[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 10:55.22 AM GMT ]
இலங்கையின் கடற்றொழில் தொடர்பான மாகாண கடற்றொழில் அமைச்சர்களுக்கான விசேட மாநாடு இன்று காலை 9 மணியளவில் கொழும்பில் நடைபெற்றது.
நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வழ அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களின் தலைமையில் அனைத்து மாகாணங்களின் கடற்றொழில் அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்களுக்கான இவ் மாநாடு இடம்பெற்றது.
இவ் மாநாட்டில் வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பா.டெனிஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டு வடக்கு வாழ் மீனவக் குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைத்தார்.
அங்கு உரையாற்றிய அமைச்சர் தனது உரையில் தெரிவித்ததாவது,
கௌரவ மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன அவர்களே! பிரதியமைச்சர் கௌரவ சரத்குமார குணரத்ன அவர்களே! மற்றும் அனைத்து மாகாணங்களினதும் அமைச்சர்கள் செயலாளர்கள் அனைவருக்கும் இந்நேர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
விசேட விதமாக கௌரவ அமைச்சர் ராஜித சேனாரட்னவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில் இந்த மாத ஆரம்பத்தில் அவரைச் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினேன். அந்த சந்திப்பு மிகவும் பயனுடையதாக அமைந்தது. அந்த சந்திப்பின் போது வடமாகாண சபையுடன் தான் இணைந்து செயற்படவிருப்பதாகவும் விருப்;பம் தெரிவித்;திருந்தார். அதற்காக நான் எனது வாழ்த்துக்களை நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மத்திய அரசானது மாகாண கடற்றொழில் அமைச்சர்களின் மாநாடு ஒன்றை நடாத்தி கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்களை சேர்ந்த மாகாண அமைச்சர்களின் சம்மேளனம் ஒன்றை உருவாக்குவதையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைவதுடன்
கடந்த 30 வருடகால யுத்தத்தினால் எமது வடமாகாணம் மிகவும் பாதிப்படைந்து சகல துறைகளிலும் பின்தள்ளப்பட்டுள்ளது. எனவே எமது மாகாணத்தை துரித கதியில் அபிவிருத்தி செய்ய அனைவரும் முன்வரவேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
அந்த வகையில் எமது மத்திய அமைச்சர் எமது மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார் இன்னும் செய்வார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
எமது மாகாண மக்களில் பெரும்பாலானவர்கள் கடற்றொழில் மற்றும் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டவர்கள், எமது மாகாணத்தில் மீன்படி குடும்பங்கள் உள்ளன. இவர்கள் கடல் வளத்தையே நம்பியுள்ளவர்கள்.
எமது மாகாணத்தில் உள்ள மீன்பிடி குடும்பங்களின் பிள்ளைகள் யுத்தத்தினால் கல்வியில் பின்தங்யுள்ளது மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு;ளளனர். அவர்களுக்கு உதவ வேண்டியது எம் அனைவரினதும் கடமையாகும்.
எமது வடமாகாண மக்களின் பிரச்சினைகள் ஏராளம் உள்ளது. அவற்றையெல்லாம் சொல்ல எனக்கு நேரம் போதாது, இருந்தாலும் முக்கியமான விடயங்கள் சிலவற்றை இங்கு முன்வைக்க விரும்யுகின்றேன்.
இங்கு பிரதானமாக எமது கடல் வளம் அழிக்கப்படுகின்றது அதில் இந்நிய மீனவரின் வருகையும் அவர்களின் றோலிங் முறையிலான மீன்பிடி மூலம் கடலடி வளங்கள் அனைத்தும் அள்ளப்பட்டு செல்கின்றது. அத்துடன் அவர்கள் எமது கண்ணுக்கெட்டிய தூரத்தில் நின்று தொழில் புரிகின்றனர்.
இந்த நிலைமையினை தடுக்க இரு நாடுகளும் இராஜதந்திர முறையினை கையாள்வதன் மூலம் இரு நாடுகளுக்குமான உறவு பாதிப்படையாத வண்ணம் தீர்த்துக்கொள்ளலாம்.
இரண்டாவது விடயமாக. எமது மக்களின் தொழில் முறைகள் கூட சில பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. எமது மக்கள் 18 வகையான தடை செய்யப்பட்ட தொழில்களை செய்து வருகின்றனர். உதாரணமாக டைனமேட், சிலின்டர், சுருக்குவலை போன்றன.
