தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 23 juli 2014

சர்வதேச எல்லையில் மிதவைகளை அமைப்பது ஏற்புடையதல்ல: ஜெயலலிதா மோடிக்கு கடிதம்!

ஞானசார தேரர் ஒக்டோபரில் அவுஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ளார்!- பொதுபல சேனா
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 12:35.02 AM GMT ]
பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரின் அவுஸ்திரேலிய விஜயம் பெரும்பாலும் எதிர்வரும் ஒக்டோபரில் இடம்பெறும் என்று  அவ்வமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே தெரிவித்தார்.
பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு வீசா வழங்க அமெரிக்கா மறுத்தமையை தொடர்ந்து, அவுஸ்திரேலியாவில் உள்ள முஸ்லிம் தீவிரவாத பிரிவுகளும் அதனை பின்பற்ற முனைவதாக பொதுபலசேனா குற்றம் சுமத்தியுள்ளது.
இதற்காக அவுஸ்திரேலியாவில் உள்ள முஸ்லிம் அமைப்புக்கள் அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு கடிதத்தை அனுப்பியுள்ளது.
அதில் கலகொட ஞானசார தேரருக்கு இலங்கையின் குற்றச்செயல்களில் தொடர்பிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக பொதுபலசேனா குறிப்பிட்டுள்ளது என்று பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே கொழும்பில் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்
அளுத்கமையில் முஸ்லிம்களின் பல வியாபாரத் தளங்களை ஞானசார தேரரே அழித்தார் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அது முழுமையாக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் என்று விதானகே குறிப்பிட்டார்.
இதேவேளை பல நாடுகளில் இருந்து பொதுபல சேனாவுக்கு அழைப்பு வந்த போது வேலைப்பளு காரணமாக அவற்றை நிராகரித்ததாக குறிப்பிட்ட அவர், அவுஸ்திரேலிய விஜயம் பெரும்பாலும் எதிர்வரும் ஒக்டோபரில் இடம்பெறும் என்று தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLckry.html
விமானப் பராமரிப்பு நிலையமொன்றை அமைக்க சீனாவிற்கு அனுமதியளிக்கப்பட்டதா?!– ரணில் - தீர்மானிக்கவில்லை!– ஜீ.எல்.பீரிஸ்
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 12:42.31 AM GMT ]
திருகோணமலையில் விமானப் பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கு சீனாவிற்கு அனுமதியளிக்கப்பட்டதா என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார். 
இலங்கை - இந்திய உடன்படிக்கையை உதாசீனம் செய்து, சீன நிறுவனமொன்றுக்கு விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? இது தொடர்பிலான மெய்யான நிலைப்பாட்டை விளக்க வேண்டும்.
5 பில்லியன் ரூபா செலவில் திருகோணமலையில் விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைக்க சீன நிறுவனமொன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய வெளிவவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்த போது, அமைச்சர் பீரிஸ் இந்த விமான பராமரிப்பு நிலையம் குறித்து பேசியுள்ளார்.
1987ம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மீறும் வகையில் சீன நிறுவனமொன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக் கூடும்.
உடன்படிக்கையில் இரு நாடுகளினதும் பௌதீக ஒருமைப்பாடு, பாதுகாப்பு போன்றன தொடர்பில் விபரிக்கப்பட்டுள்ளது.
விமான பராமரிப்பு நிலையம் மற்றும் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து வெளிவிவகார அமைச்சர் விரிவான விளக்கத்தை அளிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைக்க தீர்மானிக்கவில்லை – ஜீ.எல்.பீரிஸ்
திருகோணமலை நகரில் விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவிததுள்ளார்.
ஐந்து பில்லியன் ரூபா செலவில் விமான பராமரிப்பு நிலையம் ஒன்றை அரசாங்கம் திருகோணமலையில் ஆரம்பிக்க உள்ளதாக ரணில் குற்றம் சுமத்தியிருந்தார்.
எனினும், ரணில் விக்ரமசிங்கவின் இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இ;வ்வாறான பராமரிப்பு நிலையமொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது உண்மைதான். எனினும், எங்கு அமைப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்படவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தை குழப்பி அரசியல் இலாபமீட்ட முயற்சிக்கின்றார் என அமைச்சர் பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLckrz.html
சர்வதேச எல்லையில் மிதவைகளை அமைப்பது ஏற்புடையதல்ல: ஜெயலலிதா மோடிக்கு கடிதம்
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 01:04.55 AM GMT ]
தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண சர்வதேச எல்லையில் மிதவைகளை அமைப்பது ஏற்புடையதல்ல என தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளதாக ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிப்பதில் அரசு முனைப்புடன் செயல்படுகிறது. இது வரவேற்றப்பட வேண்டிய விடயம்.
இதேவேளை கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இந்திய - இலங்கை மீனவர்கள் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில செயலாக்கத் திட்டங்கள் மாநில அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் முதன்மையாக இடம் பெற்றிருப்பது, சர்வதேச கடல் எல்லையில் மிதவைகளை அமைப்பது என்பதாகும்.
ஏற்கனவே தங்களிடம் நேரில் அளித்த மனுவிலும் சரி இதற்கு முன்னர் அளித்த கடிதங்களிலும் சரி, இலங்கைக்கு சட்டவிரோதமாக தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவில் இந்தியாவின் உரிமையை மீட்டு எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள போதும், சர்வதேச கடல் எல்லையில் மிதவைகளை பொருத்துவது தொடர்பில் ஆலோசனைகளை வழங்கவில்லை.
கச்சத்தீவு தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கிற்கும் சர்வதேச மிதவைக்கும் தொடர்பு இருக்கிறது.
தமிழக அரசு, சர்வதேச கடல் எல்லையில் மிதவைகளை பொருத்தும் முடிவை பிரச்சினைக்கு தீர்வாக அங்கீகரிக்கவில்லை.
எனவே வழக்கு நிலுவையில் இருக்கும் போது, சர்வதேச எல்லையில் மிதவைகளை பொருத்தும் யோசனை ஏற்புடையது அல்ல என்று ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLckr1.html

Geen opmerkingen:

Een reactie posten