நேற்றைய தினம் காசா பகுதியில் இஸ்ரேலிய விமானங்கள் குண்டு மழைபொழிந்துள்ளது. இதில் தனது குடும்பம் காணமல் போனதை உணர்ந்த இளைஞர் ஒருவர் மோபைல் போனை கையில் எடுத்துக்கொண்டு, தனது குடும்ப அங்கத்தவர்களுக்கு போன் அடித்தவாறு அவர்களை வீதியெங்கும் தேடி அலைந்துள்ளார். இதேவேளை காசா பகுதிக்குள் தற்போது இஸ்ரேலின் அதிரடிப்படையினர் ஊடுருவியுள்ளார்கள். அவர்கள் இந்த நிராயுதபாணியான இளைஞரை குறிசுடும்(ஸ்னைப்பர்) துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள். காயமடைந்து நிலத்தில் வீழ்ந்த இந்த இளைஞரை மீண்டும் மீண்டும் சுட்டு அவரை அப்படியே கொலைசெய்துள்ளார்கள். அதாவது குறி சுடும் துப்பாக்கியை வைத்திருந்த படையினருக்கு இந்த இளைஞர் நிராயுதபாணியாக இருப்பது நன்றாகவே தெரிந்திருக்கும்.
இருப்பினும் அவர்கள் இவரை தாக்கியுள்ளார்கள் என்றால் அது கொலைசெய்யும் நோக்குடன் தான் நடைபெற்றுள்ளது என்பது தெளிவாகப் புரிகிறது. கொல்லப்பட்ட இளைஞரின் வீடியோ மற்றும் புகைப்படங்களை பாலஸ்தீனம் இன்று வெளியிட்டுள்ளது. அது உலக நாடுகளிடம் நீதி கேட்டு இப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். பாலஸ்தீனம் ஒரு காலத்தில் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு மிகவும் துணை போன நாடாகும். அன் நாடு ஈழ விடுதலை போராட்ட வீரரான உமா மகேஸ்வரன் மற்றும் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் பலரை செங்கம்பளம் கொண்டு வரவேற்று பல உதவிகளை புரிந்துள்ளது. ஆனால் இன்று அவர்கள் நிலையும் ஈழத் தமிழர்கள் போல ஆகியுள்ளது என்பது தான் பெரும் கவலைக்கு உரிய விடையம் ஆகும்.
Geen opmerkingen:
Een reactie posten