விடுதலைப் புலிகளின் தலைவர்கள் புலித்தேவன், நடேசன் போன்றோர், கொல்லப்பட்டமை தொடர்பாகவே, ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழு முதலில் விசாரணை நடத்தவுள்ளதாக, சகோதர  சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் 12 தலைவர்கள் உயிரிழந்தமை தொடர்பாக முதல் கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க நான்கு பேர் ஜெனீவா சென்றுள்ளனர். இலங்கை தொடர்பில் விசாரணை நடத்தி ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் உறுப்பினரான யாஸ்மீன் சூகாவே இந்த சாட்சியாளர்களை முன்னிலைப்படுத்த உள்ளார்.
இவர்கள் யார் என்பதனை வெளிப்படுத்தாத போதிலும் ஒருவர் இலங்கை ஊடகவியலாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களும் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான ஏற்பாட்டாளர் எரிக் சொல்ஹெய்மும் முன்வந்துள்ளனர். என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.Nadasein-PuleNadasein-Pule-01Nadasein-Pule-02Nadasein-Pule-03Nadasein-Pule-04