தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 24 juli 2014

சர்வதேசத் தலையீடு இலங்கை விவகாரத்தில் இருக்கக்கூடாது! என்கிறார் சேஷாத்ரி சாரி!

னா உதவியளித்த போதிலும் விமானப்படையே முழுமையாக நிர்வாகம் செய்யும்!- இராணுவப் பேச்சாளர்
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 03:22.18 AM GMT ]
சீனாவின் உதவியுடன் விமான பழுது பார்த்தல் வசதிகளை கொண்ட பராமரிப்பு நிலையம் ஒன்றை திருகோணமலையில் அமைக்க திட்டமிட்ட போதும் அதன் நிர்வாகம் முழுமையாக இலங்கை விமானப்படையினரிடமே இருக்கும் என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
செய்தியாளர்களிடம் இந்த தகவலை இராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த திட்டத்துக்காக சீனாவின் விமானம் ஒன்றையே பயன்படுத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும் ருவன் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையில் நிறுவப்படவுள்ள விமான பழுது பார்த்தல் நிலையத்தை சீனாவுக்கு பொறுப்பளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் தொடர்பிலேயே ருவன் வணிகசூரிய அரசாங்க தரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை நேற்று முன்தினம் எதிர்க்கட்சி த்தலைவர் நாடாளுமன்றில் எழுப்பிய குறித்த கேள்விக்கு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பதிலளிக்கையில், இவ்வாறான பராமரிப்பு நிலையமொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது உண்மைதான். எனினும், எங்கு அமைப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்படவில்லை என்றும், திருகோணமலை நகரில் விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
அதேவேளை, ஏற்கனவே கப்பல் பழுது பார்க்கும் நடவடிக்கைகளை இலங்கை கடற்படையினர் ஜப்பானிய உதவியுடனேயே மேற்கொண்டு வருவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLckw4.html
இராணுவ ஆக்கிரமிப்பு அராஜகத்தை நீக்கி தமிழர் தீர்வை நோக்கி அரசு நகர வேண்டும்: சி.பாஸ்க்கரா
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 03:55.58 AM GMT ]
வட பகுதியில் இராணுவத்தை விலக்காமல் மேலும் விஸ்தரிப்பதுடன், தமிழ் மக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் தன்மையின் உச்சத்தால் நில அபகரிப்பு, சிறுமி மீதான வன்புணர்வு போன்ற சம்பவங்கள் வடமாகாண இராணுவ பிரசன்னத்தின் கொடூர தன்மையை புடம் போட்டுக்காட்டுகிறது என்கிறார் சி.பாஸ்க்கரா.
அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் சி.பாஸ்க்கரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் விடிவுக்கான தீர்வையும் உண்மை நிலையை பெரும்பான்மை மக்கள் உணராமல் தடுக்கிறது பெரும்பான்மை இனவாத மதவாதம். தீர்வையும் எட்டாக்கனியாக மாற்றுகிறது.
இந்த நாட்டில் ஒரு இனம் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்ற போது அதேநாட்டிலுள்ள சகோதர இனம் விளங்கிக் கொள்ள முடியாதும் கண்டுங்காணாதிருக்கும் நிலைமையே இங்கு காணப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நாட்டை பிரிக்க முயல்வதாகக் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்கள். அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கூட்டமைப்பின் தரப்பு அவ்வாறான ஒரு முயற்சியை நாம் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தது.
அதுமட்டுமன்றி, யாழில் நடைபெற்ற ஈ.பி.ஆர்.எல்.எவ்பின் 34ஆவது மாநாட்டில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றுகையில்,
நாட்டைப் பிரிக்க நாம் முயவில்லை. ஐக்கிய இலங்கைக்குள் உரிமைகளை வழங்கவேண்டுமென்றே நாம் கோருகின்றோம் என தெளிவாக அறிவித்திருக்கின்றார். அவ்வாறு அறிவித்த பின்னரும் கூட அரசாங்கமும் அதன் பங்காளிகளும் இனவாதப்பட்டத்தை சூட்டுவதற்கு தான் தொடர்ந்தும் கங்கணம் கட்டிவருகின்றார்கள். எமது கட்சிக்குக் கூட அவ்வாறான நிலைமையே காணப்படுகின்றது. இந்த நிலைமை மாறவேண்டும்.
