இத்தகவலை அடுத்து நேற்று நள்ளிரவு தொடக்கம் ஆயுதம் ஏந்திய பொலிஸ் படையினர் தமிழக கரையோர மாவட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குலேச்சல் மற்றும் தேங்காய்பட்டினம் பகுதிகளில் மேலதிக சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுற்றுலா பிரசித்த பிரதேசங்களான கன்னியாக்குமரி அம்மன் கோவில்- விவேகானந்த பாறை- திருவள்ளுவர் சிலை பகுதிகளில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் கடமையில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கு இடமான ஆட்கள் நடமாட்டம் இருப்பின் அறியத்தருமாறு பொலிஸார் குறித்த பகுதி பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் வாகனங்கள் அனைத்தும் பொலிஸாரினால் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த பகுதிகளில் உள்ள சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
கடலுக்குச் செல்லும் மீனவர்கள் குழுவாகச் செல்ல வேண்டும் எனவும் தீவிரவாதிகள் படகுகள் மீது தாக்குதல் மேற்கொண்டு அவற்றை கடத்தக்கூடும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவர்கள் இன்னும் இலங்கையில் தான் இருக்கிறார்கள் என்பது இந்திய றோ அதிகரிகளுக்கு தெரியும். இத்தீவிரவாதிகள் யாழில் அல்லது முல்லைத்தீவில் தங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவர்களுக்கு இலங்கை இராணுவத்தின் உதவி உள்ளதா என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
http://www.athirvu.com/newsdetail/348.html
Geen opmerkingen:
Een reactie posten