ஆனாலும் எமது மக்கள் சில தொழில்களை பாரம்பரியமாக செய்து வருகின்றனர். உதாரணமாக கூடுவைத்தல். தங்கூசிவலை என்பன இவர்களை இந்த தொழிலை செய்யவிடாது உடனடியாக தடுக்க முடியாது ஏனெனில் இதை நம்பியே பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு உரிய பொருத்தமான தொழில் முறைகளை ஏற்படுத்தி அவர்களை பலப்படுத்துவதுடனாகவே தடை செய்யப்பட்ட தொழில் முறைகளை இல்லாதொழிக்க முடியும். இதற்கு மத்திய அரசு தன்னாலான முழுமுயற்சியையும் மேற்கொள்ள வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.
இதை நாம் செய்யாது விட்டால் எமது எதிர்கால சந்ததி பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும். மேற்கூறிய இரண்டு விடயங்களையும் ஓரளவுக்கு கட்டுப்படுத்த Coast guard அதிகளவு செயற்பட வைக்க வேண்டும் அதனூடாக குறிப்பிட்ட சில தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை கூட கட்டுப்படுத்த முடியும் என நான் நம்புகிறேன்.
அத்தோடு எமது மாகாண மக்களுக்கான பல்வேறு தேவைகளும் உள்ளன. உதாரணமாக வலை, இஞ்சின் போன்றவற்றை மானிய விலையிலும் கடனடிப்படையிலும் வழங்குவதன் மூலம் அவர்களின் தொழில்வாய்பை அதிகரிக்க முடியும்.
அத்துடன் மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் மானியத்தை நிறுத்தி அதற்கு பதிலீடாக பொருட்கள் வழங்க திட்டமிட்டுள்ளதாக மக்கள் அறிந்து அதை நிறுத்த வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்
அடுத்து Multiple day fishing இதை மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் அத்துடன் ஆழ்கடல் மீன்பிடி முறையையும் ஏற்படுத்த வேண்டும். இதற்கு பொருத்தமான கடற்கரைகளில் இறங்கு துறைகளை அமைக்க வேண்டும் . உதாரணம் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு
மீன்கள் உற்பத்தியாகும் காலப்பகுதியில் எமது மீனவர்களை கடலுக்கு செல்ல விடாது நிறுத்தி ஏனைய நாடுகள் மேற்கொள்வது போன்று அக்காலப் பகுதிகளுக்கு மாற்றீடாக அவர்களுக்கு மானிம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
அத்தோடு எமது மக்களுக்கு தேவையான நவீன மீன் பதனிடல் நிலையம் அமைத்தல், மீன்குஞ்சு வளர்ப்புத் திட்டங்களை உருவாக்கல் போன்ற திட்டங்களை எமது மாகாணங்களில் ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
இறுதியாக மீன்பிடி துறையில் மட்டுமல்லாது எல்லா துறைகளிலும் மத்திய மாகாண அரசுகள் இணைந்து செயற்படுவதனூடாகவே எமது நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச்செல்லலாம் என்று கூறி விடைபெறுகின்றேன்.
இந்த வாய்ப்பளித்த கௌரவ அமைச்சர்களிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLblw6.html
153 அகதிகள் இலங்கை கடற்படையினரிடம் கையளிப்பு: கடற்படையினர் நிராகரிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 11:48.52 AM GMT ]
அவுஸ்திரேலியாவின் - கிறிஸ்மஸ்தீவில் உள்ள அகதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி த கார்டியன் பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த படகு குறித்த எந்த ஒரு தகவலும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் ஊடகங்களுக்கு வழங்கப்படவில்லை.
இதனை நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
எனினும் இதனை இலங்கை கடற்படை மறுத்துள்ளதாக இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அகதி அந்தஸ்த்து கோரி வருகின்றவர்களை விசாரணைகள் இன்றி நடுக்கடலில் வைத்து திருப்பி அனுப்புகின்றமையும், அந்த அகதிகள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே அவர்களை திருப்பி அனுப்புகின்றமையும் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்று த கார்டியன் சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLblw7.html
Geen opmerkingen:
Een reactie posten