் சம்பவத்தை விபரித்துள்ளாராம். இது தேவையா ?
Geen opmerkingen:
Een reactie posten