[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 01:04.31 AM GMT ]
இதேவேளை இவ்வாறான இன ரீதியிலான தூண்டுதல்களையும் சிறிலங்கா அரசு நிறுத்த வேண்டும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இன ரீதியிலான செயற்பாடுகள் சுமார் 500 இடம்பெற்றுள்ளன. இவற்றில் முஸ்லிம்களுக்கு எதிரான 350 சம்பவங்களும் கிறிஸ்தவ சமூகத்துக்கு எதிரான 150 ம் இடம்பெற்றுள்ளன.
கடந்த மாதம் 15 ஆம் திகதி பொதுபல சேனா அளுத்கம, பேருவளை ஆகிய பிரதேசங்களில் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருந்தது. இதனால் பல ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் அழிக்கப்பட்டன நான்கு முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் 80 பேர் வரை காயமடைந்தனர். வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டன.
இதன் காரணமாக குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டு, சுமார் 80 பேர் காயமடைந்தனர். முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள், வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் கொள்ளையிடப்பட்டதுடன் எரியூட்டப்பட்டன. இந்த விடயங்களில் பொலிஸ் மற்றும் நீதித்துறை போதுமான முனைப்புகளை மேற்கொள்ளவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbkv3.html
வெளிநாட்டு இராஜதந்திரிகள் 35 பேர் அரசியல் ரீதியாக நியமனம்
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 02:33.08 AM GMT ]
அண்மையில் ஹம்பாந்தோட்டை அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு பரீட்சைகள் நடத்தி வெளிவிவகார சேவை தொடர்பிலான கல்வித் தகைமை உடையவர்களே இராஜதந்திர சேவையில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.
சர்வதேச ரீதியிலான தொடர்புகளைப் பேணுவதற்கு இராஜதந்திரிகளுக்கு தொடர்பாடல் திறன் இருக்க வேண்டும்.
ஹிமில்டன் அமரசிங்க, ஜயந்த தனபால போன்றவர்கள் நாட்டுக்கு பாரியளவில் கீர்த்தியை ஈட்டிக் கொடுத்துள்ளனர். எனினும், தற்போது அதிகளவிலான இராஜதந்திரிகள் தகுதியற்றவர்கள்.
இதனால் சர்வதேச விவகாரங்களில் இலங்கை பாரிய பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றது.
இவ்வாறு பாரியளவில் பணத்தை செலவழித்த இராஜதந்திரிகளுக்கு சம்பளமும் ஏனைய சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றது.
எனினும், நாட்டின் நன்மதிப்பு குறித்து பிரசாரம் செய்ய சர்வதேச நிறுவனங்களின் உதவி நாடப்பட்டுள்ளது.
இரண்டு அமெரிக்க நிறுவனங்களின் ஊடாக நாட்டின் நன்மதிப்பை அபிவிருத்தி செய்ய பிரசாரம் செய்யப்படுகின்றது.
இதற்காக பாரியளவில் பணம் செலவிடப்படுகின்றது. இவ்வாறான தகவல்களை வெளியிட்டால் அதனை சர்வதேச சதித் திட்டம் என அரசாங்கம் பிரசாரம் செய்கின்றது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbkv6.html
இலங்கை அரசு அனுமதி மறுத்தாலும் விசாரணையை முன்னெடுத்துச் செல்ல முடியும்!- பிரிட்டன் தூதுவர்
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 02:26.47 AM GMT ]
ஆதாரங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை விசாரணைக்குழு தொடர்ச்சியாக முன்னெடுக்கும். விசாரணைக் குழுவிடம் தமது சாட்சியங்களை அளிப்பதற்கு யாரேனும் முன்வருவார்களேயானால், அவர்கள் எந்தவிதத்திலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படாதிருப்பது மிகவும் முக்கியமானது.
இல்லாவிட்டால், செப்டம்பரில் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறும் அமர்வின்போது வாய்மூல அறிக்கையும், அதனைத் தொடர்ந்து எதிர்வரும் மார்ச்சில் இடம்பெறும் அமர்வின்போது முழுமையான அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அடுத்து முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு இலங்கைக்கான பிரிட்டன் பிரதமர் ஜோன் ரன்கின் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதுவர் இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவுடன் இலங்கை அரசு ஒத்துழைக்க மறுக்கும் நிலையில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரிட்டனில் கடந்த மாதம் இடம்பெற்ற 'மோதல்களின் போது பாலியல் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருதல்' தொடர்பான சர்வதேச மாநாடு குறித்து விளக்கமளிப்பதற்காகவே இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்போதே ஐ.நா. விசாரணைக்குழு தொடர்பான கேள்விகளுக்கும் பிரிட்டன் தூதுவர் பதிலளித்தார்.
