தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 23 juli 2014

ஆயிரக்கணக்கான மக்கள் கிளாஸ்கோவில் அணி திரண்டு உள்ளார்கள் !-சொந்த செலவில் தமிழருக்கு சூனியம் இப்படித்தான்!


3ம் இணைப்பு:சொந்த செலவில் தமிழருக்கு சூனியம் இப்படித்தான்! 
கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன் வெலத் நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளின் முதல் நாளான இன்று, ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கூடி பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். நிகவு நடைபெறும் அரங்கிற்கு இதுவரை மகிந்த ராஜபக்ஷ வரவில்லை. இருப்பினும் லண்டனில் உள்ள சில இலங்கை தூதரக அதிகாரிகள் தமது காரில் சிங்கக் கொடிகளை பறக்க விட்டு அங்கே வந்தார்கள். சிங்க கொடிகளை உடனடியாக சுருட்டி உள்ளே வைக்குமாறு, ஸ்காட்லான் பொலிசார் கூறியுள்ளார்கள். இதனால் அவர்கள் காரை வேறு பக்கமாக திருப்பிக்கொண்டு சென்றுவிட்டார்கள், என அதிர்வின் விசேட நிருபர் சற்று முன் தெரிவித்தார். பல பேரூந்துகள், கார்கள், வேன் மற்றும் விமானத்தில் கூட தமிழர்கள் லண்டனில் இருந்து கிளாஸ்கோ சென்றுள்ளார்கள் என அறியப்படுகிறது. இதேவேளை சுவிஸ், ஜேர்மன், மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்தும் உணர்வு மிக்க ஈழத் தமிழர்கள் வந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
2ம் இணைப்பு:
தமிழீழ தேசிய கொடிகள் பறக்கவிட்டபடி பல பேருந்துகள் தற்போது கிளாஸ்கோ நகரத்திற்கு சென்றடைந்துவிட்டதாக, அதிர்வின் பிரத்தியேக செய்தியாளர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் (TCC) ஏற்பாடு செய்துள்ள இந்த மாபெரும் போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். அவர்களில் பலர் இன்று அதிகாலை 6.00 மணிக்கு கிளாஸ்கோ நோக்கி புறப்பட்டுவிட்டார்கள். பலரது பேரூந்துகள் தற்போது நகரை அண்மித்து தரிப்பிடங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் காமன்வெலத் நாடுகளின் விளையாட்டுபோட்டிகள் ஆரம்பமாக உள்ளது. இன் நிலையில் அன் நாடுகளின் தவிசாளர் என்ற பதவியை வகிக்கும் மகிந்தர் இதுவரை கிளாஸ்கோவுக்கு வரவில்லை என்று அறியப்படுகிறது.
தமிழர்களின் போராட்டத்தை கண்டு அஞ்சிய இவர் இலங்கையில் முடங்கிக்கிடக்கலாம் என்று நம்பப்படுகிறது. காமன் வெலத் நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் பல நாடுகளின் தலைவர்கள், அரங்கிற்குச் செல்லும் முக்கிய பாதையில் தமிழர்கள் பாரிய அளவில் கூடி ஆர்பாட்டத்தை நிகழ்த்தவுள்ளார்கள். இதனை கண்டு கழிக்கவென ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கே கூட உள்ள நிலையில், இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பை அவர்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையிலும் இந்த பாரிய ஆர்பாட்டம் அமைந்துள்ளது எனலாம். லண்டன் நேரப்படி 4.00 மணிக்கு நேரலை ஒளிபரப்புகள் ஆரம்பமாகும். தொழில் நுற்ப்ப வசதிகள், மற்றும் இன்ரர் நெட் தொடர்பாடல் போன்ற காரணிகளால் சில சில தடங்கல் ஏற்படலாம். இருப்பினும் முடிந்தவரை இங்கே நடைபெறும் போராட்டத்தை அதிர்வு இணையம் முடிந்தவரை நேரலையாக உங்களுக்கு தரவுள்ளது.
Live streaming video by Ustream



Geen opmerkingen:

Een reactie posten