தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 23 juli 2014

ஈபிடிபி யோகேஸ்வரியின் ஊழலுக்கான ஆதாரங்கள் அம்பலம்! விரைவில் விசாரணை நடத்த நடவடிக்கை

கொழும்பிலேயே அதிகளவில் ஏழைகள் இருக்கின்றார்கள்: அமைச்சர் தினேஷ் குணவர்தன
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 06:44.30 AM GMT ]
இலங்கையில் கொழும்பின் வடக்கு தொகுதியிலேயே உயர்கல்வியை பெற முடியாத பிள்ளைகள் அதிகளவில் இருப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்
கொழும்பில் அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றிலே அவர் இதனை கூறியுள்ளார்.
கொழும்பில் மிகப் பெரிய செல்வந்தர்கள் வாழ்ந்து வருகின்றனர், அதேபோல் பெரும் எண்ணிக்கையில் வறிய மக்களும் கொழும்பில் வாழ்ந்து வருகின்றனர் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அமைச்சர் தினேஷ் குணவர்தன கடந்த காலம் முழுவதும் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார்.
இந்த நிலையில், கோத்தபாய ராஜபக்ஷவின் கொழும்பு நகர அலங்காரத்தின் மூலம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியாது என்று அமைச்சர் மறைமுகமாக கூறியுள்ளதன் மூலம் ராஜபக்ஷ நிர்வாகத்திற்கு எதிராக கடும் தாக்குதலை தொடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
ஏற்கனவே ராஜபக்ஷ அரசின் கண்காட்சி அபிவிருத்தியை விமர்சித்து வரும் அரசின் கூட்டணிக் கட்சிகள் சில, ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்குமாறு பகிரங்கமாக விமர்சித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLcks3.html

யாழ். பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை- வெல்லம்பிட்டியில் ஒருவர் கொலை
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 03:48.29 AM GMT ]
யாழ். பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவன் ஒருவர் இன்று அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கலைப்பீட முதலாம் வருடத்தில் கல்வி பயிலும் நெல்லியடி பிரதேசத்தைச் சேர்ந்த நாகராசா சுதாகரன் (வயது 21) என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
குறித்த மாணவன், தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதேவேளை, இன்று அதிகாலை 4 மணியளவில் தனது முகப்புத்தகத்தில் "மறு பிறவி இருந்தால் மீண்டும் வருகிறேன் உன் மடியில் சாய்ந்து உயிர் பிரியும் என்றால்" என்று அவர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாணவனின் தற்கொலைக்கு காதல் முறிவே காரணம் எனவும் அவரின் இன்று பிறந்த தினம் எனவும் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வெல்லம்பிட்டியில் ஒருவர் கொலை
கொழும்பு வெல்லம்பிட்டி, சிங்கபுர பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட நபர் சிலருடன் தகராறை ஏற்படுத்திக் கொண்டவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபர், மற்றுமொரு நபர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்திருந்ததாகவும் அவருக்கு நெருக்கமான நபர்களே மேற்படி நபரை கொலை செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொலையுண்டவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எவ்வாறாயினும் இந்த கொலை சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. வெல்லம்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLckr7.html


ஈபிடிபி யோகேஸ்வரியின் ஊழலுக்கான ஆதாரங்கள் அம்பலம்! விரைவில் விசாரணை நடத்த நடவடிக்கை
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 07:04.20 AM GMT ]
யாழ் மாநகர சபையில் ஊழல் மலிந்து விட்டது. மாகாண சபையின் அதிகாரத்தை பயன்படுத்தி விரைவில் விசாரணை ஆரம்பிக்கப்படும் என வட மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரெட்னம் தெரிவித்தார்.
வடமாகாண சபையை முடக்குவதில் அரசு கடும் பிரயத்தனம் செய்கிறது. ஆளுனர் விடயத்தில் அரசின் செயற்பாடு இதற்கு நல்ல எடுத்துக்காட்டு, இதனையும் எதிர்த்து நாம் போராடுவேம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரெட்னம் லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLcks5.html

Geen opmerkingen:

Een reactie posten