தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 4 juli 2014

ஆகாயத் தாமரை செடிகளிலிருந்து டீசல் தயாரிக்கும் இலங்கை!

இலங்கையில் நீர் நிலைகளில் வளரும் ஆகாயத் தாமரை செடிகள் மூலம் டீசல் தயாரிக்கும் முறையை விரைவில் அறிமுகப்படுத்த தயாராக இருப்பதாக, வர்த்தகம் மற்றும் கைத்தொழிற்துறை பிரதியமைச்சர் லக்ஷ்மன் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
களுத்துறை நாவுல பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எரிபொருளுக்காக நாட்டில் செலவிடப்படும் பணத்தை குறைப்பதற்காக ஆகாயத் தாமரை செடியில் இருந்து டீசல் தயாரிக்கும் வெற்றிகரமான முறையை இலங்கையில் அறிமுகப்படுத்த தயாராக இருகின்றேன்.
75 தொன் ஆகாயத் தாமரை செடியில் இருந்து 24 ஆயிரம் லீற்றர் டீசல் தயாரிக்க முடியும்.
தென் ஆப்பிரிக்காவின் அபிவிருத்தித் திட்டமாக ஜனாதிபதியுடன் பேசி இலங்கையில் அதனை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.
நாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களில் காணப்படும் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இவ்வாறான நீர் செடிகள் மூலம் எரிபொருள் தயாரிக்க முடிந்தால் அது நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கியமானது என தான் நம்புவதாகவும் பிரதியமைச்சர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjt2.html
இஸ்லாம் அடிப்படைவாதத்தால் சிங்களவர்கள் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்: மெதகம தம்மானந்த தேரர்
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 07:32.28 AM GMT ]
இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் ஏற்பட்டுள்ளதால் பௌத்த பிக்குகளும், சிங்களவர்களும் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருவதாகவும் அஸ்கிரிய பௌத்த பீடத்தின் சங்க தெரிவுக்குழுவின் உறுப்பினர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் பௌத்த பிக்குகளும் சிங்களவர்களும் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
அகில இலங்கை பௌத்த சம்மேளன மண்டபத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் இன்று மோதலான சூழல் ஏற்பட்டுள்ளது. நாடு மற்றும் இனத்தின் எதிர்காலம் தொடர்பில் நாம் விடயங்களை தெளிவுப்படுத்த வேண்டும்.
பிக்குகள் மற்றும் சிங்களவர்களுக்கு எதிராக இடையூறுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதம் உள்ளது என்பது மிக தெளிவானது. பல பிரதேசங்களில் இவர்கள் உள்ளனர்.
பேருவளை சம்பவம் அவர்களின் செயற்பாடுகளில் ஒன்று. இந்த சம்பவங்களில் பௌத்த சிங்கள மக்களின் வீடுகளே அழிந்தன. எனினும் இதனை ஊடகங்கள் சரியாக வெளியிடவில்லை.
பிக்கு ஒருவர் தவறு செய்து மாட்டிக்கொண்டால், அவரது பெயர், கிராம், அவர் இருக்கும் விகாரை உட்பட விபரங்களுடன் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன.
போதைப் பொருள் விற்பனையாளர் மற்றும் குற்றவாளிகள் குறித்து இப்படி செய்திகளை வெளியிடுவதில்லை.
மன்னாரில் வில்பத்துவில் இன்று என்ன நடக்கின்றது. நாட்டில் சிங்கள பௌத்த மக்கள் அழிவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் பல நிறுவனங்கள் இதற்கு உதவி வருகின்றன.
பௌத்த பிக்கு நாட்டில் நடக்கும் இந்த அழிவுகள் பற்றி குரல் கொடுத்தால் அவர்கள் குற்றவாளிகளாக மாற்றப்படுகின்றனர் எனவும் மெதகம தம்மானந்த தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjt6.html

Geen opmerkingen:

Een reactie posten