பிரிட்டனில் நடைபெற்ற பாலியல் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருதல் தொடர்பான சர்வதேச மாநாடு குறித்து கருத்து வெளியிட்ட பிரிட்டன் தூதுவர், மோதல்களின் போது பாலியல் ரீதியான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான பிரகடனத்தை இலங்கை அரசு அங்கீகரிக்க வேண்டும் எனப் பிரிட்டன் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருவதாகவும் இது தொடர்பில் அரசை ஊக்குவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
"மற்றைய நாடுகளில் உள்ளது போன்றே இலங்கையிலும் மோதல்களின் போது பாலியல் ரீதியான வன்முறைகளில் ஈடுபடும் தரப்பினர் தண்டனையிலிருந்து தப்பித்துச் சுதந்திரமாக நடமாடும் நிலைமை இல்லாமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டியது அவசியமாகும். பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட்ட அனைவருக்கும் ஆதரவும் பாதுகாப்பும் வழங்கப்படுவது அவசியமாகும்.
மோதல்களின்போது பாலியல் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வரும் உலகளாவிய மாநாடு கடந்த மாதம் 10ம் திகதி முதல் 13ம் திகதி வரையில் லண்டனில் பிரிட்டன் வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹேக் மற்றும் ஐ.நாவின் விசேட பிரதிநிதி நடிகை அஞ்சலீனா ஜோலி ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்டது.
இதில் இலங்கை உட்பட 128 நாடுகளைச் சேர்ந்த 300இற்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். யுத்த காலத்தில் இடம்பெறும் பாலியல் வல்லுறவு மற்றும் அதனைச் சூழ்ந்திருக்கின்ற தண்டனையிலிருந்து தப்பித்துச் சுதந்திரமாக திரிகின்ற கலாசாரம் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வரும் அவசியத்தை வலியுறுத்தியே இந்த மாநாடு இடம்பெற்றது.
இதில் அடிப்படையான விடயமாக அத்தகைய குற்றங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கும் ஏனையவர்களுக்கும் நீதியைப் பெற்றுக்கொள்ள ஆவன செய்வது வலியுறுத்தப்பட்டது. இந்த மாநாட்டின் போது பாலியல் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்படக்கூடிய ஆணித்தரமானதும் நடைமுறைச் சாத்தியமிக்கதுமான நடவடிக்கைகள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டது.
இந்த விடயத்தில் அரசு மட்டுமன்றி, பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்கள், சிவில் அமைப்புகள், மத அமைப்புகள் ஆகியவற்றால் ஆற்றக்கூடிய வகிபாகங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. லண்டன் மாநாடு குறிப்பாக, இரண்டு முதன்மையான நோக்கங்களைக் கொண்டிருந்தது.
பாலியல் வல்லுறவை யுத்தத்தின் போது ஆயுதமாகப் பாவிக்கும் துர்ப்பாக்கிய நிலையில் காணப்படும் - தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலையை எதிர்கொள்வதற்கான - நடைமுறை செயற்பாட்டுக்கு இணங்குதல் மற்றும் இந்தக் குற்றங்கள் தொடர்பான உலகின் எண்ணப்பாடுகளை மாற்றியமைத்தல் ஆகியனவே அந்த இரு முதன்மை நோக்கங்களாகும்'' - என்று பிரிட்டன் தூதுவர் விளக்கமளித்தார்.
மோதல்களின் போது பாலியல் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி மாநாட்டை நடத்தும் பிரிட்டன், பாலியல் வன்முறைக்குள்ளான இலங்கையர்களை நாடுகடத்தும் செயற்பாடானது அதன் இரட்டை வேடத்தைக் காண்பிப்பதாக அமைந்துள்ளதே என வினவியபோது,
அரசியல் தஞ்சம் கோருவோர் தொடர்பில் பிரித்தானியா உறுதியான கொள்கையைக் கடைப்பிடித்து வருகின்றதெனக் குறிப்பிட்டதுடன் தமது சாட்சியங்களை சரிவர உறுதிப்படுத்தும் தனிநபர்களுக்கு சர்வதேச நியதிக்கு அமைவாக பிரிட்டன் அரசியல் தஞ்சம் வழங்குவதாகவும் அப்படி நிரூபிக்கத் தவறுபவர்களே மாற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசு மோதல்களின் போது பாலியல் வன்முறைகள் இடம்பெறுவதை முடிவுக்குக் கொண்டுவரும் பிரகடனத்தை அங்கீரிப்பதற்கும், ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவுடன் ஒத்துழைத்துச் செயற்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கும் என்பதில் பிரிட்டன் இன்னமும் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbkv5.html
Geen opmerkingen:
Een reactie posten