[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 07:25.36 AM GMT ]
காதல் விவகாரங்களே இதற்கு அதிகளவில் காரணாமாக இருக்கிறது. காதல் விவகாரங்கள் தொடர்பில் மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசும் போது,
புத்தகக் கல்வி மூலம் மட்டுமன்றி, சமூகம் மற்றும் கலாச்சார விழுமியங்களைப் பிரதிபலிக்கும் கல்வியினால் மட்டும் தான் ஒரு ஒழுக்கத்துடன் கூடிய மாணவச் சமூகம் உருவாகும். ஒழுக்கம் இன்றி கல்வியில் உயர்வு பெற்றிருந்தால் அது எவருக்கும் பயனளிக்காது.
கல்வியைப் பெறும் போது அவதானத்துடன் கற்க வேண்டும். இல்லையேல் உங்களது குறிக்கோளை அடைய முடியாது கல்வி கற்கும் போது ஒரு குறிக்கோளுடன் கற்க வேண்டும். உங்களுடைய குறிக்கோளில் தடை ஏற்படுமாயின் அது பெற்றோரையே பாதிக்கும்.
அண்மையில் அவுஸ்திரேலியாவில் 5 மில்லியன் மாணவர்களில் வடமாகாணதைச் சேர்ந்த தமிழ் மாணவன் ரமேஷ் அதிக புள்ளிகளைப் பெற்று நாட்டிற்கும் இனத்திற்கும் பெருமை சேர்த்தான். அதே போல நீங்களும் கல்வியை சீராகப் பெறவேண்டும் என அரியநேத்திரன் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjs0.html\
வடமாகாணத்தில் முன் பள்ளிகளுக்கான நிர்வாக அலகுகள் உருவாக்கப்பட்டு செயல் வடிவம் பெற்றன: குருகுலராஜா
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 08:14.14 AM GMT ]
இந்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இங்கு விசேடமாக வடமாகாண கல்வி, பண்பாட்டு, அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் குருகுலராஜா, பா.உறுப்பினர் சி.சிறீதரன் வடமாகாண சபை உறுப்பினர்களான அரியரத்தினம், பசுபதிப்பிள்ளை, இராஜேந்திரம், வடாமகாண கல்விப் பணிப்பாளர் இராஜேந்திரம், வடமாகாண முன்பள்ளிகளுக்கான இணைப்பாளர் செல்வி ஜெயா தம்பையா, கிளிநொச்சியின் கண்டாவளை பளை கோட்டங்களின் கல்விப் பணிப்பாளர்கள், கரைச்சி பிரதேச சபையின் முன்பள்ளிகளுக்கான அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் கருத்துப் பகிர்கையில்,
இலங்கையிலேயே முன்பள்ளிகளுக்கான ஒரு நிர்வாக அலகு வடமாகாணத்தில்தான் திறம்பட செயற்பட ஆரம்பித்தது.
கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிர்வாக அலகுக்கு சிறந்த அனுபவமும் ஆளுமையும் உண்டு. விடுதலைப் புலிகளின் காலத்தில் இந்த நிர்வாக அமைப்பு சிறந்த முறையில் கட்டமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது.
ஆனால் இன்று முன்பள்ளிக் கட்டமைப்பு சிதைக்கப்பட்டு அது அழுத்தங்களுக்கு உள்ளாக்கடுவதாக உணரப்படுகின்றது. நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். முன்பள்ளிகளை இயக்குகின்ற நிர்வாக அலகு வடமாகாண சபையில் கல்வி அமைச்சின் கீழ்தான் உள்ளது.
முன்பள்ளிகளுக்கான ஊதியத்தை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.தற்போது முன்பள்ளிகளுக்கு இராணுவம் ஊதியம் கொடுக்கின்றது. பொது அமைப்புக்கள் ஊதியம் கொடுக்கின்றன. திருச்சபைகள் ஊதியம் கொடுக்கின்றன.
பெற்றோர்களும் நிதி உதவி செய்கின்றார்கள். யார் வேண்டுமானாலும் ஊதியம் கொடுக்கட்டும், ஆனால் முன்பள்ளிகளுக்கு அளுத்தங்களை பிரயோகிக்க முடியாது.
ஏனெனில் அதை நிர்வகிக்க வடமாகாண சபையில் ஒரு கல்வி அதிகாரி இருக்கின்றார். மாவட்டம் தோறும் கல்வி அதிகாரிகள் இணைப்பாளர்கள் இருக்கின்றார்கள். அவர்களே முன்பள்ளிகளை நிர்வகிக்கின்றவர்களாக இருப்பார்கள்.
