மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் தந்தையான வாழைச்சேனை புதுக்குடியிருப்பில் வசிக்கும் இரத்தினம் சீனித்தம்பி என்பவரின் நல்லடக்கம் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் நேற்று மாலை இடம்பெற்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இந்திரகுமார் பிரசன்னா, இரா.துரைரெட்ணம், த.கலையரசன், எஸ்.இராஜேஸ்வரன் மற்றும் கட்சியின் பிரமுகர்கள், பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள், பிரதேச சபையினர்,
வடக்கு, கிழக்கு, கொழுப்பு, மலையகம் உட்பட்ட பகுதி இந்து அமைப்புக்கள் மற்றும் ஏனைய பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள வர்த்த சங்கத்தினர் மற்றும் வர்த்தகர்கள், வைத்தியர்கள், ஆலயங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான இந்திரகுமார் பிரசன்னா, இரா.துரைரெட்ணம், எஸ்.கலையரசன், எஸ்.இராஜேஸ்வரன், கல்முனை நகரசபை எதிர்க்கட்சி தலைவர் அ.அமர்தலிங்கம்,
யாழ்ப்பாணம் சைவ மகா சபை பொதுச் செயலாளர் வைத்திய கலாநிதி நந்தகுமார், திருகோணமலை சைவமகா சபைத் தலைவர் ஆன்மீகதுறவி திருவாளர் கலியுகவரதன், கதிரவெளி ஓய்வு பெற்ற கிராம அதிகாரி கு.சிங்காரவேல், மட்டக்களப்பு இந்து வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.அமிர்தலிங்கம், கிழக்கு இந்து ஒன்றிய செயலாளர் கதிர்பாரதிதாசன், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை செயலாளர் சா.மதிசுதன், பொருளாளர் நா.புவனசுந்தரம், மட்டக்களப்பு காந்திசேவா சங்க தலைவர் எஸ்.செல்வேந்திரன்,
ஈச்சிலம்பற்று சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் இ.பரமசிவலிங்கம், இலங்கை தமிழரசுக் கட்சி மட்டக்களப்பு கிளை செயலாளர் சிவம் பாக்கியநாதன், தேத்தாத்தீவு ரமணமகரிஷி அமைப்பு பொருளாளர் வ.செல்வராஜா, திருப்பழுகாமம் கண்ணன் இந்து இளைஞர் மன்ற செயலாளர் க.இராசகுமார், ஊடகவியலாளர் எஸ்.ரவீந்திரன், ஈச்சிலம்பற்று ரி.திலப்குமார் உட்பட பலரின் இரங்கலுரையும் இடம்பெற்றது.
வாழைச்சேனை புதுக்குடியிருப்பிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து இறுதிக் கிரியைகள் இடம்பெற்று பின்னர் வாழைச்சேனை இந்து மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ்வஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் மற்றும் இரங்கல் உரை வழங்கியோர், தொலைபேசி மூலமும், நேரடியாகவும், தொலைநகல் மூலமும், மின்னஞ்சல் மூலமும் தமது அனுதாபத்தை தெரிவித்த அன்பர்களுக்கும் தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான யோகேஸ்வரன் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLckr5.html
Geen opmerkingen:
Een reactie posten