தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 1 juli 2014

கடந்தகால அழிவுகளை மறக்கவோ, மன்னிக்கவோ முடியாதவர்களாக வாழ்கிறோம்: த.கலையரசன்

சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் ஜேர்மனியில் இராஜதந்திரியாக நியமனம்
[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 12:22.40 PM GMT ]
சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளரான ஆர்.சிவராஜா, ஜேர்மனியில் இலங்கை இராஜதந்திர சேவை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது ஜனாதிபதியின் தமிழ் விவகாரங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கான இணைப்பாளராகப் பணியாற்றி வரும் இவர், ஜேர்மனின் தலைநகர் பேர்லினில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் ஊடக அதிகாரியாக தமது பணிகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்த நியமனத்துக்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது.
1996 ஆம் ஆண்டு ஊடகப் பயணத்தைத் தொடர்ந்த சிவராஜா, இலங்கையின் தமிழ் பத்திரிகைகள் மற்றும் தனியார் தொலைக்காட்சி என்பவற்றில் ஊடகவியலாளராக பணிபுரிந்துள்ளார்.
பின்னர் கடந்த ஆண்டு ஜனாதிபதியின் தமிழ் விவகாரங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கான இணைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLblx0.html
கடந்தகால அழிவுகளை மறக்கவோ, மன்னிக்கவோ முடியாதவர்களாக வாழ்கிறோம்: த.கலையரசன்
[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 12:49.52 PM GMT ]
வட கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பாகங்களிலும் வாழும் தமிழ் மக்கள் கடந்த காலங்களில் அனுபவித்த கஸ்டங்கள், வேதனைகள், அழிவுகளையெல்லாம் மறப்பதற்கோ, மன்னிப்பதற்கோ முடியாதவர்களாகவே வாழ்ந்து வருவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் அவர்களின் காரியாலயத்தில் அண்மையில் மக்கள் சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சி இளைஞர் அணித்தலைவர், மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட த.கலையரசன்,
நீதியானதான ஒரு தீர்வு நிலையானதாக கிடைக்க வேண்டுமென்ற எமது ஒட்டு மொத்த மக்களின் உணர்வுகளை பெரும்பான்மைக் கட்சிகளாக இருந்து ஆட்சி செய்த இரண்டு அரசாங்கங்களும் இதுவரையும் காதில் வாங்கியதாக தெரிவில்லை. அத்துடன், தமிழர் நலன்சார்ந்த எந்தத்தீர்வையும் இதுவரைக்கும் முன்வைக்கவும் இல்லை. இந்த நிலையிலேயே சர்வதேச விசாரணை ஒன்று நடைபெற வேண்டியது காலத்தின் தேவையாகவே இருக்கின்றது. அதன்மூலமாகத்தான் எமது தமிழ் மக்களுக்கு நிகழ்ந்த கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்து, சர்வதேச மட்டத்தில் நிரந்தரத் தீர்வினை பெற முடியும் என எதிர்பார்க்கிறோம்.
ஆனால் இந்த விசாரணையின் போது சாட்சியங்கள் அழிப்போரை தேசத் துரோகிகளாகவே பார்க்க வேண்டியுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போவதாகவும் அரச சார்பு கட்சிகள் இனவாதக் கருத்துக்களையும் அவர்கள் நலன்சார்ந்த அறிக்கைகளையும் வெளியிட்ட வண்ணம் இருக்கின்றார்கள்.
இவ்வாறானவர்கள் ஒன்றை மாத்திரம் புரிந்து கொள்ளவேண்டும். எமது கட்சியோ, எமது மக்களோ தேசத்திற்கு துரோகமானவர்கள் அல்ல.
நாம் தேசத்திற்கு துரோகம் செய்ய நினைக்கவில்லை. உண்மைகள் வெளியே வரவேண்டும். அத்தோடு நிரந்தரமான ஒரு தீர்வு எமக்கு கிடைக்க வேண்டும் என்பதனையே நாம் எதிர்பார்க்கின்றோம்.
சர்வதேச விசாரணையின் போது சாட்சியங்கள் அழிக்கும் மக்களின் பாதுகாப்பை முதலில் சர்வதேசம் உறுதிப்படுத்த வேண்டும். அதனூடாகத் தான் உண்மையான நிலைமைகளை வெளியே கொண்டு வர முடியும்.
எமது அம்பாறை மாவட்டத்திலும் கடந்த யுத்த அனர்த்த காலத்தில் எத்தனையோ கிராமங்கள் பொது மக்கள் அழிவைச் சந்தித்திருக்கின்றனர். இவைகள் இன்றும் எம்முள் ஒரு வலியாகவே இருக்கின்றது.
வடகிழக்கு வாழ் தமிழ்மக்களை பொறுத்தவரையில் அபிவிருத்தியால் மாத்திரம் அடிமை வாழ்க்கையை அகத்திலிருந்து அழிக்க முடியாது. இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
வடக்கு கிழக்கு மாகாணசபைக்குக் கூட அதிகாரங்களை வழங்க மறுக்கின்ற அரசு, எப்படி எமது மக்களின் பிரச்சினைகளுக்கான உண்மையான நீதியான தீர்வை வழங்க போகின்றார்கள் என்ற சந்தேகம் எம்முள்ளே புரையோடிக்கிடக்கின்றது.
காரணம் நாங்கள் இந்த அரசாங்கங்களோடு பல சுற்றுப்பேச்சு வார்த்தைகளுக்குச்சென்று எந்தத்தீர்வும் கிடைக்காத நிலையிலேதான் அதில் இருந்து வெளியேறினோம்.
இப்படியான நிலைமைகளை பார்க்கின்ற போது தான் இன்று எமது கட்சி சர்வதேசத்தின் பக்கம் அதிகம் கவனத்தை செலுத்த வேண்டிய தேவை எழுந்திருக்கின்றது என்பதனை முதலில் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLblx1.html

Geen opmerkingen:

Een reactie posten