அரசிற்கு ஒத்துளையா உயர் அதிகாரிகளை வெளியேற்ற முயற்சி?
அரசாங்கத்திற்கு உரிய முறையில் ஒத்துழைப்பு வழங்காத உயர் அதிகாரிகளை வெளியேற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதன் ஓர் கட்டமாக காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் பதவி விலக்கவோ, இடமாற்றத்திற்கு உள்ளாகவோ அல்லது கட்டாய ஓய்வு வழங்கப்படவோ நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அலுத்கம பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற இன வன்முறைகளின் போது பக்கச்சார்பற்ற முறையில் நடவடிக்கை எடுக்க முயற்சித்தமை அரசாங்கத்தை அதிருப்தி அடையச் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, 2016ம் ஆண்டிலேயே காவல்துறை மா அதிபரின் பதவிக் காலம் பூர்த்தியாகவுள்ளது. எனினும், அதற்கு முன்னதாகவே அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/77404.html
பயங்கரவாதத்திற்கு இடமளிக்கப்படக் கூடாது மகிந்தர்…
அண்மையில் நாட்டில் சில சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் இவை தனிப்பட்ட சம்பவங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடும்போக்காளர்கள் அல்லது அரசியல்வாதிகளின் தேவைகளுக்காகவே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நம் அனைவருக்கும் ஓர் கலாச்சாரம் இருப்பதாகவும் அதனை பாதுகாக்க வேண்டியது அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அனைத் தரப்பினருக்கும் இடையிலான கலாச்சாரப் பிணைப்பை பாதுகாக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளினால் பாரியளவு பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிட்டதாகவும் அதனை எவரும் மறந்துவிடக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரலாற்று ரீதியாக இன சமூகங்களுக்கு இடையில் நிலவி வரும் பிணைப்பு வலுவானது எனவும் அது இன்றும் தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/77407.html
Geen opmerkingen:
Een reactie posten