நன்கு கணிப்பீடு செய்யப்பட்டு உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்: ஜனாதிபதி
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 12:30.09 PM GMT ]
பேருவளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கொன்றில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
நன்கு கணித்து சிறந்த நேரத்தில் சிறந்த தேர்தல் நடத்தப்படும். முதலில் நடத்தப்படப் போவது, பொதுத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா என சிலர் கேட்கின்றனர்.
நாங்கள் எந்த தேர்தலுக்கும் தயாராக இருக்கின்றோம். சிறந்த நேரத்தை பார்த்து உரிய தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நன்கு கணித்து சிறந்த நேரத்தில் சிறந்த தேர்தல் நடத்தப்படும். முதலில் நடத்தப்படப் போவது, பொதுத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா என சிலர் கேட்கின்றனர்.
நாங்கள் எந்த தேர்தலுக்கும் தயாராக இருக்கின்றோம். சிறந்த நேரத்தை பார்த்து உரிய தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் அகதி படகை இலங்கைக்கு திருப்பியமையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 08:23.42 AM GMT ]
இது தொடர்பாக கருத்து தெரிவித்த Ian Rintoul ,
இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கான சமவுரிமை மற்றும் அவர்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்வுகள் இதுவரைக்கும் வழங்கப்படவில்லை.
தற்போதும் கடத்தல்கள் புலனாய்வு விசாரணைகள் என தமிழர்களுக்கு சரியான முறையில் இலங்கையில் பாதுகாப்பு இல்லை அதனால் தங்களது உயிரை பாதுகாக்கவே நாடு நாடாக இடம்பெயர்கின்றனர்.
அது மட்டுமன்றி இலங்கையில் வாழ்வதற்க்கான உரிமை மறுக்கப்பட்டதால் தான் அவர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக சென்றிருந்தார்கள். இந்தியாவில் இருந்து வந்தவர்களை மீண்டும் இனப்படுகொலையாளியான மகிந்தவிடம் ஒப்படைப்பது மாபெரும் தவறு என தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டமானது எதிர்வரும் 7 ம் திகதி சிட்னியில் உள்ள குடிவரவு அலுவலகத்துக்கு முன்னால் சரியாக 12 மணியளவில் இடம்பெறவுள்ளதென தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbkx4.html
அவுஸ்திரேலியா நோக்கி இந்தியாவிலிருந்து ஆபத்தான தான கடற்பயணத்தை மேற்காண்டிருந்த 153 இலங்கை தமிழர்களையும் ஏற்றிய இரு படகுகள் புதன்கிழமை மாலை இலங்கையை சென்றடையவிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
153 இலங்கை தமிழர்களையும் ஏற்றிய இருபடகுகள் புதன்கிழமை மாலை இலங்கையை சென்றடையும்
[ Jul 03, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 5455 ]
இணைப்பு 02- அவுஸ்திரேலியா நோக்கி 153 புகலிக் கோரிக்கையாளர்களை பொறுப்பேற்க இலங்கையிலிருந்து கடற்படைக்கப்பல் :
அவுஸ்திரேலியா நோக்கி இந்தியாவிலிருந்து ஆபத்தான கடற்பயணத்தை மேற்காண்டிருந்த 153 இலங்கை தமிழர்களையும் நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக இலங்கை கடற்படை கப்பலொன்று அவுஸ்திரேலியா சென்றுகொண்டிருப்பதை இலங்கை அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். இதற்காக தமது கப்பலொன்று அவுஸ்திரேலியா சென்றுகொண்டிருக்கிறது, மோசமான காலநிலை காரணமாக ஒரு கப்பலில் இருப்பவர்களை மற்றக் கப்பலிற்கு மாற்றுவது மிகக்கடினமான நடவடிக்கையாக அமையப்போகின்றது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா நோக்கிப் பயனித்த 153 தமிழர்களும் இலங்கை கடற்படையிடம் ஒப்பபடைக்கப்பட்டு இருக்கலாம்? அவுஸ்திரேலியா நோக்கி இந்தியாவிலிருந்து ஆபத்தான கடற்பயணத்தை மேற்காண்டிருந்த 153 இலங்கை தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது மர்மாக உள்ள அதேவேளை இவர்களை அவுஸ்திரேலிய கடற்படையினர் இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. படகிலிருந்தவர்கள் அனைவரும் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டு உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவலகள் தெரிவிப்பதாக கிறிஸ்மஸ் தீவின் ஜனாதிபதி கோர்டன் தோம்சன் தெரிவித்துள்ளார். படகிலிருந்தவர்கள் எவரும் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டதற்கான அறிகுறிகளோ அல்லது படகோ தென்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்
http://www.athirvu.com/newsdetail/335.html
Geen opmerkingen:
Een reactie posten