தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 3 juli 2014

153 அகதிகள் திருப்பியனுப்பப்பட்ட செய்திக்கு மத்தியில், இலங்கையில் “சமாதான சமூகம்” என்று டோனி அபோட் பெருமிதம்!!

ஹலால் சான்றிதழை மீள அறிமுகம் செய்ய வேண்டும்!- வட்டரக்கே விஜித தேரர்
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 12:03.22 AM GMT ]
ஹலால் சான்றிதழை மீள அறிமுகம் செய்ய வேண்டுமென ஜாதிக பலசேனா அமைப்பின் தலைவர் வட்டரக்கே விஜித தேரர் தெரிவித்துள்ளார்.
போலியானதும், பகட்டானதுமான நடவடிக்கைகளினால் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது.
மீண்டும் நாட்டில் ஹலால் முறைமையை அமுல்படுத்துவதன் மூலம் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்.
பௌத்த மத வரலாற்றில் மிகப் பெரிய பொய்யை பொதுபல சேனா செய்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டதாக கூறப்படும்  குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட விஜித தேரர், பாணந்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு திரும்பிய போது செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbkvz.html

பௌத்த மக்களை அபகீர்த்திக்கு உள்ளாக்க முயற்சிக்கப்படுகிறது!– ஜனாதிபதி
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 12:18.20 AM GMT ]
பௌத்த மக்களை அபகீர்த்திக்கு உள்ளாக்க முயற்சிக்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் நெருப்பை வெளியே கொடுத்து, வெளி நெருப்பை உள்ளே கொண்டு வந்து முழு நாட்டையே தீக்கிரையாக்க சிலர் முயற்சிக்கின்றனர்.
மதங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி அதனை நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் கருவியாக சிலர் பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.
பௌத்த மக்களுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையிலான தகவல்களை இணையத்தில் பிரசுரித்து உலக நாடுகளில் பிரசாரம் செய்யும் முயற்சிகளை சிலர் மேற்கொள்கின்றனர்.
பல வருடங்களாக இரத்தம் சிந்தி ஈட்டிய வெற்றியை இல்லாமல் செய்ய முயற்சிப்பது தவறானதாகும்.
எந்தவொரு இடத்திலும் மதக் கடும்போக்குவாதத்திற்கு இடமில்லை.
நாட்டை கட்டியெழுப்ப ஒரு இன மக்களினால் மட்டும் முடியாது. சிங்கள. தமிழ் முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு அவசியமானது.
நாட்டில் கலவரத்தை ஏற்படுத்துவதன் மூலம் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டரங்களில் நேற்ற நடைபெற்ற பௌத்த மத நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbkv0.html
ரெய்னோர் சில்வா அரசியல் முடிவை மாற்றிக்கொண்டார்! ஆளும் கட்சியினர் அதிர்ச்சி
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 12:28.10 AM GMT ]
இலங்கையின் ஏபிசி மீடியா நெட்வேர்க்கின் தலைவர் ரெய்னோர் சில்வா, அரசியலில் ஈடுபடும் முடிவை 11வது மணித்தியாலத்தில் மாற்றிக்கொண்டார். இந்த தகவலை இலங்கையின் சிங்கள இணையம் ஒன்று வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே அவரின் சகோதரரான நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் வழியில் அரசியலில் ஈடுபட முடிவெடுத்திருந்தார்.
இதன்கீழ் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவும் அவர் தீர்மானித்திருந்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இது தொடர்பில் துமிந்த சில்வாவின் வீட்டுக்கு சென்று கலந்துரையாடியிருந்தார்.
எனினும் தற்போது ரெய்னோர் சில்வா தமது முடிவை மாற்றி தமது வர்த்தகத்தில் மாத்திரம் கவனத்தை செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெய்னோர் சில்வாவின் இந்த முடிவு ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரெய்னோர் சில்வாவின் நிர்வாகத்தின் கீழேயே ஹிரு,  சன்,   சூரியன்,  ஷா எப் எம் வானொலி சேவைகள் இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbkv1.html
153 அகதிகள் திருப்பியனுப்பப்பட்ட செய்திக்கு மத்தியில், இலங்கையில் “சமாதான சமூகம்” என்று டோனி அபோட் பெருமிதம்
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 01:57.55 AM GMT ]
இலங்கை தமிழ் அகதிகள் 153 பேரை மீண்டும் இலங்கையிடம் அவுஸ்திரேலியா நடுக்கடலில் வைத்து கையளித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களுக்கு மத்தியில், இலங்கை “சமாதான சமூகம்” என்று அந்த நாட்டின் பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் 3 ஏ டபிள்யு என்ற வானொலி நிகழ்ச்சியில் இன்று வியாழக்கிழமை காலை கருத்துரைத்த அவர், நடுக்கடலில் வைத்து அகதி படகுகளை திருப்பியனுப்பும் செயற்பாட்டில் இரகசியங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இது தேர்தலுக்கு முன்னரே தாம் கொள்கையாக வெளியிட்ட விடயம் என்று அபோட் குறிப்பிட்டார்.
இதேவேளை தாம் தப்பிவந்த நாட்டுக்கே மீண்டும் அகதிகளை திருப்பியனுப்புவது குறித்து அபோட்டிடம் கேட்டபோது, தாம் சர்வதேச சட்டங்களை மதிப்பதால் அதன்படி செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
தமது பார்வையின்படி, இலங்கையில் போருக்கு பின்னர் மனித உரிமை விடயங்களில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அபோட் தெரிவித்தார்.
எனினும் குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன், 153 பேரைக்கொண்ட இலங்கை அகதிகள் படகு மற்றும் 50பேரைக்கொண்ட மற்றும் ஒரு படகு தொடர்பில் கருத்துக்கூற மறுத்துவிட்டார்.
இதனை தொழில் கட்சியின் குடிவரவு பேச்சாளர் ரிச்சட் மார்ல்ஸ் கண்டித்துள்ளார். ஸ்கை நியூஸூக்கு இன்று காலை கருத்துரைத்த அவர், குறித்த படகுகளுக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள அனைவருக்கு உரிமை உள்ளது என்று குறிப்பிட்டார்.
இதேவேளை தமிழக அகதி முகாம்களில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இந்த 153 இலங்கை அகதிகளுக்கும் என்ன நடந்தது என்பது தொடர்பில் அறிந்து கொள்வதற்காக அகதி முகாம்களில் உள்ள அவர்களின் உறவினர்கள் அங்கலாய்ப்பை வெளியிட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த அகதிகள் இலங்கையி;டம் கையளிக்கப்பட்டால் அவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவர் என்றும் உறவினர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbkv4.html
153 அகதிகள் இன்றிரவு இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்படலாம்!- அவுஸ்திரேலிய செய்தித்தாள் - நான்கு கேள்விகளை மட்டும் கேட்கும் அதிகாரிகள்
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 04:03.47 PM GMT ]
153 தமிழ் அகதிகளை கொண்ட படகு பெரும்பாலும் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக இலங்கையின் கடற்படை அதிகாரி ஒருவரை கோடிட்;டு அவுஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. இன்று புதன்கிழமை இரவு இந்த அகதி பரிமாற்றம் நடுக்கடலில் வைத்து இடம்பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
153 இலங்கை தமிழ் அகதிகளுடன் இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியா சென்ற படகை அவுஸ்திரேலியா இலங்கை கடற்படையினரிடம் கையளித்ததாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எனினும் இது தொடர்பில் அவுஸ்திரேலியா அரசாங்கம் உத்தியோகபூர்வ செய்தி எதனையும் வெளியிடவில்லை.
எனினும் 153 தமிழ் அகதிகள் படகும் 50 பேரைக் கொண்ட மற்றும் ஒரு படகும் இன்னும் கடலில் தரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் 153 தமிழ் அகதிகளை கொண்ட படகு பெரும்பாலும் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக இலங்கையின் கடற்படை அதிகாரி ஒருவரை கோடிட்டு அவுஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
இன்று புதன்கிழமை இரவில் இந்த அகதி பரிமாற்றம் நடுக்கடலில் வைத்து இடம்பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் 50 பேரைக் கொண்ட படகில் உள்ளவர்களை படகில் வைத்து தொலைத்தொடர்பு கருவிகளின் மூலம் அடையாளம் காணும் பணிகளை அவுஸ்திரேலிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை மனித உரிமைகள் சட்டத்தரணிகள் கண்டித்துள்ளனர். அவுஸ்திரேலியா சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதற்கிடையில் இதுவரை தமது கரையில் இருந்து அகதிகள் படகு அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு செல்லவில்லை என்று கூறிவந்த இந்திய அதிகாரிகள் தற்போது பாண்டிச்சேரி கரையில் இருந்து மீனவப்படகு ஒன்றில் அகதிகள் புறப்பட்டு சென்றமையை உறுதிப்படுத்தியுள்ளதாக அவுஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
நான்கு கேள்விகளை மட்டும் கேட்கும் அதிகாரிகள்

அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கும் இரண்டாவது அகதிப் படகிலுள்ள அகதிகளிடம், விசாரணை என்ற பெயரில் நான்கு கேள்விகள் மாத்திரமே அவஸ்திரேலிய அதிகாரிகளால் எழுப்பப்பட்டுள்ளன.
ஏற்கனவே 153 ஈழ அகதிகளுடனான படகு அநாதரவான அவுஸ்திரேலிய கடற்பரப்பில் நிற்கும் நிலையில், மேலும் 50 பேரை ஏற்றிய படகு ஒன்றும் அந்த பகுதியில் பயணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த படகை தொடர்பு கொண்டு அவுஸ்திரேலிய அதிகாரிகள், அவர்களின் பெயர், நாடு, எங்கு செல்கிறார்கள், எதற்காக அவர்களின் நாட்டில் இருந்து வெளியேறினார்கள் ஆகிய நான்கு கேள்விகளை மாத்திரமே கேட்டுள்ளனர்.
இதன் அடிப்படையிலேயே அவர்களை அகதிகளாக அங்கீகரிக்கவும், நாடு கடத்தவும் தீர்மானிக்கப்படுவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இலங்கையில் இருந்து செல்லும் அகதிகளாக இருந்தால் அவர்கள், நடுக்கடலில் வைத்தே நாடு கடத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. 
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbku2.html

Geen opmerkingen:

Een reactie posten