ஜனாதிபதி மக்கள் குடியிருப்புக்களை எந்தவிதத்திலும் சூறையடுவதற்கு இடமளிக்கக் கூடாது என இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அறிவித்திருந்த போதும் வடக்கிலும், கிழக்கிலும் அந்த நிலைமைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
மக்கள் தொடர்ச்சியாக தமது சொந்தநிலங்களில் மீளக்குடியேறி வாழமுடியாது இருக்கும் தருணத்திலும் அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுப்பதற்கு நேரொதிராக காணி சுவீகரிப்பு செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
அண்மையில் கீரிமலையிலும், அச்சுவேலியிலும் பொதுமக்களினதும் தமிழ்ப் பிரதிநிதித்துவங்களினதும் போராட்டத்தால் சுவீகரிக்கும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டிருந்தாலும் பின்னர் இராணுவத்தின் துணையுடன் அந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இச்செயற்பாடுகள் வடக்கிலும் கிழக்கிலும் தொடர்ச்சியாக இடம்பெறுவதானது அங்கு இராணுவ அடக்கு முறை இருக்கின்றது என்பதையே பகிரங்கப்படுத்தியுள்ளது.
வடக்கின் காரைநகர் பிரதேசத்தில் பாடசாலை செல்லும் 11வயது சிறுமியொருவர் மீது இராணுவ வீரர் வன்புணர்வு செயற்பாட்டை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்துள்ளார்.
இன்றுவரை அந்த வீரர் கைது செய்யப்படவில்லை. அடையாள அணிவகுப்புச் செய்கின்றார்கள். ஒரு 11வயது சிறுமியால் அடையாளம் காட்டிவிட முடியுமா?
உண்மையில் இவ்விடயம் தொடர்பில் குறித்த இராணுவ முகாமிலுள்ள அதிகாரியே கவனம் செலுத்தி முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறானதொரு செயற்பாடு இடம்பெறவில்லை.
குறித்த அதிகாரியே நீதிமன்றத்திற்கு பதில் சொல்லும் பொறுப்பை நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறானதொரு விடயம் நடைபெறவில்லை.
விளையாட்டு என்பது இன ஐக்கியத்திற்கும் ஒற்றுமைக்குமான ஒரு பாலமாக அமையவேண்டியதொன்று. ஆனால் அண்மையில் வடபகுதியில் இருந்து வருகைதந்த விளையாட்டு வீரர்கள் மீது காழ்ப்புணர்ச்சியுடன் தாக்குதல்களை மேற்கொண்டிருக்கின்றார்கள்.
விளையாட்டில் கூட நாம் தான் வெற்றிபெற்றோம் என பிரசாரம் செய்யவே பெரும்பான்மையினத்தவர்கள் விரும்புகின்றார்கள். வெற்றி தோல்வியை சமமாக மதிக்கத்தெரியாது திட்டமிட்டு மேற்கொண்டதொன்றாகவே நாம் காண்கின்றோம்.
 அரசாங்கம் தீர்வு நோக்கி செல்வதற்கு முன்னர் வடக்கில் சிவில் நிர்வாகத்தை நிலைநாட்டி இவ்வாறான இனவாத காழ்ப்புணர்ச்சி மிக்க செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLckw6.html
சர்வதேசத் தலையீடு இலங்கை விவகாரத்தில் இருக்கக்கூடாது! என்கிறார் சேஷாத்ரி சாரி
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 04:15.57 AM GMT ]
இலங்கையில் எந்தவிதமான வெளிநாட்டுத் தலையீடுகளுக்கும் இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கின்றது. அதனால்தான் ஜெனிவாவில் இலங்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இந்தியா கலந்துகொள்ளவில்லை. எதிர்காலத்திலும் இந்தியா இவ்வாறே செயற்படும் என்று இந்திய ஆளும் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் கலாநிதி சேஷாத்ரி சாரி தெரிவித்தார்.