பிள்ளைகளின் மனதில் வடுக்களை ஏற்படுத்தும் விதத்தில் இராணுவ அழுத்தம் தேவையற்றது. அதே முன்பள்ளி தொடர்பான விழாக்கள் தொடர்பாக முன்பள்ளிகளுக்கான குழுக்களே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமே தவிர, அழுத்தங்களுக்கு உட்படுதலை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
வடமாகாண சபையில் முன்பள்ளிகளுக்கான நியதிச்சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விரைவில் அவை சபை அங்கீகாரத்துக்கு விடப்பட்டு வெகுவிரைவில் சகல முன்பள்ளிகளும் வடமாகாணசபை அதிகாரத்துக்குள் கொண்டுவரப்படும் என்றார்.
இந்த விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் உரையாற்றுகையில்,
முன்பள்ளி ஆசிரியர்கள் படுகின்ற இடர்பாடுகளை நாம் உணர்கின்றோம். நீங்கள் போருக்குப்பின் பல்வேறுவகை அளுத்தங்களுக்குள் சிக்கி உள்ளீர்கள்.
அற்சொற்ப ஊதியத்துடனும் ஊதியம் இல்லாமலும் எமது குழந்தைகளின் எதிர்காலத்துக்காக நீங்கள் பாடுவதை நாம் நன்றி உணர்வோடு என்றும் பார்க்கின்றோம். ஆனால் நீங்கள் ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்டிருப்பதை பார்க்கும்போது சங்கடமாய் இருக்கின்றது.
நீங்கள் ஒரு கட்சியின் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளீர்கள். உங்களுக்கும் உங்கள் முன்பள்ளி பிள்ளைகளுக்கும் ஒரு கட்சி சார்பான சீருடை திணிக்கப்பட்டிருப்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
உண்மையில் முன்பள்ளிகள் மீது இந்த அரசாங்கத்துக்கு நேர்மையான அக்கறை இருக்குமானால் அது கல்வி நிர்வாகத்துக்குள் கொண்டுவரப்பட்டு அவர்களுக்கு ஊதியம் வழங்கியிருக்கலாம்.
ஆனால் அதை செய்யாமல் இராணுவக் கட்டமைப்புக்குள் நீங்கள் உள்வாங்கப்பட்டு உங்களுக்கு ஊதியம் வழங்கப்படுகின்றது.
இராணுவத்து சிவில் பாதுகாப்பு படைக்கட்மைப்புக்குள் போக மறுத்தவர்களுக்கு ஊதியம் இல்லை. என்றால் இங்கு ஒரு இராணுவமயப்படுத்தல் நிகழ்கின்றது என்பதை மிக சாதாரணமாக உணரமுடியும்.
இங்கு நூறு வீத இராணுவ ஆட்சி நடக்கின்றது. வடமாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரமோ காணி அதிகாரமோ வழங்கப்படவில்லை. எல்லாவற்றையும் பிடுங்கி எடுத்துவிட்டு இங்கு திட்ட இன அழிப்பை மேற்கொள்ள இராணுவத்தை அரசாங்கம் பயன்படுத்துகின்றது.
இராணுவம் ஒரு நாட்டை பாதுகாக்கின்ற வேலையை செய்யட்டும்.அதை விடுத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கின்றவேலைகளை முன்பள்ளி ஆசிரியர்கள் என்ன நிறத்தில் சேலை உடுத்த வேண்டும் என்ற வேலையை செய்ய தேவையில்லை.
இது இப்படியே தொடருமானால் இங்கு ஆட்சிகள் மாறமாற நீங்கள் சேலைகளின் நிறங்களையும் மாற்ற நிர்ப்பந்தமாகும். இது எந்த அளவு ஜனநாயக மீறல் என்பதை நீங்கள் உணரவேண்டும்.
உங்கள் கணவனை, பிள்ளைகளை, சகோதர, சகோதரிகளை கொன்றொழித்தவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள் உங்களில் உங்கள் பிள்ளைகளில் அக்கறையில் செயற்படுகின்றார்கள் என நினைக்கின்றீர்களா.
திட்டமிட்டு ஒரு இன அழிப்புக்குள் ஒவ்வொரு கட்டமைப்பையும் தள்ளிவருகின்றார்கள். இது காலப்போக்கில் பாரிய விளைவுளை ஏற்படுத்தும் நிச்சயமாக. தங்கள் தமிழ் தேசியத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் நீங்கள் கலந்துகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டதை நாம் பார்த்திருக்கின்றோம்.
அதனால் உங்களை ஒரு நாம் எதிரிகளாக நாம் கருதியது கிடையாது. ஏனெனில் உங்களுக்கு நிர்ப்பந்தம். ஆகையால் மதிப்பிற்குரிய ஆசிரியைகளே!
