தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 2 juli 2014

இலங்கை அகதி மாணவிக்கு மருத்துவ கல்லூரி அனுமதி கோரி வழக்குத் தாக்கல் !

தனது 2 பிள்ளைகளையும் அதிகாலை கொலைசெய்த தந்தை: ஆதிர்சியில் ஊர் மக்கள் !

[ Jul 02, 2014 05:18:37 PM | வாசித்தோர் : 2890 ]
எட்டியாந்தோட்டை மாலல்பொல பகுதியில் தமது இரண்டு பிள்ளைகளை கொலை செய்த தந்தை ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. ஏழு வயதான மகள் மற்றும் மூன்று வயது மகன் ஆகியோரையே சந்தேகநபர் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இன்று அதிகாலை 2 மணியளவில் இரு சடலங்களும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இரு பிள்ளைகளினதும் தாய் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பில் எட்டியாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
http://www.athirvu.com/newsdetail/331.html

இலங்கை அகதி மாணவிக்கு மருத்துவ கல்லூரி அனுமதி கோரி வழக்குத் தாக்கல் !

[ Jul 02, 2014 05:25:16 PM | வாசித்தோர் : 1125 ]
இலங்கை அகதி மாணவி ஒருவருக்கு இந்தியாவில் மருத்துவ கல்லூரிக்கான அனுமதியை வழங்க உத்தரவிடுமாறு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அகதியாகச் சென்ற ஒருவரின் மகளான குறித்த மாணவி கடந்தமுறை பிளஸ் 2 பரீட்சைக்குத் தோற்றி 1,170 புள்ளிகளை பெற்றிருந்ததாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. பரீட்சை பெறுபேறுக்கு அமைய அவர் மருத்துவ கல்லூரிக்கு அனுமதியை பெற தகமை பெற்றிருந்த போதிலும் நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருக்கவில்லை.
இதற்கான காரணத்தை வினவியபோது, இந்த மாணவி அகதியாக உள்ளதால் மருத்துவ கல்லூரிக்கான அனுமதியை வழங்க முடியாது என அதிகாரிகள் குறித்த மாணவியிடம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் மாணவி தமிழகத்தில் பிறந்து, வளர்ந்து, படித்துள்ளதால் அவருக்கு மருத்துவக் கல்லூரி அனுமதி வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாணவிக்கான இடத்தினை ஒதுக்குமாறு தமிழக சுகாதார துறைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் சட்டத்தரணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த மனுவை நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள் குழு, மனு தொடர்பில் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தி ஹிந்து வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.athirvu.com/newsdetail/332.html

Geen opmerkingen:

Een reactie posten