மலேசிய விமானத்தை, ரஷ்ய ஆதரவு புரட்சிப்படையினர் தவறுதலாக சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்று அமெரிக்கா நம்புகின்றது.
கடந்த 17ம் திகதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போயிங் 777 விமானம் ரஷ்ய கிளர்ச்சியாளர்களால் கிழக்கு உக்ரைன் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
இதில் பயணித்த 298 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாய் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் விமானத்தை ரஷ்ய ஆதரவு புரட்சிப்படை தான் தாக்கியது என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்ததுள்ளது.
ஆனால் ரஷ்ய ஆதரவு புரட்சிப்படையினர், பயணிகள் விமானம் என்று தெரியாமல் மலேசிய விமானத்தை தாக்கியிருக்கக்கூடும் என்று அமெரிக்கா நம்புகிறது.
ஏனெனில் விமானம் சுடப்பட்டபோது கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு புரட்சிப்படையினர் நின்று கொண்டிருந்தனர் என்றாலும் அவர்கள் தான் ஏவுகணையை வீசினர் என்பதற்கான ஆதாரம் அமெரிக்க உளவுத்துறையிடம் இல்லை என்று அமெரிக்க அதிகாரி கூறியுள்ளார்.
சுடப்பட்ட மலேசிய விமானம்: சடலங்கள் அனுப்பும் உக்ரைன் அரசு
மலேசிய விமானத்தில் இறந்தவர்களின் சடலங்களை விமானம் மூலம் அவரவர் நாடுகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 17ம் திகதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போயிங் 777 விமானம் ரஷ்ய கிளர்ச்சியாளர்களால் கிழக்கு உக்ரைன் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
இதில் பயணித்த 298 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாய் உயிரிழந்துள்ளனர்.
விமான விபத்தில் இறந்த 198 பேரின் பிணங்களையும் கைபற்றிய ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்பு அந்நாட்டு அரசிடம் கருப்பு பெட்டி மற்றும் சடலங்களை ஒப்படைத்துள்ளது.
இந்நிலையில் இதுவரை மீட்பு படையினர் கண்டெடுத்த 280 சடலங்களும் முதலில் ரயில்களில் ஏற்றி, பின்பு அவரவர் நாட்டிற்கு விமானத்தின் மூலம் அனுப்பி வைக்க உக்ரைன் அரசு தீர்மானித்துள்ளது.
|
Geen opmerkingen:
Een reactie posten