வெகுவிரைவில் நீங்கள் வடமாகாண சபையால் ஒரு கட்டமைக்கப்பட்ட நிர்வாக அலகுக்குள் உளவாங்கப்பட்டு, சுதந்திரமாக இயங்கும் பெறுவீர்கள் என நம்புகின்றேன்.
அதே வேளை நீங்கள் முன்வைத்த ஊதிய அதிகரிப்பு, மூத்த ஆசிரியர்களுக்கான ஊதிய அதிகரிப்பு, ஊதியம் வழங்கப்படாதவர்களுக்கு ஊதிய வழங்கல் என்பவற்றில் வடாமகாண சபையின் கல்வி அமைச்சு உங்களுக்கு நல்ல முடிவுகளை எடுக்கும் என நம்புகின்றேன் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjs2.html
மோசடியான முறையில் பிரித்தானிய வீசாவை பெற முயன்ற தம்பதி கைது
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 08:30.22 AM GMT ]
இவர்கள் பிரித்தானிய வீசாவை பெறுவதற்கான கடவுச்சீட்டில் உத்தியோகபூர்வமற்ற வகையில் மாற்றங்களை செய்தும் முறைகேடான முறையில் வீசாவுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தனர்.
பிரித்தானிய வீசா மற்றும் குடிவரவு பிரிவினரால் இவர்கள் கொழும்பு மோசடி பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் ஏற்கனவே வீசா பெற விண்ணப்பித்து அது நிராகரிக்கப்பட்டிருந்ததுடன், நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் கடவுச்சீட்டில் தூதரகத்தினால் பதிக்கப்பட்டிருந்த முத்திரையை அழித்துள்ளனர்.
அத்துடன் ஏற்கனவே வீசா நிராகரிக்கப்பட்டமை குறித்தும் அவர்கள் தமது விண்ணப்பங்களில் குறிப்பிட்டிருக்கவில்லை.
இவர்களில் வீசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பிரித்தானியாவுக்கு பயணம் செய்ய 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவர்கள் இலங்கை அதிகாரிகளின் விசாரணைகளையும் எதிர்நோக்கியுள்ளனர்.
பிரித்தானியாவின் வீசா விதிமுறைகள் மீறப்படுவதை அனுமதிக்க முடியாது என பிரித்தானிய தூதரகத்தின் வீசா மற்றும் குடிவரவு நடவடிக்கை முகாமையாளர் டொனி வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
போலியான ஆவணங்களையோ, மோசடியான ஆவணங்களையோ சமர்ப்பிக்க வேண்டாம் என வீசா விண்ணப்பதாரிகளுக்கு ஆலோசனை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjs4.html
நியதிச் சட்டம் தொடர்பில் ஆளுநரின் கோரிக்கை: கூட்டமைப்பின் நியதிச்சட்ட குழு ஆலோசனை
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 08:35.26 AM GMT ]
வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்டு ஆளுநரின் சிபாரிசுக்காக வழங்கப்பட்டிருந்த மூன்று நியதிச்சட்டங்களில் ஒரு நியதிச் சட்டத்திற்கான சிபாரிசு ஆளுநரிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது.
மற்றைய இரு நியதிச்சட்டங்களில் ஒன்றில் மாற்றங்கள் செய்யுமாறு ஆளுநர் கோரியிருக்கும் நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நியதிச்சட்ட குழு கூடவுள்ளது.
நிதி நியதிச்சட்டம், முத்திரைவரி கைமாற்றுச் சட்டம், முதலமைச்சர் நிதி சட்டம் ஆகிய மூன்று நியதிச்சட்டங்கள் வடமாகாணசபையினால் உருவாக்கப்பட்டு, ஆளுநரின் சிபாரிசு பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த சிபாரிசுகளை காலதாமதத்தின் பின்னர் நேற்றயதினம் மாகாண பிரதம செயலாளர் ஊடாக முதலமைச்சர் மற்றும், பேரவை தலைவர் ஆகியோருக்கு அளுநர் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் நிதி நியதிச் சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவருமாறு ஆளுநர், தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு கோரிக்கை விடுத்துள்ளதுடன், முத்திரைவரி கைமாற்றுச் சட்டத்திற்கு சிபாரிசு வழங்கியுள்ளார். மேலும் நிதி நியதிச் சட்டம் தொடர்பான சிபாரிசுகளை சில தினங்களில் வழங்குதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் ஆலோசிப்பதற்கும், நியதிச் சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவதற்கான தேவைகள் குறித்து ஆராய்வதற்குமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபையினால் உருவாக்கப்பட்ட நியதிச்சட்டக் குழு இன்றைய தினம் கூடி ஆராயவுள்ளது.
எதிர்வரும் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள, வடமாகாணசபை அமர்வில் மேலதிக விடயங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjs5.html
Geen opmerkingen:
Een reactie posten