அநுரதபுரம் விமானப்படை தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையதாக கூறப்படும் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 4 பேர் மீது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அநுரதபுரம் விசேட நீதிமன்றம் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்தது.
கடந்த 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் திகதி இந்த தளம் மீது விடுதலைப்புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது 14 விமானப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.
10 விமானங்கள் முற்றாகவும் 6 விமானங்கள் பகுதியளவிலும் சேதமடைந்தன.
இந்தநிலையில் இது குறித்து வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, விசாரணையை ஆகஸ்ட் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLblxy.html
Geen opmerkingen:
Een reactie posten