பிரித்தானிய நபரிடம் 4.5 கோடி ரூபாவை கொள்ளையடித்த சிங்கள ஹோட்டல் உரிமையாளர் !
[ Jul 02, 2014 02:18:57 PM | வாசித்தோர் : 5045 ]
வாங்கிய நிலங்களை பார்வையிட என பிரித்தானிய நபர் இலங்கை சென்றவேளை, வேறு ஒருவரின் நிலத்தை காட்டி இதுவே தமது காணி என்று அவர் கூறி ஏமாற்றி வந்துள்ளார். இன் நிலையில் குறித்த ஆங்கிலேயர், சிங்கள வர்த்தகர் தம்மை ஏமாற்றுவதை எவ்வாறோ அறிந்துகொண்டு, பொலிசாரிம் முறைப்பாடு செய்துள்ளார். சமன கருணாதிலக என்னும் இன் நபரை, கைதுசெய்த பொலிசார் அவரை சிறியில் அடைத்துள்ளார்கள் என மேலும் அறியப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/327.htmlலண்டனில் தீ பற்றி எரிந்த வீட்டில் தமிழ் பெண் மரணம்: பொலிசார் விசாரணை ஆரம்பம் !
[ Jul 02, 2014 04:45:21 PM | வாசித்தோர் : 2275 ]
லண்டன் வோத்தம்ஸ்ரோப் பகுதியில் உள்ள வீடொன்றினுள் இன்று அதிகாலை 2.10 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தினால் தமிழ்ப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணிற்கு 55 வயது ஆகிறது என்றும் அவருடைய கணவர் வெளிப்புறமாக பாய்ந்து தீ காயங்களோடு உயிர்பிழைத்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். 32 வயது மதிக்க தக்க நபர் ஒருவரே இப் பெண்ணின் கணவர் என்று கூறப்படுகிறது. இவர் எவ்வாறு 55 வயதுப் பெண்ணை திருமணம் முடித்தார் என்பது ஒருபுறம் இருக்க, அதிகாலை வேளை நெருப்பு பற்றிய வீட்டில் இருந்து மேலும் ஒரு நபர் அந்த வீட்டில் இருந்து நடந்து வெளியே சென்றுவிட்டார் என்று அயலவர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்கள். அதிகாலை சுமார் 2.00 மணிக்கு பாரிய கூச்சலிடும் சத்தம் கேட்டதாகவும், இவர்கள் மதுபோதையில் சத்தம்போடுகிறார்கள் என்று தாம் நினைத்ததாகவும் அயலவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆனால் கூச்சலிட்ட சத்தம் மிகவும் கடுமையாக கேட்டதால் தான் வெளியே எட்டிப் பார்த்ததாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள். பின்னரே தீ அணைக்கும் படையினர் விரைந்து வந்து அதிகாலை 3.00 மணிக்கு தீயை அணைத்துள்ளார்கள். வீட்டின் கீழ் பகுதியில் தான் முதலில் தீ பரவியுள்ளது என்பதனை ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் பொலிசார் அறிந்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. மேற்படி இந்த தீ விபத்தை சந்தேக அடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/330.html
Geen opmerkingen:
Een reactie posten