இலங்கை பிரச்சினை சர்வதேசமயப்படுத்தப்படுவதை இந்தியா எதிர்க்கின்றது. இது இலங்கையின் உள்நாட்டு விவகாரமாகும் அதில் எந்தவிதமான சர்வதேச தலையீடுகளும் இருக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பிலிருந்து வெளியாகும் நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அதில் மேலும் குறிப்பிடுகையில்
அரசியல் தீர்வு விடயத்தில் இலங்கை அரசாங்கத்தினால் என்ன விடயங்கள் வாக்குறுதியளிக்கப்பட்டதோ அவை நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமாகும்.
அரசாங்கமும் கூட்டமைப்பும் ஏனைய அரசியல் கட்சிகளும் இணைந்தே பேச்சு நடத்த வேண்டும். அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்கும் அப்பால் கட்சிகள் உள்ளன. அவர்களும் இந்த அரசியல் பொறிமுறையின் பங்காளர்களாக உள்ளனர்.
அரசாங்கமும் கூட்டமைப்பும் மட்டும் பேச்சு நடத்த வேண்டும் என்று நான் கூறவில்லை. நான் கூறுவது என்னவென்றால் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும் கூட்டமைப்பும் ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து பேச்சு நடத்த வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் பொதுவான தீர்வை எட்ட முடியும்.
13 ஆவது திருத்தச் சட்டம் என்பது இலங்கை அரசியலமைப்பின் ஒரு அங்கமாகும். அதனை நடைமுறைப்படுத்துவது இலங்கைக்கு முக்கியமாகும். அதனை அமுல்படுத்த வேண்டும். ஆனால் அதற்கான நேரகாலம் தொடர்பில் இலங்கைக்கு இந்தியா அழுத்தம் வெளியிட முடியாது
கடந்த கால யுத்தத்தினால் தமிழ் மக்கள் மட்டும் பாதிக்கபபட்டவர்கள் என்பது தவறான அபிப்பிராயமாகும். நாட்டின் வேறு மாகாணங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்படவில்லையா?
புலிகளின் செயற்பாடுகள் காரணமாக நாட்டில் பொருளாதார அபிவிருத்தி இடம்பெறவில்லை. இதனால் தமிழ் மக்கள் மட்டுமா பாதிக்கப்பட்டனரா? இல்லை.
புலிகளினால் இந்தியாவும் பாதிக்கபபட்டது. இலங்கைககும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
எனவே தமிழ் மக்கள் மட்டும் பாதிக்கப்பட்டனர் என்பது தவறாகும். முழு நாடும் பாதிக்கப்பட்டது. பிராந்தியம் பாதிக்கப்பட்டது.
எனவே தமிழ் மக்களுக்கான எனது செய்தியானது நீங்கள் சிறுபான்மை மக்கள் என எண்ணக்கூடாது. தமிழ் மக்களுக்கு இலங்கை சகல வழிகளிலும் உரிமையானதாகும். மக்களை மதம் மற்றும் மொழிகளைக் கொண்டு பிரிக்க முற்படவேண்டாம். எவரும் இதனை செய்யக்கூடாது.
இதேவேளை இலங்கையில் எந்தவிதமான வெளிநாட்டுத் தலையீடுகளுக்கும் இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கின்றது. இது இலங்கையின் உள்நாட்டு விவகாரமாகும்.
அதேவேளை இந்திய இலங்கை உறவானது இருதரப்புக்குள்ளானதாகும். இந்தியா இலங்கை பிரசசினை சர்வதேசமயப்படுத்தப்படுவதை எதிர்க்கின்றது.
எமது முன்னாள் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பிலிருந்து விலகியது. அதற்கு முன்னர் இரண்டு தடவைகள் ஆதரவாக வாக்களிக்கப்பட்டிருந்தது. எனினும் இறுதித் தடவை இந்தியா வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
இந்தியா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தொடர்ந்து வாக்களிப்பில் கலந்து கொள்ளாமலேயே இருக்கும். காரணம் நாங்கள் ஒரு விடயத்தை தெளிவாக குறிப்பிட்டு விட்டோம். அதாவது இலங்கையின் உள்ளக செயற்பாடுகளில் எந்தவிதமான வெளிநாட்டுத் தலையீடுகளுக்கும் இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கின்றது என்பதே அதுவாகும்
http://www.tamilwin.com/show-RUmsyHRYLckw7.html

Geen opmerkingen:

Een reactie posten