தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 1 juli 2014

சிங்கக்குட்டி மீது காட்டிய இரக்கத்தை ஈழத்தமிழர் மீது காட்டத் தவறிய பான் கீ மூன்!

வல்வெட்டித்துறை நகர சபையில் வலுவடைந்துள்ள முறுகல்: 5 உறுப்பினர்களுக்கு எதிராக மானநஷ்ட வழக்கு
[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 01:18.56 PM GMT ]
யாழ். வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஐந்து பேருக்கிடையில் கடந்த 2012ம் ஆண்டு தொடக்கம் நடந்துவரும் முரண்பாடுகள் சமகாலத்தில் அதிகரித்திருக்கும் நிலையில், நகரசபை தலைவர் மேற்குறித்த உறுப்பினர்களுக்கு எதிராக நீதிமன்றில் மானநஷ்ட வழக்கு பதிவு செய்துள்ளார்.
நகர சபையில் கடந்த 2012ம் ஆண்டு தொடக்கம் தலைவர் ந.அனந்தராஜ் மற்றும் உபதலைவர் சதீஸ், குலநாயகம் உள்ளிட்ட 5 உறுப்பினர்களுக்குமிடையில் தொடர்ச்சியான முரண்பாடுகள் நிலவி வருகின்றன.
குறித்த உறுப்பினர்கள் தலைவர் ஊழல் புரிவதாக குற்றம்சாட்டிவரும் நிலையில், அவர்கள் ஐந்து பேரும் தலைமை பதவிக்காகவே தன்மீது குற்றம் சுமத்துவதாக தலைவர் குற்றம்சாட்டி வருகின்றார்.
இந்நிலையில் கடந்த மாதம் இடம்பெற்ற நகர சபையின் மாதாந்த அமர்வில் ஊழியர்களுக்கான கொடுப்பனவு, வாகனங்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு ஆகியவற்றுக்கு குறித்த 5 உறுப்பினர்களும் ஒப்புதல் வழங்க மறுப்புத் தெரிவித்தனர்.
இந்தநிலையில் சபையின் அனைத்துக் கொடுப்பனவுகளும், மக்கள் நல செயற்றிட்டங்களும் முடக்கம் கண்டிருக்கின்றன.
இவ்வாறான முரண்பாடுகள் தொடர்பாக பல தடவைகள் ஊடகங்கள் வாயிலாகவும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கும் சுட்டிக்காட்டப்பட்டபோதும் இதுவரையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படாத நிலையே தொடர்ந்தும் வருகின்றது.
இவ்வாறான முரண்பாடு மிக்க சூழ்நிலையில் நாளைய தினம் மீண்டும் நகர சபையின் மாதாந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
இதற்குள் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக ஒவ்வொரு உறுப்பினர்களிடமிருந்தும் தலா 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு கோரி நகரசபை தலைவர் இன்றைய தினம் குறித்த சபையின் உறுப்பினர் குலநாயகத்திற்கு சட்டத்தரணி மூலமாக நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த வழக்கினை எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாக ஐந்து உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLblx2.html
சிங்கக்குட்டி மீது காட்டிய இரக்கத்தை ஈழத்தமிழர் மீது காட்டத் தவறிய பான் கீ மூன்!
[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 02:32.23 PM GMT ] [ valampurii.com ]
கென்யா நாட்டில் உள்ள தேசிய பூங்காவில் அநாதரவாகத் திரிந்த ஆறுமாத பெண் சிங்கக் குட்டி ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தத்தெடுத்து, அந்த நாட்டில் உள்ள வனவிலங்குக் காப்பகத்தில் ஒப்படைத்தார் என்ற செய்தி உலக ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
அநாதரவாகத் திரிந்த சிங்கக் குட்டி மீது பான் கீ மூன் இரக்கம் கொண்டமை வரவேற்கத்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபை என்பது தனித்து மானிடத்தின் நலன் பேணும் அமைப்பு மட்டுமல்ல, அது ஜீவகாருண்யம் மிக்க அமைப்பு என்பதை நிரூபிப்பதாகவும் பான் கீ மூனின் மேற்குறித்த செயல் அமைந்துள்ளதெனப் பொருள் கொள்ளலாம்.
அநாதரவாகத் திரிந்த சிங்கக் குட்டியை தத்தெடுத்த ஐ.நா செயலர் பான் கீ மூன், இலங்கையில் சிங்கத்திற்கும் புலிக்கும் நடந்த சண்டையில் அநாதரவாகிப் போன அப்பாவித் தமிழ்க் குழந்தைகளை- சிறுவர்களை மறந்து போனமை, காப்பாற்றத் தவறிப் போனமை ஏன்? என்பது தான் தெரியவில்லை.
சிங்கக் குட்டி மீது காட்டிய இரக்கத்தை அவர் இலங்கைத் தமிழ்க் குழந்தைகள் மீதும் காட்டியிருப்பாராயின், எத்தனையோ குழந்தைகள் இன்று தங்கள் பெற்றோர்களுடன் தத்தம் வீடுகளில் வாழ்ந்திருப்பர்.
வாழவேண்டிய எத்தனையோ குழந்தைகள் போர் சூழ்ந்த மண்ணில் பாதுகாக்கப்பட்டிருப்பர்.
ஆம், இலங்கை அரசு விடுதலைப் புலிகளுடன் நடத்திய வன்னிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பலியாகிப் போயினர்.
யுத்த காலத்தில் தங்களைக் காப்பாற்றுமாறு, சர்வதேச தொண்டு நிறுவனங்களிடம் தமிழ் மக்கள் கையேந்தி, மன்றாடி நின்ற வேளை, ஓட்டமும் நடையுமாக அந்த அமைப்புகள் வன்னியை விட்டு, தமிழ் மக்களை அந்தரிக்க விட்டு சென்றதை எங்ஙனம் மறக்கமுடியும்?
அன்று பான் கீ மூன் ஈழத் தமிழர்கள் மீது சிறு கவனம் செலுத்தியிருந்தால், இரக்கம் கொண்டிருந்தால் இன்று எத்தனையோ தமிழ்க் குடும்பங்கள் கண்ணீரும் கம்பலையுமாக வாழும் பரிதாப நிலை ஏற்பட்டிருக்க மாட்டாது.
இலங்கை விடயத்தில் ஐ.நா சபை தவறிழைத்து விட்டது என்று கூறி தனது பொறுப்பான பதவியை பொறுப்பற்றதாக்கிய பான் கீ மூன் சிங்கக் குட்டி மீது இரக்கம் காட்டியதுதான் இப்போது பெரும் அதிசயம்.
எதுவாயினும் சில தலைவர்கள், காலநேரம் அறிந்து தங்கள் உதவியை, பரோபகாரத்தை செய்வார்கள். ஆனால் இன்னும் சிலரோ செய்ய வேண்டியது இருக்க, செய்யத் தேவையில்லாத வேலையில் தங்களை நுழைத்து அதற்கூடாக தாங்கள் விட்ட தவறை திசை திருப்ப, சரிப்படுத்த முற்படுவார்கள்.
இலங்கையில் நடந்த வன்னிப் போரில் தமிழ் மக்களைக் காப்பாற்றத் தவறிய பான் கீ மூன், சிங்கக் குட்டி மீது இரக்கம் கொண்டது கூட மேற்குறிப்பிட்டது போல தவறைத் திசை திருப்பும் வகுதியைச் சார்ந்ததாக இருக்கலாம்.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLblx5.html

Geen opmerkingen:

Een reactie posten