[ புதன்கிழமை, 23 யூலை 2014, 04:32.07 PM GMT ]
ஸ்கொட்லாந்து கிளஸ்கோ நகரில் ஆரம்பமாகியுள்ள 20வது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியின் முதல்நாளான இன்று ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்கேற்பதைத் தடுத்து நிறுத்தவும், தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் புலம்பெயர் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், சுவிஸ், ஜேர்மன், மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்தும் உணர்வு மிக்க ஈழத் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளப் போவதில்லையென அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLckv0.html
இந்திய அகதிகளை மாத்திரம் பொறுப்பேற்க மோடி அரசு தயார்! இலங்கையர்களின் நிலை என்ன? - முழு ஆய நீதிபதிகள் விசாரணை
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 05:36.53 PM GMT ]
அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் உள்ளிட்ட குழுவினர், இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோரை நேற்று சந்தித்தனர். இதன்போது இந்த இணக்கம் எட்டப்பட்டதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த அகதிகள் கப்பல் ஜூன் 13 ஆம் திகதியன்று பாண்டிச்சேரியில் இருந்து புறப்பட்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்றைய சந்திப்பின் போது குறித்த கப்பல் அகதிகளை அவுஸ்திரேலியா தமது கடல் பிராந்தியத்துக்கு வெளியே வைத்து தடுத்தமையால், குறித்த அகதிகளை அவர்களின் நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் உரிமை இருப்பதாக மொரிசன் வாதாடியிருக்கலாம் என்று நம்புவதாக செய்திகள் கூறுகின்றன.
எனினும் இதன்போது குறித்த கப்பலில் உள்ள இந்திய பிரஜைகளை மாத்திரம் ஏற்றுக்கொள்ள இந்தியா இணங்கியுள்ளது.
இந்தநிலையில் குறித்த கப்பலில் இருப்பவர்கள் இலங்கையர்களாக இருந்தால் அவர்களின் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே கப்பல் இந்தியாவில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளமையால் கப்பலில் உள்ளவர்களை பொறுப்பேற்கமுடியாது என்று இலங்கை அறிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் முழு ஆய நீதிபதிகள் குழாம் விசாரணை
அவுஸ்திரேலியாவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் முழு ஆய நீதிபதிகள் குழாம் விசாரணைகளை நடத்தவுள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான வழக்கை விசாரித்து வருகின்ற நீதிபதி கென்னத் ஹேய்ன், இருதரப்பு வாதங்களையும் கவனத்திற்கொண்டு, ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி முதல் முழு ஆய நீதிபதிகள் குழாம் இந்த விசாரணைகளை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த மாத ஆரம்பத்தில் இந்தியாவின் புதுச்சேரியிலிருந்து புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச்சென்ற படகொன்றை, அவுஸ்திரேலிய அதிகாரிகள் கடலில் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
இந்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்புவதற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ள நிலையில், இந்தியாவுடனான தூதரக மட்டத்திலான அணுகுமுறைகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
ஆயினும்இ புகலிடக் கோரிக்கையாளர்களின் விவகாரம் சட்ட ரீதியாகவும், மனிதாபிமான முறையிலும் கையாளப்பட வேண்டியதன் அவசியத்தை அவுஸ்திரேலியாவிற்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக்கோ, நவ்ரூ தீவிற்கோ, பப்புவா நியூகினியாவுக்கோ அனுப்பப்படுவதற்கு தடை விதிக்குமாறு கோரி அவுஸ்திரேலியாவின் சுங்க கப்பலொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் சார்பாக ஆஜராகியுள்ள சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் அறைகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தவர்களை தனித்தனியே பிரித்து தடுத்து வைத்துள்ளதாகவும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்த நிலைமையின் கீழ், புகலிடக் கோரிக்கையாளர்கள் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருவதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன் அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த பின்னணியிலேயே அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசனின் இந்திய விஜயம் அமைந்திருந்ததாக கான்பராவிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் அவுஸ்திரேலிய ஊடகமொன்றில் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLckv3.html
Geen opmerkingen:
Een reactie posten