[ புதன்கிழமை, 23 யூலை 2014, 04:35.41 AM GMT ]
இது தொடர்பில் சம்மாந்துறைப் பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதும் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ தலைமையிலாக பொலிஸ் குழு ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஆலய கர்ப்பக்கிரக நுழைவாயில் தகர்க்கப்பட்டிருக்கிறது. கதவிலுள்ள இரும்பு பட்டி உடைத்து வளைக்கப்பட்டிருப்பதோடு பூட்டுள்ள பகுதி திருகி உடைக்கப்பட்டுள்ளது.
ஆலய வளாகத்திலிருந்த மற்றுமொரு களஞ்சியசாலைகள் இரண்டு உடைக்கப்பட்டுள்ளன. பூட்டுகள் அந்த இடத்திலேயே வீசப்பட்டுக்கிடந்தன. ஆலயத்தினுள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருக்கிறது.
ஆலய வளாகத்திலுள்ள கிணற்றிலுள்ள கம்பி கழற்றி திருகி அருகிலுள்ள வயலுக்குள் தூக்கிவீசப்பட்டுள்ளது.
மேலும் கற்பூரம் எரிய வைக்கும் இரும்புத்தாங்கியும் அடியோடு கழற்றி வயலுக்குள் தூக்கிவீசப்பட்டுக் கிடந்தது. அவற்றையயெல்லாம் பொலிஸார் முன்னிலையில் ஆலய நிர்வாகத்தினர் மீட்டனர்.
ஆலய தலைவர் கோ.கமலநாதன் கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாலயம் கி.பி.12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
நாகங்களால் நிறைந்தது. இரவில் இங்கு யாரும் நிற்பதில்லை.
காலையில் ஆலயத்திற்கு வந்தபோது ஆலயம் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியும் வேதனையும் ஆத்திரமும் அடைந்தேன்
மறுகணம் சம்மாந்துறைப்பொலிஸாருக்கு அறிவித்தோம் என்றார்.
இது வேணடுமென்றே விசமிகளால் செய்யப்பட்ட வேலையாக இருக்கலாமென பொலிஸார் தெரிவித்தனர்.
இனமுறுகலை இப்பகுதியில் ஏற்படுத்த முனைவோரின் நடவடிக்கையாக இது இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLcksy.html
வாழைச்சேனையில் அரிய வகை மீனினம் கண்டுபிடிப்பு - ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்ற இருவரை காணவில்லை
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 04:39.21 AM GMT ]
வாழைச்சேனை வாவியிலிருந்து ஐம்பது கிலோ மீற்றர் தூரத்தில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற அந்த பகுதியைச் சேர்ந்த முஹைதீன் பாவா நிஸார் என்பவரின் படகில் சென்றவர்களே புதிய வகை மீனைப் பிடித்து வந்துள்ளனர்.
கறுப்பும், சாம்பல் நிறமும் கலந்த நிறத்திலுள்ள மீன் 7.5 கிலோ கிராம் எடையும், நான்கு அடி நீளமும் கொண்டதாக காணப்படுகிறது.
இந்த புதிய வகை மீன் பிடிபட்டுள்ளதாக பிரதேச கடற்றொழில் பரிசோதகருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், அவர்கள் மீனைப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லவுள்ளதாகவும் படகின் உரிமையாளர் முஹைதீன் பாவா நிஸார் தெரிவித்தார்.
ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்ற இருவரை காணவில்லை
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனையிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிப்பதற்காக படகொன்றில் சென்ற மூன்று பேரில் இருவர் காணாமல் போயுள்ளதாக படகின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் நேற்றிரவு முறைப்பாடு செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், எஞ்சிய ஒருவர் படகுடன் கரைக்கு திரும்பியதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
காவத்தமுனை பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையான யூசுப்லெப்பை தாஹிர் (வயது 38), வாழைச்சேனை மீன்பிடி இலாகா வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான முஹமட் பௌசுதீன் அறபாத் (வயது 20) ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.
இதேவேளை, இப்படகுடன் திரும்பிய நபரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
நேற்றையதினம் (22) மதியம் இப்படகில் சென்ற தாங்கள் மூவரும் மதுபானம் அருந்தியதாகவும் இதன்போது, காணாமல் போனதாகக் கூறப்படும் இருவரும் சண்டையிட்டனர் என்றும் சண்டையிட்ட இருவரையும் தான் சமாதானப்படுத்திவிட்டு உறங்கியதாகவும் சிறிது நேரத்தில் கண் விழித்துப் பார்த்தபோது, காணாமல் போன இருவரில் ஒருவர் வேறொரு படகில் ஏறிச் செல்வதைக் தான் கண்டதாகவும் ஆழ்கடலிலிருந்து கரைக்கு வந்த மற்றுமொரு படகின் உதவியுடன் தங்களது படகை தான் கரைக்கு கொண்டுவந்ததாகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த படகில் இரத்தக்கறை படிந்து கிடப்பதாகவும் பொலிஸார் கூறினர்.
இதற்கிடையில், காணாமல் போன இருவர் தொடர்பிலும் அவர்களது உறவினர்களும் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLcksz.html
ஹற்றனில் 200 அடி பள்ளத்தில் பாய்ந்து பஸ் விபத்து
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 04:55.19 AM GMT ]
நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் சாரதியும் நடத்துனரும் பஸ்ஸை நிறுத்தி வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
பஸ் மோதியில் வீடு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளது. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLcks0.html
பாலியல் வல்லுறவு குற்றவாளிகளை விடுதலை செய்யுமாறு பொலிஸாருக்கு அழுத்தம் கொடுக்கும் பிரதியமைச்சர்
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 06:25.22 AM GMT ]
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தங்கும் விடுதியில் அண்மையில் நடந்த பாலியல் வல்லுறவுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் நேற்று சபுகஸ்கந்த பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு பிரதியமைச்சர் பொலிஸாருக்கு அழுத்தங்களை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
சந்தேக நபர்கள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் ஆதரவாளர்கள் என தெரியவந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLcks2.html
Geen opmerkingen:
Een reactie posten